Thursday, 14 June 2012

நமது சிலைகளும் சிற்பங்களும். . .

ஜாக்கார்த்தா முதல் பெர்சியா வரை உயர்ந்த அகன்ற கோபுரங்கள், கோட்டைகள், கோயில்கள் என நமது முன்னோர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாக  நம் புகழ் பேசிக்கொண்டிருக்கின்றன.

பல பாழடைந்த மண்டபங்களாகிவிட்ட பின்னரும் அதன் சரித்திர சூழ்நிலைகளை அவை நினைவு படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
காப்பாரற்று கிடக்கும் நமது அக்கால சரித்திரச் சான்றுகள் வெளி நாடுகளில் மட்டுமல்ல சில நம் தமிழ் நாட்டிலும் உண்டு.

அன்மையில் ஒன்றைப் படித்தேன். 

'மதுரைக்குத் தீ வைத்த பின்னர், பெரியாற்றங்கரை வழியாக பதினான்கு நாட்கள் நடந்து வந்த கண்ணகி, கேரள எல்லையில் உள்ள ஓரிடத்தில் வந்து நின்றுதான் வானுலகுக்குச் சென்றார்" என்பது ஐதீகம். இந்த இடமே பின்னாளில் கண்ணகி கோட்டமாக ஆனது. ஆனால் பாருங்கள், 1976ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த இந்த இடம் பின்னர் அரசியல் சொதப்பிகளினால் கேரள எல்லைக்கு உட்பட்டதாகப் போய்விட்டதாம்.

தமிழ் நாட்டிலேயே இப்படி கதைகள் இருந்தால் மற்ற நாடுகளில் மாறி மாறி வரும் அரசாங்களினால் எவ்வளவு உண்மைகள் மறைபட்டிருக்கும் அல்லது மறைக்கப்பட்டிருக்கும்....?

அங்கொர்வாட், பொரபொடுர் போன்ற இடங்களில் உள்ள சிலைகளும் சிற்பங்களும் சொல்லும் கதைகள் இன்னும் நிறையவே உண்டு.

No comments:

Post a Comment