தமிழ்த்திரையில் நகைச்சுவை என வரும்போது நமக்கு உடனே நினைவுக்கு வருபவர், திரு நாகேஷ் அவர்கள். நாகேஷ், ஒரு அலாதியான நடிகர்... அவரின் நடிப்பு பல படங்களில் பிரகாசித்தது. "அன்பே வா", "எங்க வீட்டு பிள்ளை" போன்றவை இன்னும் பசுமையாக நினைவில் நிற்கின்றன... அதே போல, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் படங்களில் பிரமாதப்படுத்தினார். சோ, தேங்காய் சீனிவாசன் மற்றும் தங்கவேலு போன்ற சக நகைச்சுவைக் கலைஞர்களுடன் இணைந்த படங்கள் அவரின் நடிப்பினை மக்கள் மனங்களில் என்றென்றும் நிறுத்தி வைக்கும்.
நாளை அவரின் நினைவு நாள். நம்மை சிரிக்க வைத்த அந்த சாதனையாளரை நினைத்துப்பார்க்கிறேன், முகத்தில் ஒரு புன்னகை ததும்புகின்றது...
No comments:
Post a Comment