' ஜயன் ஹப்பர் மார்க்கெட் ' இப்போது
பந்திங் நகரிலும் ஒரு கிளையை திறந்திருக்கிறது.
கடந்த 23.10.12ல் திறப்புவிழா கண்ட
அது சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரின் கவனத்தையும்
ஈட்டியிருப்பதுடன் அரங்கம் கொள்ளா காட்சிகளைப்
போல நிரம்பி வழிகிறது.
என்னவோ காணாததைக்
கண்டுவிட்டாற் போல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது
தினமும்.
இத்தனைக்கும்,
ஒரு' ஈக்கொன்சேவ்', ஒரு 'ஸ்டோர் ', ஒரு '
மெகா ' மற்றும் சில மாதங்கள்
முன்பு வரை,' டெஸ்கோ ' என
பல சூப்பர் மர்க்கெட்டுகளைக்
கொண்ட நகரமே
பந்திங்.
" அட புதுசுன்னா
ஒரு மோகம் இருக்கத்தானே செய்யும் ..." என்கிறார், சிம்பாங் மொரிப் வட்டாரத்தில்
வசிக்கும் திரு சிவ சாமி.
அவர் தொடர்ந்து சொன்ன கருத்து இது:
"எது எப்படி
இருந்தாலும், பல சில்லரைக் கடைகள் இதனால் பெருமளவில் பாதிக்கபடுவது என்னமோ உண்மைதான்.
பெயரே 'ஜயன்'. இவர்களோடு போட்டி இட வேண்டுமானால் அநியா விலைகளை தூக்கி வீசிவிட்டு
ஞாயமான விலைகளை அறிமுகப் படுத்தினால் மட்டுமே இனி முடியும். அதிக விலை கொடுத்து வாங்கி
மக்கள் கஷ்ட்டப்பட்ட நாட்கள் போய், வணிகர்கள் கவலைப்படும் நாளும் வந்துவிட்டது."
திறப்பு விழாவின் போது அப்படியொரு கூட்டம்.
வாங்குவதற்கு சில பொருட்களே இருந்தாலும் ' முதல் நாள் அப்படி என்னதான் இருக்கிறது ' எனும் ஆர்வத்தில் உள்ளே வலம் வருகிறார்கள் இவர்கள். இவர்களின் பின்னால் 'என்ன நடக்கிறது அங்கே?" என எட்டிப் பார்க்கும் இந்தியப் பெண்மணி ஒருவர்.
அதிகமான ஆட்கள். கார் நிறுத்தக் கூட இடம் இல்லா நிலை. பாதிக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையின் இரு மடங்கிலும் தங்களது வாகனங்களை நிறுத்தியிருந்தனர். ஆனால், கடமையில் இருந்த காவல் துறை அதிகாரிகள், தங்களது கையெழுத்துப் பயிற்சியில் 'சம்மன் களை" எழுதித் தள்ளிவிட்டனர்.
சீனர்களின் ' நாக நடனத்துடன்' சரியாக காலை மணி எட்டுக்கு அதிகாரபூர்வமாக திறப்பு விழா கண்டது 'ஜயன்..."
வாங்குவதற்கு சில பொருட்களே இருந்தாலும் ' முதல் நாள் அப்படி என்னதான் இருக்கிறது ' எனும் ஆர்வத்தில் உள்ளே வலம் வருகிறார்கள் இவர்கள். இவர்களின் பின்னால் 'என்ன நடக்கிறது அங்கே?" என எட்டிப் பார்க்கும் இந்தியப் பெண்மணி ஒருவர்.
அதிகமான ஆட்கள். கார் நிறுத்தக் கூட இடம் இல்லா நிலை. பாதிக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையின் இரு மடங்கிலும் தங்களது வாகனங்களை நிறுத்தியிருந்தனர். ஆனால், கடமையில் இருந்த காவல் துறை அதிகாரிகள், தங்களது கையெழுத்துப் பயிற்சியில் 'சம்மன் களை" எழுதித் தள்ளிவிட்டனர்.
No comments:
Post a Comment