தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருவோரிடம் இசைஞானி இளையராஜா ஒன்றைச் சொல்வாராம்.
"மனோ போல பாடுவதற்கு மனோ இருக்கிறார்.
எஸ்.பி.பாலா போல பாட எஸ்.பி.பாலா இருக்கிறார். அதனால் அவர்களைப்போல் பாட நீங்கள் எதற்கு? "
இதை தெரிந்துகொண்டோர், இனி அவரிடம் அப்படி ஒரு அறிமுகத்தைச் சொல்வார்களா...?
" ஐயா, நான் என்னைப்போலத்தான் பாடுவேன் " என்றல்லவா சொல்லி வாய்ப்புக்களை எதிர்பார்ப்பார்கள். இவர்களுக்குத்தானே வாய்ப்புக்களும் வந்து சேரும்.
எஸ்.பி.பாலாவின் தியாகத்தையும் கடுமையான பயிற்சியினையும், அவர் மேற்கொள்ளும் கட்டுப்பாடுகளையும் கிரகித்துக்கொள்ளுங்கள்.
மனோவின் முயற்ச்சிகளை கவனியுங்கள். அவரின் மேடை நாகரிகத்தையும், இன்முகத்தையும் கவனியுங்கள். இருவரின் குரல் வளத்தை முன்னுதாரணமாகக்கொள்ளுங்கள். இவை தவறல்ல. ஆனால், உங்களின் நிஜத்திறமையினை வெளிப்படுத்துங்கள். இதனால், நீங்கள் வெற்றி பெரும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
இதன் அடிப்படையில்தான், வாழ்க்கையில் வெற்றிபெற்ற மற்றவர்களின் நற்குணங்கள ஏற்றுக்கொண்டு, அவர்களின் யுக்திகளைப் பயன்படுத்தி நம் வாழ்வில் முன்னேற நான் எடுக்கும் முயற்சிகளும்.
வெற்றிபெற்றோர் செயல் திட்டங்களை காப்பியடிப்பதில் தப்போ, தவறோ இல்லை. தகுந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளின் படி சீர்திருத்தப்பட்ட செயல்திட்டங்களாயின் அதிக பலனுண்டு என்பதை தெரிந்துகொள்வது நல்லது.

No comments:
Post a Comment