Thursday, 14 June 2012

மெடிக்கல் இன்ஸுரன்ஸ். . .

கடலில் பயணம் போவோர் இப்போதெல்லாம் பாய்மரப் படகுகளை அவ்வளவாக விரும்புவதில்லை.

 நவீன எஞ்ஜின்கள் கொண்ட வேகமாகச்செல்லும் கப்பல்கள் வந்துவிட்டன. எனவே நேரத்தினையும் வசதிகளையும் கவனத்தில் வைத்து பெரிய கப்பல்களையே எல்லோரும் விரும்புகின்றனர்.

ஆனால், எவ்வளவு பெரிய கப்பல்களாக இருந்தாலும் அவற்றிலும் சிறு சிறு இயந்திரப் படகுகள் இணைக்கப்பட்டு வருவதை பார்த்திருப்போம். அதற்குக் காரணம், ஆபத்து அவசர காலங்களில் அந்த சிறு படகுகளின் உதவியுடன் பயணிகள் தப்பிச்செல்ல  அது சிறந்த வழியாகும்.

 நீங்கள் வாங்கும் இன்சுரன்ஸும்  இப்படியே வேலை செய்கிறது. உங்கள் அவசர தேவை அறிந்து உடனடியாக வந்து நிற்கிறது, உங்களை  திடீரென ஏற்படும் நிதிச்சுமையிலிருந்து பாதுகாக்க...

பார்வையற்ற ஒருவர் இன்னொரு பார்வை இல்லாதவருக்கு வழி காட்ட முடியாது....

வாழ்வில் கஷ்ட்டப்படுபவர் இன்னொருவரை அவர் படும் கஷ்ட்டத்திலிருந்து விடுவிக்க முடியாது....

துயரும் துக்கமும் கொள்ளும் ஒருவர் துக்கத்திலிருக்கும் மற்றவரை அதிலிருந்து மீட்க முடியாது....

இப்படி இன்னும் சிலரை,  சிலவற்றை எண்ணிப்பாருங்கள்....உங்களின் இன்சுரன்ஸ் பற்றிய சிந்தனை தெளிவடையும்.

No comments:

Post a Comment