தமிழ்த் திரை உலகம் பக்திப் படங்களை இப்போது அவ்வளவாக எடுப்பதில்லை என்றாலும், மொழிமாற்றுப் படங்களாக ஒரு சிலவற்றை நாம் தமிழில் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். அப்படி அன்மையில் ஆஸ்ட்ரோ அலைவரிசையில் இடம்பெற்ற படம் "ஸ்ரீராமராஜியம்".
இதிகாசமானாலும் நிஜமானாலும் நாம் அனைவரும் ராமாயணம் படித்திருப்போம். சீதையை வஞ்சகமாக கவர்ந்து சென்ற ராவணனை அனுமாரின் துணைகொண்டு வென்று மீட்டு வருவது என்பது பொதுவாக எல்லா ராமாயண புத்தகங்களிலும் இருக்கின்ற அடிப்படை கரு. ஆனால், பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து அயோத்திக்கு சென்று அரண்மனை ஏற்பது என்பதோடு பல ராமாயண புத்தகங்கள் நிறைவு பெற்றுவிடுகின்றன. அதைத்தொடர்ந்தும் ஒரு மாபெரும் அத்தியாயம் இருக்கின்றது. அதைச் சொல்வதுதான் இந்த கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் இ்மேஜஸ் மூலம் கண்ணைக்கவரும் வண்ணக்கலவைகளோடு எடுக்கப்பட்ட சாதனைப் படம்.
ராமரின் பட்டாபிஷேகத்தின் போது நடந்த குழப்பங்களோ, அதற்கு முன்னர் நடந்த சூழ்ச்சிகளோ அல்லது அவரின் வனவாசமோ போன்ற வழக்கமான ஒன்றாக இல்லாது, ஸ்ரீராமபிராணும் அன்னை சீதா தேவியும் தம்பதியராக திரும்பி வந்ததில் ஆரம்பிக்கிறது இந்த பாலகிருஷ்ணனும் நயந்தராவும் இணைந்து நடித்த "ஸ்ரீராமராஜியம்" திரைப்படம்.
யாரெனத் தெரியாது சிற்றப்பா லக்ஷ்மணனிடமும் தந்தை ஸ்ரீராமரிடமும் சண்டையிடும் லவ - குசா காட்சிகள் மனதைக் கவரும் வண்ணம் அமைந்திருந்தன.
வழக்கமாக எல்லோரும் சொல்வதைப் போலவே இல்லாமல் சற்று மாறுபட்டு படத்தை எடுத்து பெயர் வாங்கிக்கொள்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
ராமரைப் பிரிந்து வனத்தில் வாழும் சீதையாக நயந்தரா நன்றாகவே செய்திருந்தார். ஆச்சரியம் என்னவெனில் இத்திரையில் அவர் சீதையின் இலக்கனத்திற்கான அத்தனை குண நலன்களையும் மிக இயற்கையாக செய்திருந்தார் . பொதுவாழ்வின் கிசு கிசுக்களின் பாதிப்புகள் துளிகூட இல்லாது ஒரு அசத்தலான நடிப்பில் அனைவரையும் கவர்ந்து விட்டார்.
தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணனும் அன்றைய என் டி ஆர் அவர்களின் நடிப்பினைப் போன்று ஸ்ரீராமபிரானாக அற்புதமான் நடிப்பை வழங்கி இருந்தார். காட்டில் விட்டுவிட லக்ஷ்மணனைப் பணித்துவிட்டு, துயில் கொண்டிருக்கும் சீதையின் காலருகே முகம் பதித்து விடை கொடுக்கும் காட்சியில் மனதுக்கு இதமான ஒரு வலியினைக் கொடுத்தார். இது போல பல காட்சிகள் அவரின் சிறந்த நடிப்பை சொல்ல.
No comments:
Post a Comment