ஒரு விசயம் மட்டும் உண்மை. பலரும் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக் கொண்டு பல சோதிடர்கள் குளிர் காய்கிறார்கள்.
ஒரு கதை...
அதிகாலையில் இரு காக்கைகளை கண்டால் கைமேல் பலன் என ஒரு அரண்மனை சோதிடர் சொல்ல, அதனை உத்தரவாக பிறப்பித்தார் அரசர்.
ஒரு நாள் காலை, அரண்மனைக்கு அருகாமையில் இரு காக்கைகளை ஒரு சேவகன் கண்டான். மன்னரிடம் தெரிவித்தால் தமக்கு ஏதாவது பணமுடிப்பு கிடைக்கும் என்ற ஆசையில் ஓடிவந்து தெரிவித்தான்.
மன்னர் அந்த காக்கைகளை பார்க்க கிளம்பினார். அங்கு போய் பார்க்கும்போது, ஒன்று மட்டுமே கிளையில் உட்கார்ந்திருந்தது. மன்னருக்கு கோபம். சேவகனை சவுக்கால் அடிக்க ஆணையிட்டார். இதனைக் கேட்ட சேவகன் சிரிக்கத்தொடங்கிவிட்டான். அனைவருக்கும் ஆச்சரியம்.
அவனது பதிலை எதிர்பார்த்து அரசன் திரும்ப,
" மன்னா, இன்று காலை நான் மட்டுமே அந்த இரண்டு காக்கைகளை கண்டேன். உடனே பலன் கிடைத்துவிட்டது...." என வார்த்தைகளை மென்று விழுங்கினான்.
அரசருக்கு விளங்கிவிட்டது. தண்டனையை நிறுத்தினார். உடனே அவசரமாக அரண்மனைக்கு திரும்பினார், சோதிடனுக்கு சவுக்கடி வழங்க....
எதுவுமே, விளங்காதவரைதான்.
விளங்கிடும்போது, குளிர்காய்ந்தவர் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில்....
- என்னுடைய முகநூல் பதிவிது.

No comments:
Post a Comment