உண்மைதான். ஆனால், இந்த தற்காலிக மாற்றம் தேவையான ஒன்று என்பதனாலேயே செஸ் விளையாட்டினை நான் இங்கே வலியுறுத்தி வருகிறேன்.
இளையோருக்கு தேவையான அறிவுக்கூர்மையும், சுறு சுறுப்பும், சமயோசித புத்தியும் ஆய்வலர்களால் நிறூபிக்கப்பட்டிருக்கிறது செஸ் விளையாடுவதானால் என்று. அது மட்டுமல்ல, இன்றைய சூழ்நிலையினில் பல அனைத்துலக பல்கலைக்கழகங்களும் செஸ் விளையாடும் மாணவர்களையே தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றன. அதுபோலவே செஸ் ஆடுபவர்களாக விளையாடும் மாணவர்களாக பார்த்தும் சேர்த்துக் கொள்கிறார்கள். அப்படி இருக்க நாமும் செஸ் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தருவதில் தவறில்லை அல்லவா...?
செஸ் விளையாட்டினப் பற்றியும், தற்போது சென்னையில் நடந்துவரும் அனைத்துலக சாம்பியன்ஷிப் போட்டி பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த மாதம் முழுவதும் தொடர்ந்து நம் பதிவுகளில் வந்துகொண்டிருக்கும்.
இதனால், இந்திய சதுரங்கத்தை செஸ் எனும் வடிவில் மற்றவர்கள் ஆதிக்கம் செய்வதை தவிர்க்க முடியாவிட்டாலும், குறைக்க முடியும்.
தமிழ்ப் பதிவுலகத்தில் செஸ் பதிவுகள் மிகவும் குறைவு. அந்த வெற்றிடத்தை இந்த இருவாரங்களுக்கு நாம் பூர்த்தி செய்வோம், வாருங்கள்...
No comments:
Post a Comment