எனக்குத் தெரிந்த சாண்டியல்யன் நாவல்களின் பட்டியல் இவை:
- கடல் புறா ( மூன்று பாகங்கள் )
- யவன ராணி
- ராஜ பேரிகை
- மன்னன் மகள்
- கன்னி மாடம்
- ராஜ முத்திரை
- அலை அரசி
- அவனி சுந்தரி
- சந்திரமதி
- சித்ரஞ்சனை
- இலைய ராணி
- இந்திர குமரி
- ஜல தீபம் ( மூன்று பாகங்கள் )
- ஜல மோகினி
- கடல் புறா ( மூன்று பாகங்கள் )
- யவன ராணி
- ராஜ பேரிகை
- மன்னன் மகள்
- கன்னி மாடம்
- ராஜ முத்திரை
- அலை அரசி
- அவனி சுந்தரி
- சந்திரமதி
- சித்ரஞ்சனை
- இலைய ராணி
- இந்திர குமரி
- ஜல தீபம் ( மூன்று பாகங்கள் )
- ஜல மோகினி
- ஜீவ பூமி
- கடல் ராணி
- கடல் வேந்தன்
- மலை அரசி
- மலை வாசல்
- மஞ்சள் ஆறு
- மதுமலர்
- மோகன சிலை
- மூங்கில் கோட்டை
- நாக தீபம்
- நீள் விழி
- நீல மங்கை
- பல்லவ திலகம்
- பாண்டியன் பவனி
- ராணியின் கனவு
- ராஜ திலகம்
- ராஜயோகம்
- கடல் ராணி
- கடல் வேந்தன்
- மலை அரசி
- மலை வாசல்
- மஞ்சள் ஆறு
- மதுமலர்
- மோகன சிலை
- மூங்கில் கோட்டை
- நாக தீபம்
- நீள் விழி
- நீல மங்கை
- பல்லவ திலகம்
- பாண்டியன் பவனி
- ராணியின் கனவு
- ராஜ திலகம்
- ராஜயோகம்
- உதய பானு
- விஜயமகாதேவி ( மூன்று பாகங்கள் )
- விலை ராணி
- விஜயமகாதேவி ( மூன்று பாகங்கள் )
- விலை ராணி
இவற்றில் பலவற்றை குமுதத்தில் 1972 முதல் தொடர்கதைகளாக வெளிவரும்போதே படித்து விட்ட ஞாபகம். இரண்டு மூன்று முறை படித்த நாவல்களாக கடல் புறா, ராஜ திலகம், ஜல தீபம் போன்றவற்றைச் சொல்லலாம்.
சரித்திர கால சூழ் நிலைகளின் பின்னனியில் ஒன்றிரண்டு நிஜ கதாபாத்திரங்களோடு சுவை கூட்டும் வேறு சிலரையும் கற்பனையில் கொண்டுவந்து தான் படைக்கும் நாவல்களுக்கு அழகு சேர்ப்பது இவரது தனித்தன்மை. கடல் புறா என்னும் நாவலில் கடாரத்தினைப் பற்றியும் எழுதி இருந்தார். கடாரம் என்பது இப்போதிருக்கும் நமது 'கெடா' மாநிலம் ஆகும்.
சில நாவல்கள் தொடர்கதையாக வந்ததினாலோ என்னவோ ஒரு அத்தியாயத்திலிருந்து இன்னொரு அத்தியாயத்திற்கு போகும் போது முன் நடந்த ஒரு சிறு குறிப்பு மீண்டும் வரும். வாராவாரம் படிக்கும் குமுதம் வாசகர்களுக்காக இப்படி நடந்த கதையின் குறிப்பு தரப்பட்டது என நினைக்கிறேன்.
இவரின் வீர வசனங்கள் மட்டுமல்ல, காதல் வசனங்களும் உயிர் பெற்று வரும் நம் கண்முன்.
இவரின் படைப்புக்கள் இலக்கியமா இல்லையா என எதிர்தரப்பு எழுத்தாளர்களில் ஓரிருவர் கேள்விகள் கேட்டனர் அன்று. சரித்திர நாவல்களை இலக்கியமில்லை என்று சொன்னால், பண்டைய நூல்களில் பலவற்றை இலக்கியமாக கொள்ள முடியாதே என பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, 'மகா மேதைகள்' என தங்களை நினைத்திருந்தோர் வாய் மூடி மௌனிகள் ஆயினர். சுமார் 45 ஆண்டுகள் ஆகியும் அவரது பெயர் இன்னும் பிரபலமான ஒன்றாகத் திகழ்வதிலிருந்து அவரின் படைப்புக்கள் மக்களின் மனதில் நிறந்தர இடம் பிடித்து விட்டதை சொல்லியா தெரிய வேண்டும்....??
காதலுக்கு ஒரு மஞ்சளழகியும் வீரத்திற்கு ஒரு அகுதாவும் இன்னும் என் கண்முன்னே நிற்கிறார்கள்.
காதலுக்கு ஒரு மஞ்சளழகியும் வீரத்திற்கு ஒரு அகுதாவும் இன்னும் என் கண்முன்னே நிற்கிறார்கள்.