டையபீட்டிஸ் என எல்லோருக்கும் நன்கு தெரிந்த பெயரில் உலா வரும் உயிர்கொல்லி நோயான நீரிழிவு மற்ற கால கட்டங்களில் இல்லா அசுர வேகத்தில் பலரையும் தாக்கி வருகின்றது தற்போது.
"நல்ல வேளை அது எனக்கு இல்லை..."
என நாம் சொல்ல முடியாத சூழ் நிலையில் இருக்கிறோம்.
இன்றில்லாவிடினும், நாளையே நம்மை அது தாக்கலாம். அதன் அறிகுறிகள் இன்று நமக்குத் தெரியாது போனாலும், மிகவிரைவில் நம்மை மறைந்திருந்து தாக்கும் வல்லமை அந்த நீரிழிவு நோயின் அறிகுறிகளுக்கு உண்டு.
மிக முக்கியமான அறிகுறிகளாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை மூன்று:
- போலியூரியா... அடிக்கடி சிறு நீர் கழிப்பது,
- போலிடிப்சியா... அடிக்கடி அதிகமாக தாகமெடுப்பது,
- போலிஃபாகியா...அடிக்கடி அதிகமாக பசியெடுப்பது....
இவை ஒன்று சேரும்போது நிச்சயமான நீரிழிவு அறிகுறிகளாக கணிக்கப்படுகிறது.
நமது வாழ்க்கை முறை சீராக இருந்தாலும், நமது முன்னோர் விட்டுச்செல்லும் சில சொத்துக்களில் நீரிழிவு நோயும் ஒன்று என இப்போது பலரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். அவர்களின் மரபணு வழி சிலர் பாதிக்கப்படுகிறார்கள்.
பொதுவாக மூன்று சாரார்களுக்கு இந்நோய் வர வாய்ப்புக்கள் அதிகம் உண்டு...
- பரம்பரையில் யாருக்காவது இருந்திருந்தால்
- உடல் பருமனாக இருப்போர்
- 45 வயதுக்கும் மேற்பட்டோர்
எனவே, நீரிழிவு நோயினைப் பற்றிய விழிப்பு நிலை நமக்கு மிக மிக அவசியம். புதிதாக ஏதும் சொல்வதை விட ஏற்கனவே வெளியிடப்பட்ட நீரிழிவு நோயினைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியதனை இங்கே சில விளம்பர அட்டைகளில் காண்போம்.... வாருங்கள்.

வைத்தியனுக்குக் கொடுப்பதை வணிகனுக்குக் கொடு என்பார்கள். அதுபோல சத்துள்ள, சரியான உணவுப் பழக்கங்களின் மூலம் நம் தற்காப்பினை வலுப்படுத்துவோம். விலை சற்று அதிகம் போனாலும், தரமான உணவுகளில் கவனம் செலுத்துவோம்.
முறையான உடற்பயிற்சி தினமும் தேவை. அதிக வேகம்தான் உடற்பயிற்ச்சி என்றில்லை, ஒரே அளவிலான சீரான நடையே பெரும் பயிற்சியாகும்.
No comments:
Post a Comment