Friday, 19 October 2012

எதிர்பார்ப்பு...

இன்றைய உலகம் ரொம்பவும் கெட்டுப்போய்க் கிடக்கிறது. சில சமையங்களில் மனதில் இப்படிதான் எண்ணம் எழுகின்றது. என்ன செய்வது...? கண்முன்னே நடக்கும் செயல்களைப் பார்க்கும் போது வேறு என்னதான் சொல்வது?

யாரையாவது எதற்காகவாவது மிரட்டிப் பணிய வைப்பதை வழக்காமாகக்கொண்டுள்ளனர் பலர்.

சாதாரண வற்புறுத்தலில் தொடங்கும் இந்த குணம் பின்பு அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளாத போது " நீங்கள் எனக்கு இதைச் செய்தால்தான் நான் உங்களுக்கு அதைச்செய்வேன், இல்லையேல் என்னை மன்னித்துவிடுங்கள் " எனும் எதிர் பார்ப்பினை பதியவைக்கிறது.

தனிமரம் தோப்பாகாது... அன்றைய தொடர் இது. ஆனால், இன்றும் பல வழிகளில் அடுத்தவரைச் சார்ந்து, எதையும்  தனித்து  செயல் படுத்த முடியாத சூழ்நிலையில்   நாம் இருக்கிறோம். இதை பலர் தங்களின் சுய நலத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஆக, இன்றைய உலகில் நடக்கும் அனைத்தும் ஒரு பிரதிபலன் கருதியே நடக்கிறது. தனக்கு பயனின்றி செய்ய நேரிடும் எந்தச் செயல்களிலும், அவை நல்லவைகளாக இருந்தாலும்  கூட அதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. நாம் அவசரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும் ஒரு பிரம்மை இப்போது எல்லோரையும் பிடித்தாட்டுகிறது. இதில் அடுத்தவர்களுக்காக வீனே நேரத்தை செலவு செய்ய யாரும் முன்வருவதில்லை.

இது போல் சுயநலம் இல்லாத நேர்மையான நண்பர்களும் உறவினர்களும் அரிதாகிக்கொண்டு வருகின்றனர். அறிமுகமாகும் ஆயிரம் பேரில் புத்துணர்ச்சியுடன் நட்புக்கு இலக்கனம் வகுத்து நம்முடன் பழகுவோர் அத்தி பூத்தது போல் ஓரிருவர் எனும் காலகட்டத்தில் நிற்கிறோம் இப்போது.

No comments:

Post a Comment