இரண்டாம் நாளான இன்றும் விஸ்வ நாதன் ஆனந்துக்கும் கார்ல்சனுக்கும் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சமன் நிலை கண்டது.
|
நீங்களும் இவ்விளையாட்டுப் போட்டியினை நேரிடையாக இணையத்தில் கண்டு மகிழலாம். வலைத்தள முகவரி படத்தின் இடப்பக்கத்தில்.
நடப்புச் சாம்பியனான விஸ்வ நாதன் ஆனந்த் தனது போட்டியாளர் கார்ல்சனின் அதிரடி ஆட்டத்தினைப் பார்த்து இரண்டாம் சுற்றுப் போட்டியையும் இன்று சம நிலையில் முடித்துக்கொண்டார்.
புள்ளி நிலவரம் இப்போது தலா ஒரு புள்ளி என இருவருக்கும் சமமாக இருக்கின்றது.
கடந்த ஆட்டத்தின் போது கருப்புக் காய்களில் விளையாடிய ஆனந்த் இன்று வெள்ளைக் காய்களுடன் களத்தில் இறங்கினார். இருப்பினும் கார்ல்சன் தனது பத்தாவது ஆட்ட நகர்த்துதலின் போது காட்டிய தீவிரம், ஆனந்தை 'ஆட்டம் சமன் நிலை கண்டால் தப்பில்லை' எனும் எண்ணத்துக்கு இட்டுச் சென்று விட்டது.
தனது கேரோ கான் தற்காப்பு ஆட்டத்தின் போது சமன் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என குறிப்பிட்ட ஆனந்த், 'இல்லையேல் வேண்டாத விபரீதத்தில் மாட்டிக்கொள்ளும் நிலை வந்திருக்கும்' என தனது எச்சரிக்கையான ஆட்ட முடிவினைப் பற்றி பதிலலித்தார்.
முதல் சுற்று ஆட்டம் 15 நகர்த்துதல்கள் வரை சென்றிருக்க, இன்றைய டிரா ஆட்டம் 25 ஆட்ட நகர்த்துதலில் சமன் நிலை கண்டது.
கார்ல்சனின் ஆட்ட முறையை வடிவமைத்துள்ள அவரின் குழுவினர், எதிராளி சற்றே கவனக் குறைவுடன் ஆடினால், பல ஆட்டக்காய்களை பலியிடும் சூழ் நிலையை மனதில் நிறுத்தி விஸ்வநாதன் ஆனந்தை அசத்தினர்.
ஆனந்த், இந்த 'கேரோ கான்' முறைக்கான தகுந்த தற்காப்பினை உடனடியாக தேடியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
நாளை ஓய்வு நாள்.
No comments:
Post a Comment