மண்ணை பொன்னாக்கி உலகிலுள்ளோர் அனைவருக்கும் உணவு படைக்கும் விவசாயிகள் பற்றி நாளிதழ்களில் படிக்கும் போது மனது வருந்துகிறது.
அவர்கள் நலம் பேனப்படுவதில்லையா?
உலகம் தழைக்க உணவிடும் அவர்கள் பசி பட்டினியில் போராடுவதும் பல காரணங்களுக்காக அவர்களில் பலர் தற்கொலை செய்துகொள்வதும் படிக்க ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் இது வெகு சாதாரணமாக நடைபெரும் ஒன்றுதான் என்றாலும் கடல் கடந்து நம் பார்வைக்கு இதுபோன்ற தகவல்கள் வந்தடையும் போது மனது கணக்கிறது.
ஆறுகள் வெற்றிடங்களாக காணும் காட்சியை தினமும் தொலைக்காட்சியில் காண்கிறோம். அவர்களின் அண்டை மாநிலம் அவர்ளுக்கு சாக்கு போக்கு சொல்லி சாமர்த்தியமாக அணையை உயர்த்திக்கொள்வதும், மத்திய அரசு அதைக் கண்டும் காணாதது போல் மாற்றாந்தாய் மகவாக தமிழ்நாட்டை பார்ப்பதும் ஏற்றுக்கொள்ளகூடியதல்ல.
ஆனால் தமிழ் நாட்டிலும் மழைக்கு ஒரு குறையும் இல்லையே. தினமும் பெய்யும் மழை நீரை சேகரித்து, அது கடலில் மீண்டும் சென்றடைவதை தடுத்து, மறு பயனீட்டுக்கு வழிசெய்யும் சிந்தனைகள் ஏன் மேலெழுவதில்லை.
நமது தலைநகராம் கோலாலம்பூரில் அதிகமாக மழைபெய்யும் போது 'ஸ்மார்ட் டன்னல்' என்னும் தலைநகர் நோக்கி வரும் சாலையை பெரிய கால்வாயாக மாற்றி அங்கு ஏற்படும் வெள்ளத்தினை ஒதுக்குப்புறமான இடத்துக்கு திசை திருப்பும் யுக்தியை நாம் கொண்டிருக்கிறோம்.
இதைப்போல அல்லது இதைவிட இன்னும் சிறப்பாக ஏன் நமது தமிழ் நாட்டு அரசும் வீணாகும் மழை நீரை பயன் தரும் வழிகளில் உபயோகத்துக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது....
சந்திர மண்டலத்துக்கு விஞ்ஞானிகளை அனுப்பும் தமிழர்கள் இதற்கொரு வழியை கண்டுபிடித்தே ஆக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்ததாகக் காணோம்.
"ஐயா சாமி ..." என கையேந்துவதைவிட மழை நீரை உபயோகத்துக்கு திசை திருப்பும் கண்டுபிடிப்பு நமது வெற்றிக்கு அஸ்திவாரம் போடும்

No comments:
Post a Comment