Showing posts with label special photos. Show all posts
Showing posts with label special photos. Show all posts

Saturday, 1 December 2012

இருதய நோய் . . .

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நான் இருதய நோயால் பாதிக்கப் பட்டு, "பை பாஸ்" அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அன்றிலிருந்து பலவகையான அனுபவங்கள் எனக்கு. என்னைத் தெரிந்த பலரும் என்னுடைய பதிவுகளைப் படித்துவிட்டு கேட்கும் கேள்வி, " நான் ஏன் இன்னும் இருதய நோய் பற்றி எழுதவில்லை" என்பது. "உங்களின் அனுபவங்களை மற்றவரின் நலனுக்காக சொல்லலாமே... என்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் இந்நோய் பற்றி பலருக்கும் சொல்லியபடி தான் இருக்கிறேன். ஏனோ இன்றுதான் எழுதத் தோன்றியது. 

ஆயினும் இருதய நோயின் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதனால், அறிகுறிகள் தோன்றிய உடனேயே ஒரு மருத்துவரைச் சந்தித்து இந்நோய் பற்றி எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும்.


நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது :
- சரியான உணவுப் பழக்கம்
- சீரான உடற்பயிற்சி
- சீரான இரத்த அழுத்தம்
- அளவுக்கதிகம் போகாத கொழுப்புச் சத்து
- சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்வது
- இடுப்பளவு : ஆண்களுக்கு 35 அங்குலமும், பெண்களுக்கு 31 அங்குலமும் இருக்கவேண்டும்

நாம் தவிர்க்க வேண்டியது :
- புகை பிடித்தல்
- மது அருந்துதல்
- அதிக அளவில் இறைச்சியை உட்கொள்ளல்
- எண்ணெய் பலகாரங்கள்
- மன அழுத்தம்
- சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வது

கவனிக்க வேண்டிய அறிகுறிகள் :
- மூச்சுத் திணறல்
- தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி
- நடக்கும்போதும், ஓடும் போதும், உயரமானப் பகுதிகளில் ஏறும்போதும்
தோன்றும்   மார்பு வலி
- தொடர்ந்து சில நிமிடங்களுக்கு மார்பில் படபடப்பு.
- கேஸ்ட்ரிக் எனப்படும் வாய்வுத்தொல்லை போல சில நேரங்களில் தோன்றும்.

இந்தியர்களுக்கு மற்ற இனத்தவரைக் காட்டிலும் பத்து சத விகிதம் அதிகமாகவே இந்த இருத நோய் தாக்குகிறது என்பதை கவனத்தில் நிறுத்துவது நல்லது. 


அறிகுறிகளை முறையான மருத்துவ சிகிச்சையில்   கண்டறிந்து  தீர்க்கப்படாவிடில், அவை கீழுள்ள நிலைகளுக்கு இட்டுச்செல்லும்:
 - இருதயத் தசை அதீத வளர்ச்சி ( LVH )
 - இருதயக் குழாயில் கால்சியம் சேர்தல் ( CORONARY CALCIFICATION  )
 - கழுத்து இரத்தக்குழாயில் அடைப்பு ( CAROTID STENOSIS  )
 - இரத்தக் குழாயில் வீக்கம் மற்றும் செல் செயல் இழந்து போவது.

மேல் சொல்லப்பட்ட நிலை நீடிக்கும் போது அதன் தொடர் விளைவுகள் இப்படி இருக்கும் :
- பக்கவாதம்
- கால் இரத்தக்குழாய் அடைப்பு
- நெஞ்சுவலி ( ANGINA )  -> மாரடைப்பு ( MI )
- திடீர் மரணம் (  SUDDEN DEATH )
- இருதய தசை வளர்ச்சி நிலை ( HEART FAILURE  )


வருமுன் காக்கும் திட்டம் எவ்வளவு நல்லதோ அதே போல ஆபத்து அவசரத்துக்கென ஒரு திட்டம் இருப்பதும் அவசியம் :
-   வீட்டில் உள்ளோர் மாரடைப்புக்கான அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
-   முதல் உதவி செய்ய பழகியிருக்க வேண்டும்
-   யாரை அவசரத்துக்கு அழைப்பது, அவர்களின் தொலைபேசி, கைபேசி எண்கள் யாவை என தெரிந்து வைத்திருக்க வேண்டும்
-   பக்கத்தில் இருக்கும் மருத்துவமனை எண்கள் கைவசம் இருத்தல் நலம்
-   நோயாளியின் விவரங்கள், மருந்துகள், அலர்ஜிகள் கொண்ட ஃபைல் அவசரத்தின் போது நோயாளியைக் கவனிக்கும் மருத்துவரின் உடனடி சிகிச்சை முறைகளுக்கு உதவும்
-   மெடிக்கல் இன்ஸுரன்ஸ் விவரங்கள் இருந்தால் நல்லது அல்லது இது போன்ற அவசரத்துக்கென வேண்டிய சேமிப்பு திடீர் நிதிச் சுமையை குறைக்கும்
-   பக்கத்து வீட்டினருடன் நட்பாக இருப்பது இதுபோன்ற சவாலான நேரங்களில் பேருதவியாக இருக்கும்

Wednesday, 3 August 2011

சிறுவர்களின் படங்கள் . . .


சிறு பிள்ளைகளையும், குழந்தைகளையும் புகைப்படமெடுப்பதில் அலாதி ஆர்வம் எனக்கு. நாம் கொடுக்கும் உத்தரவுகளை அப்படியே ஏற்று அதன் படி நாம் படமெடுக்க உதவுவார்கள்.















வருக வருக... தங்கள் வரவு நல்வரவாகுக...

அன்புடையீர் வணக்கம்

தங்கள் வருகையால் மகிழ்கிறேன். இது என்னுடைய புது முயற்சி.

இரட்டைவேட நடிப்பினைப் போன்று புகைப்படங்கள் எடுக்க முடியுமா என்ற கேள்வியில் எழுந்ததே இப்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சில படங்கள்.

புகைப்படங்களின் பதிவாக என்னுடைய இந்த "புளொக்கர்" தளம் இன்று தொடங்குகிறது.

அவ்வப்போது மனதில் தோன்றும் எண்ணங்களையும் பதிவிட எண்ணம் கொண்டுள்ளேன். குறைகள் காணின் "கண்டனக் கணைகளாக" அல்லாது அன்புடன் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். தொடர்புக்கு:    rajpow2011@gmail.com