Thursday, 11 May 2017

மலேசிய பிரம்மகுமாரிகள் மையம்...




கடந்த வாரம் நடைபெற்று முடிந்த 
மலேசிய பிரம்மகுமாரிகள் அமைப்பின் 
சந்திப்பின் இறுதியில் 
தேசிய ஒருங்கிணைப்பாளர் 
சகோதரர் இலட்சுமணன் அவர்களுடன் 
விசாபென், சுலோச்சனாபென் 
மற்றும் சில இளம் நடனக் கலைஞர்கள் 
எடுத்துக் கொண்ட படம்.

- எனது முகநூலில் மே 5 இடம்பெற்ற  பதிவிது.

சராசரி மனிதனின் ஆன்மிக கேள்விகள்...

மனிதர்கள் ஏன் பிறக்கிறார்கள்?
பின் ஏன் சுவர்க்க நகரங்களை அடைகிறார்கள்?
எந்த பாவம் தலை கேட்கும்?
எந்த புண்ணியம் தலை காக்கும்?
இறக்கும்வரை யாரை நினைக்க
நற்கதி பெறலாம் ?
பாவ நிவர்த்திக்கு என்னென்ன செய்வது?
நல்ல இறப்புக்கு செய்யவேண்டுவது எவை ?

ஆன்மிக பரவசத்தில் திளைப்போருக்கு இக்கேள்விகளுக்கான பதில்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையேல், அவர்கள் வேடதாரிகளாவர். தெரிந்தது போல நடிப்பவர்கள்.


சரி பதில்கள் எங்கே கிடைக்கும்..?
-  சிறுதெய்வ வழிபாட்டை தவிர்ப்பவர்களிடம்.
-  மானுடர்கள் தெய்வங்களாக மாட்டார்கள் என நம்புவர்களிடம்.
-  வேத நூல்களை தேடிப்போய் கற்பவர்களிடம்.

( - எனது முகநூல் பதிவிது  )

எதுவுமே விளங்காதவரைதான்...

ஒரு விசயம் மட்டும் உண்மை. பலரும் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு பல சோதிடர்கள் குளிர் காய்கிறார்கள்.

ஒரு கதை...
அதிகாலையில் இரு காக்கைகளை கண்டால் கைமேல் பலன் என ஒரு அரண்மனை சோதிடர் சொல்ல, அதனை உத்தரவாக பிறப்பித்தார் அரசர்.
ஒரு நாள் காலை, அரண்மனைக்கு அருகாமையில் இரு காக்கைகளை ஒரு சேவகன் கண்டான். மன்னரிடம் தெரிவித்தால் தமக்கு ஏதாவது பணமுடிப்பு கிடைக்கும் என்ற ஆசையில் ஓடிவந்து தெரிவித்தான்.

Image may contain: bird and sky

மன்னர் அந்த காக்கைகளை  பார்க்க கிளம்பினார். அங்கு போய் பார்க்கும்போது, ஒன்று மட்டுமே கிளையில் உட்கார்ந்திருந்தது. மன்னருக்கு கோபம். சேவகனை சவுக்கால் அடிக்க ஆணையிட்டார். இதனைக் கேட்ட சேவகன் சிரிக்கத்தொடங்கிவிட்டான். அனைவருக்கும் ஆச்சரியம்.

அவனது பதிலை எதிர்பார்த்து அரசன் திரும்ப,
" மன்னா, இன்று காலை நான் மட்டுமே அந்த இரண்டு காக்கைகளை கண்டேன். உடனே பலன் கிடைத்துவிட்டது...." என வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

அரசருக்கு விளங்கிவிட்டது. தண்டனையை நிறுத்தினார். உடனே அவசரமாக அரண்மனைக்கு திரும்பினார், சோதிடனுக்கு சவுக்கடி வழங்க....

எதுவுமே, விளங்காதவரைதான்.
விளங்கிடும்போது, குளிர்காய்ந்தவர் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில்....

- என்னுடைய முகநூல் பதிவிது.

Tuesday, 25 April 2017

ஊரைச் சுற்றிவந்த உருளைக்கிழங்கு வண்டியின் கதை!

விகடன் ஒன்லைனில் படித்ததில் பிடித்தது இது....
-----------------------------------------------------------------------

மீசைக்கார மன்னாரு கடும் கோபமாக இருந்தார். எல்லா கமிஷன் மண்டிகளின் வண்டிகளும் வந்து கொண்டிருந்தன. இவரது லாரி மட்டும் வந்த பாட்டைக் காணோம். ‘வாரா வாரம் இவனுக்கு இதே வேலையாப் போச்சு’ என்று கொஞ்சம் சத்தமாகவே அலுத்துக் கொண்டார்.

”என்ன மன்னாரு.. ஒங்க மிஸ்டர் கே இன்னைக்கும் சோதிக்கறானா?” - பக்கத்து மண்டி பரமசிவம்தான் கேட்டது.

“ஆமா.. நீ உன் வேலையப் பாருய்யா...”

”என்கிட்ட கோச்சுட்டு என்ன பண்ண? அவனை வேலைக்குச் சேத்தப்பவே சொன்னேன். கொஞ்சம் ஓவராப் பேசற பயலா இருக்கான்னு. ரெண்டு வாரமா லேட்டா வந்தான் சரி. இன்னமும் அப்டின்னா என்ன அர்த்தம்? இந்தா இருக்கற உப்பிலிபாளையத்துல இருந்து வர ஒரு மணிநேரம் பண்ணுவானாக்கும்?  கொஞ்சம் அதட்டி வை”

மன்னாரு திரும்பிப் பார்த்தார். பரமசிவம் மண்டியில் உருளைக்கிழங்கு லோடு இறங்கி, பத்து பேர் ஆளுக்கொரு மூட்டையைப் பிரித்து சைஸுக்கு ஏற்ற வகைகளாகப் பிரிக்க ஆரம்பித்திருந்தனர்.

”உன் வண்டி வந்து வேலைய ஆரம்பிச்சுட்டீல்ல? போய் அதப்பாரு. அவன் வந்தா நான் கேட்டுக்கறேன்.. போ போ...” - என்றார் மன்னாரு. என்ன இருந்தாலும் மிஸ்டர் K மேல் அவருக்கு ஒரு தனி கரிசனம். அவன் வேலைக்கு சேர்ந்து ஒருமாதம்தான் ஆகிறது. கொஞ்சம் கோக்குமாக்கு செய்தாலும், எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் வைத்திருப்பான்.
மிஸ்டர் K



சரியாக முக்கால் மணிநேரம் கழித்து உருளைக்கிழங்கு லோடுடன் மினி லாரியை ஓட்டிக் கொண்டு வந்தான் மிஸ்டர் K. வண்டியை திருப்பி நிறுத்திவிட்டு இறங்கினான். மன்னார் கோபமாக வந்தவர், அவன் இறங்கிய வேகத்தைப் பார்த்து அப்புறம் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

மிஸ்டர் K பெரிய தார்ப்பாயை விரித்து, லோடை இறக்கச் சொன்னான். மூட்டை போடப்பட்டிருக்கவில்லை. மினி லாரியிலிருந்து கொஞ்சம் இறக்கி, தார்ப்பாயை மாற்றி, அடுத்த தார்ப்பாயை விரித்து அதில் கொஞ்சம் கொட்டி இப்படி மினி லாரியைக் காலியாக்கினார்கள். பிறகு வண்டியை தள்ளி நிறுத்தினான்.

ஐந்தாறு ஆட்களை அழைத்துக் கொண்டான்.  உருளைக்கிழங்கை பெரிய சைஸ், நடுத்தரம், சின்ன சைஸ் என்று பிரிக்க ஆரம்பித்தார்கள். ஒரு மணிநேரத்தில் வேலை முடிந்ததும் மூட்டை போட்டார்கள். அடுக்கி வைத்து, வியாபாரிகள் வர, விலை பேச ஆரம்பித்தார்கள். ஒரு மணிநேரத்தில் எல்லாம் விற்றுத் தீர்ந்துவிட மன்னாரு, மிஸ்டர் Kஐ தனியாக அழைத்தார்.

“இங்கன வா... கொஞ்சம் பேசணும்”

“சொல்லுங்க மொதலாளி” என்றான் மிஸ்டர் K பவ்யமாக.

“இந்தா இருக்குது உப்பிலிபாளையம். அங்கிருந்து வர்ற மினி லாரிலாம் இந்த டவுன் மண்டிக்கு கால் மணிநேரத்துல வருது. நீ அவங்களை மாதிரி மூட்டைகூட போடறதில்ல.. நெலத்துல இருந்து உருளைக்கிழங்கை வண்டில அள்ளிப்போட்டுட்டு  கிளம்பி வர்ற, ஆனாலும் லேட்டா வர்ற. ஏன் இப்டி? எங்கதான் சுத்திட்டு வருவ?”

“மொதலாளி... நான் எப்ப வந்தா என்ன.. மத்த மண்டிக்காரங்களுக்கு முன்னாலயே நாம விக்க ஆரம்பிச்சுடறோம்ல?”

“அதான் என்ன பண்றன்னு கேட்டேன்!?”

“ஒண்ணுமில்ல மொதலாளி... அவிங்கள்லாம் அங்க மூட்டை போட்டுட்டு வந்து, இங்க அதக் கொட்டி பெரிசு, மீடியம், சின்னதுனு இங்க வந்து பிரிக்கறாங்க. நான் என்ன பண்ணுவேன்னா, அங்க மூட்டை போடமாட்டேன். மொத்தமா வண்டில கொட்டிடுவேன். அப்பறமா நேர்ரோட்ல வராம, ஊரைச் சுத்தி  வருவேன். ரோடே இருக்காது. இருக்கற ரோடும் மேடு பள்ளமா இருக்குமா.. உருளைக்கிழங்கெல்லாம் உருண்டு சின்னது கீழ, பெரிசு மேலனு அததுவா செட்டாகிடும். வந்து கொஞ்சம் பார்த்து இறக்கினா போதும்.  மத்த கடைக்காரங்க 10-15 பேர் வெச்சுப் பிரிப்பாங்க. நான் அதையே அஞ்சாறு ஆள் வெச்சு முடிச்சுடுவேன். ஏன்னா முக்காவாசி சைஸ் பிரிச்ச மாதிரிதான் இருக்கும்.. ஆள் கூலியும் மிச்சம். புரியுதா மொதலாளி?” என்றான்.

Saturday, 18 March 2017

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் -

எஸ்.பி.பாலசுப்ரமணியம் 'ஷாக்' ஃபேஸ்புக் பதிவு!
---------------------------------------------------------------------------------


சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

- நன்றி - விகடன்....(Posted Date : 01:15 (19/03/2017))

Thursday, 26 January 2017

Carpenter Services Available

For those who are looking for house renovations, tiles and flooring services, please contact the number given.

We provide the above services with reasonable cost.
( Only for those around Klang, Banting, Sepang, Dengkil )

Customer satisfaction is our priority.


உங்கள் வீட்டு பழுதுகளுக்கு தொடர்பு கொள்ளவும்....
( கிள்ளான், பந்திங், செப்பாங், டெங்கில் இடங்களில் உள்ளோருக்கு மட்டும் இந்த அரிய சேவை)

Sunday, 4 September 2016

கணக்கியல் துறையில் பட்டம்பெற்ற மகளும் அவர்தம் தோழியும்....


சைபர் ஜெயா மல்டிமீடியா பல்கலைக்கழகத்தின் கணக்கியல் துறையில் பயின்ற எனது மகள் கஸ்தூரியும், அவரது நெருங்கிய தோழியான சரஸ்வதியும் நேற்று இளங்கலை பட்டம் பெற்றனர்.
பிள்ளைகளின் வெற்றியில் பெற்றோரும் பங்கு கொள்கிறோம்.

படத்தில்: எங்களுடன் குடும்ப நண்பர்களும், சரஸ்வதியின் பெற்றோருமான திரு.திருமதி பன்னீர்செல்வம் அவர்கள்.