Thursday, 11 May 2017

திரு.அசன்கனி, மலேசிய வானொலி ...

நமதினிய நண்பர் அண்ணன் பில்மோர் பலசேனா அவர்கள் மலேசிய கலைஞர்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர். அந்த நாளில் இருந்து, இன்றுவரை புகழ்பெற்ற பல முன்னணி உள்ளூர் கலைஞர்களின் பெயர்கள் அவரது முகநூல் பட்டியலில் இருக்கும்.

முகம் தெரியாது, குரல் கேட்டு வளர்ந்தவர்கள் தங்களின் அபிமான கலைஞர்களின் அடையாள படங்களை இவர் பக்கத்துக்கு வந்து பார்க்கலாம்.
அப்படி பார்த்ததும், எனது மனதில் பல மலரும் எண்ணங்களைத் தந்தது, அன்றைய நட்சத்திரக் கலைஞர்களில் ஒருவரான ஐயா திரு.அசன்கனி அவர்களின் அடையாள படமாகும்.

Image may contain: 1 person, standing, tree and outdoor

தனியார் வானொலி நிலையங்களை போலில்லாமல் தார்மீக அடிப்படையில் தமிழ் வளர்க்கும் பொறுப்பு மலேசிய அரசின் வானொலிக்கு என்றென்றும் உண்டு.
ஐயா திரு.அசன்கனி அவர்களின் காலத்தின் போது பணியாற்றிய அன்றைய மூத்த கலைஞர்கள் எவ்வித பிசிறுமின்றி தமிழின் உச்சரிப்பினால் சிகரம் தொட்டனர். ( எல்லோரையும் பட்டியலிட இடம் போதாது. அடுத்தடுத்த பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம் )

ஊதியத்துக்கான பணிதான் என்றாலும், அன்று தங்களின் பிரமிக்க வைக்கும் திறமைகளினால் மின்னியவர்கள் பலர். அந்த வகையில், செய்திகள், நேரடி வர்ணனைகள், கலந்துரையாடல்கள் என நம்மை அசத்திய மதிப்புக்குரிய அசன்கனி அவர்களை நன்றியுணர்வோடு நினைத்துப் பார்க்கிறேன்.

Image may contain: 1 person, outdoor

தனது சகோதரர் மைதீ சுல்தானுடன், நவீன், ராம்பாபு எனும் கதாபாத்திர படைப்புகள் வானொலி நாடக உலகில் உச்சம் பதித்தன. அதன் எழுத்தாளர் எஸ்.வைரக்கண்ணு அவர்களின் மூன்று வார தொடரான, 'நான் என்றால் அது நீயும் நானும்', ஐயா திரு.அசன்கனி அவர்களின் நடிப்பில் எனக்கு
பிடித்த ஒன்றாகும்.

வாழ்த்த வயதில்லை.... வணங்குகிறேன்....
( எனது முகநூலில் மே 4 இடம்பெற்ற பதிவிது. )

No comments:

Post a Comment