Tuesday, 4 February 2014

சொல்வது போல நடப்போம்...

நாம் போற்றி மதிக்கும் விசயங்கள் வேறு, நாம் செய்யும் காரியங்கள் வேறு என இருக்கும் வரையில் சந்தோசம் என்பது நம்மை விட்டு சற்று விலகித்தான்  நிற்கும்.

சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக இருப்போர் நம்மிடையே பலர் உண்டு. உத்தமர்கள் போலவும், செயல் திட்ட வாதிகள் போலவும், அனைத்தையும் தாங்கள் சுலபமாக செய்து வீழ்த்திடும் திறன் கொண்டோர் போலவும் நம் முன் நடந்துகொள்வார்கள் பலர். ஆனால், அவர்களது செயல்களை கூர்ந்து நோக்கினால், " அடப் பூ... இவ்வளவுதானா இந்த ஆள்..?" என்று நம் மனதில் தோன்றும்படி இருக்கும்.

பரிசுத்த "சிரிம்" முத்திரைப்படி வாழ்வினில் சொல்வது போல் செய்பவர்களும் செய்வது போல் சொல்பவர்களுமே நல்ல மனிதர்களாக போற்றப்படுகின்றனர். அவர்களிடமே உண்மை மகிழ்ச்சி குடிகொண்டிருக்கிறது.

Sunday, 2 February 2014

எங்களின் பக்கத்து வீட்டுச் செல்லம்...







ஆருயிர் நண்பர் செல்வம் நினைவலைகள்...



ஆருயிர் நண்பர் செல்வம் மறைந்து இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் அந்த பசுமையான நினைவுகள் மனதில் ஒருவித விரக்தியை தருகின்றன.
அவர் இறைவனடி சேர்ந்தது பிப்ரவரியில் 3ம் நாள்,
அவரது மகன் குமரேசனின் பிறந்த நாள் 4ம் நாள்,
அவரின் நெருங்கிய நண்பனான என்னுடைய பிறந்த நாள் 5ம் நாள்.
இப்படி இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் தொடர்   நிகழ்வுகள் அடுத்த சில தினங்களில் வருகின்றன.

சில பழைய பாடல்கள்...





Thursday, 30 January 2014

31.9.2009 நாகேஷ் நினைவு நாள்.


தமிழ்த்திரையில் நகைச்சுவை என வரும்போது நமக்கு உடனே நினைவுக்கு வருபவர், திரு நாகேஷ் அவர்கள். நாகேஷ், ஒரு அலாதியான நடிகர்... அவரின் நடிப்பு பல படங்களில் பிரகாசித்தது. "அன்பே வா", "எங்க வீட்டு பிள்ளை" போன்றவை இன்னும் பசுமையாக நினைவில் நிற்கின்றன... அதே போல, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் படங்களில் பிரமாதப்படுத்தினார். சோ, தேங்காய் சீனிவாசன் மற்றும் தங்கவேலு போன்ற சக நகைச்சுவைக் கலைஞர்களுடன் இணைந்த படங்கள் அவரின் நடிப்பினை மக்கள் மனங்களில் என்றென்றும் நிறுத்தி வைக்கும்.

நாளை அவரின் நினைவு நாள். நம்மை சிரிக்க வைத்த அந்த சாதனையாளரை நினைத்துப்பார்க்கிறேன், முகத்தில் ஒரு புன்னகை ததும்புகின்றது...

Wednesday, 22 January 2014

தேவை, துணிச்சலும் தன்னம்பிக்கையும்...

தன்னம்பிக்கை பல சாதனைகளைச் செய்ய உந்துதல் சக்தியைத் தரவல்லது.

பல்லாயிரம் பேர் இருந்தாலும் யாரொருவர் ஓடி ஒளியாது, மற்றவர் முன்னால் துணிச்சலுடன் வந்து தான் நினைக்கும் கருத்தை முன்வைக்கிறாரோ, அவர் அனைவராலும் வரவேற்கப்படுவார். துணிச்சல்தான் வெற்றியின் முதல் படி. அந்த துணிச்சலுக்கு  தேவை, தன்னம்பிக்கை.

 நம்மைவிட மற்றவரிடத்தில் நல்ல செயல்திட்டங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை தன்னுள்ளேயே ஒருவர் வைத்திருப்பாரானால் அதனால் அவருக்கும், மற்றோருக்கும் என்ன பயன்?

படிக்கத் தெரியாதோருக்கு கீதையும் ஒரு தலையணை மட்டுமே என்பதற்கிணங்க, வெளிக்கொணர முடியா சிறப்புத்திட்டங்கள் எதுவும் நன்மை பயக்கப்போவதில்லை.

"எனக்கு என்னவோ, ஒருவித கூச்சம் உடனிருந்து என் செயல்களைத் தடுக்கின்றது...அதனால் மற்றவர் முன்வர தயங்குகிறேன். அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ...? " என்பது, நாம் எங்கும் கேட்கும் பலரின் தேசிய கீதம். " எனக்கு வெட்கமா இருக்கிறது, என்னால் முடியாது..." என்பதைச் சொல்ல யாரும் வெட்கப்படுவதில்லை.

இது தேவையற்ற வீண் பயம். அடுத்தவர் எதைச் சொன்னால் நமக்கென்ன? நாம் வெற்றிபெற்றால் அவர்களே நம்மை புகழவும் செய்வார்கள் எனத் தெரியாதா உங்களுக்கு?

அவர்களைப் போல நீங்களுமா?

தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருவோரிடம் இசைஞானி இளையராஜா  ஒன்றைச் சொல்வாராம்.
"மனோ போல பாடுவதற்கு மனோ இருக்கிறார்.
எஸ்.பி.பாலா போல பாட எஸ்.பி.பாலா இருக்கிறார். அதனால் அவர்களைப்போல் பாட நீங்கள் எதற்கு? "

இதை தெரிந்துகொண்டோர்,  இனி அவரிடம் அப்படி ஒரு அறிமுகத்தைச் சொல்வார்களா...?
" ஐயா, நான் என்னைப்போலத்தான் பாடுவேன் " என்றல்லவா சொல்லி வாய்ப்புக்களை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்குத்தானே வாய்ப்புக்களும் வந்து சேரும்.

எஸ்.பி.பாலாவின் தியாகத்தையும் கடுமையான பயிற்சியினையும், அவர் மேற்கொள்ளும் கட்டுப்பாடுகளையும் கிரகித்துக்கொள்ளுங்கள்.
மனோவின் முயற்ச்சிகளை கவனியுங்கள். அவரின் மேடை நாகரிகத்தையும், இன்முகத்தையும் கவனியுங்கள். இருவரின் குரல் வளத்தை முன்னுதாரணமாகக்கொள்ளுங்கள். இவை தவறல்ல. ஆனால், உங்களின் நிஜத்திறமையினை வெளிப்படுத்துங்கள். இதனால், நீங்கள் வெற்றி பெரும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

இதன் அடிப்படையில்தான், வாழ்க்கையில் வெற்றிபெற்ற மற்றவர்களின் நற்குணங்கள ஏற்றுக்கொண்டு, அவர்களின் யுக்திகளைப் பயன்படுத்தி நம் வாழ்வில் முன்னேற நான் எடுக்கும் முயற்சிகளும்.

வெற்றிபெற்றோர் செயல் திட்டங்களை காப்பியடிப்பதில் தப்போ, தவறோ இல்லை. தகுந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளின் படி சீர்திருத்தப்பட்ட செயல்திட்டங்களாயின் அதிக பலனுண்டு என்பதை தெரிந்துகொள்வது நல்லது.