"மறைந்திருந்தும் பார்க்கவில்லை, இதில் ஒரு மர்மமும் இல்லை..."
'க்லோஸ் அப்' எடுப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்தபோது நண்பர் ஒருவர் எடுத்தது இது. 'டிரையல் அன்ட் எரர்" எனும் தவறு செய்து அதில் இருந்து கற்றுக்கொள்ளுவதென்பது மனிதர் வாழ்வில் நிகழும் இயற்கையான ஒன்று.
ஆபத்து இல்லாத மிகச் சாதாரன சூழலில் இப்படி செய்யும் தவறுகளினால் பெரிய பாதிப்பாக எதுவும் நடந்துவிடுவதில்லை. ஆனால், இது எல்லாக் காலத்துக்கும் இது பொருந்தாது. தவறே செய்ய முடியாத, செய்யக்கூடாத சந்தர்ப்ப சூழ்நிலைகளும் நம் வழ்வில் வரும். அங்கே.... அந்த நேரம்.. இப்படி "டிரையல் அன்ட் எரர்" மூலம் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செயதால் சில நேரங்களில் பாதிப்பு மலை அளவு பெரிதாகிவிடும்.
இப்போது பலரும் பாராட்டும் 'இரட்டை புகைப்படங்களை" எடுக்க நான் செய்த தப்புகளும் தவறுகளும் சில நூறு வெள்ளிகளை விழுங்கிவிட்டன. பல நாள் முயற்சிக்குப் பின் ஒரு நாள் மூளையில் உதித்த யுக்தியே பின்னர் பலரும் விரும்பும் புகைப்படங்களை எடுக்கச் சொல்லித்தந்தது. அதுவும் அன்றைய காலத்தில் கணினிகள் இல்லை.
No comments:
Post a Comment