Monday, 9 April 2012

நண்பர் பாலா...

அவ்வப்போது அறிமுகமாகும் சிலரில் நல்ல நண்பர்களாகுவோரும் ஓரிருவர் இருப்பர்.

சில வருடங்களுக்கு முன் அப்படி ஒருவர் நண்பரானார். அரசாங்கத் தொழில்..அதிலும் ஆசிரியராக பதவி வகித்து வருகிறார்.

வசதியானவர். பல கோணங்களில் இருந்து அவருக்கு பொருள் வளம் பெருகுவதால், அவர் சொல்லும் வெற்றியின் ரகசியங்களை அவர் அறுகில் இருப்போர் ஆர்வத்தோடு கேட்கிறார்கள்.

"ஒரு கால கட்டத்திற்கு அப்புறம் பணம் நமக்காக வேலை செய்ய வேண்டும். எந்நேரமும் நாமே அதற்காக வேலை செய்து கொண்டிருக்கக்கூடாது" என்பார்.

வஞ்சகமின்றி உபரி வருமானம் ஈட்டும் வழிகளை கோடிட்டு காட்டுவார். இயற்கையோடு ஒன்றிப்போகும் நேர் வழிகள் அவை. மற்றவர்களை ஏமாற்றாமல், சட்டத்திற்கு எதிராக இல்லாமல், எல்லோரும் ஏற்றுக்கொண்ட விதிகளுக்கு உட்பட்டு சம்பாதிக்கும் குறிப்புகளை சொல்வார்.

தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, இளையோரின் நன்னெறி கொள்கைகளைப் பற்றி அவர் பேச ஆரம்பித்து விட்டால், அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கும் புதிய புதிய சீரிய கருத்துக்கள்.

குடத்திலிட்ட விளக்கினைப் போல இல்லாமல் பலரும் நலமடைய வலைதளத்திற்கு  வருமாறு அழைத்துக்கொண்டிருக்கிறேன். அவருக்கு நேரமும் ஆர்வமும் அதிகமிருந்தாலும் ஏனோ இன்னும் அந்த சின்ன வட்டத்திலிருந்து வெளிவர அதிகம் யோசிக்கிறார்.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம் அல்லவா...?

எனக்குப் பிடித்த பாடல்கள் 1

நான் புதிய பாடல்களையும் ரசிப்பவன்.

இருப்பினும், வார்த்தைகளில் இருக்கும் மென்மையயும் நளினத்தையும் அனுபவிப்பது பழைய பாடல்களில்தான்.

இங்கே எனக்குப் பிடித்த பாடல்களில் சிலவற்றை தந்திருக்கிறேன். என்னுடைய டொப் டென் வரிசையில் இதுவும் ஒன்று.

காரில் என்னோடு பயணிப்பவர்கள் பொதுவாக என்னுடைய பாடல்கள் தேர்வை புகழ மறந்ததில்லை.
" நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே..."
என்னும் பாடல் இடம்பெற்றபோது பின் இருக்கையில் இருந்த ஒரு தாய் என்னைத் தட்டிக்கொடுத்து " நல்ல நல்ல பாட்டா வச்சிருக்கப்பா..." "மனசு குளிருது இந்தப்பாட்டையெல்லாம் கேட்டுக்கொண்டு உன்னோடு பயணம் போவது" என்றார்.

 என்னுடைய ரசிப்புத்தன்மைக்கு ஒரு பாராட்டாயிருந்தாலும், அதில் அப்படி வேறென்ன  இருக்கிறது என்று அவர் செல்லுமிடம் வந்து அவர் இறங்கிச்சென்றவுடன் மீண்டும் அப்பாடலைக்கேட்டேன்...


சூலமங்களம் ராஜலெட்சுமி குரலில் என்ன ஒரு அருமையான தாலட்டுப்பாடல்.

"நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் ம
ங்காத பொன்னே"
1960ம் ஆன்டு வெளிவந்த பாவை விளக்கு படத்திலிருந்து இப்பாடல். சுமார் 52 வயதாகிறது இப்பாடலுக்கு.
"தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
தேன் மணக்கும் வாய் இதழோ சிவப்பு மத்தாப்பு
சின்னஞ்சிறு கண் மலரோ நீல மத்தாப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
மேனியிலே தெரியுதம்மா தங்கத்தின் ஜொலிப்பு
அதைக் காணும் போது மனசுக்குள்ளே எத்தனைக் களிப்பு
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே

எட்டி எட்டி வட்ட நிலா உன்னை பார்க்குது
உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்கு கேக்குது
எட்டி எட்டி வட்ட நிலா உன்னை பார்க்குது
உன் எச்சில் பட்ட சோத்தை அது தனக்கு கேக்குது
சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
சட்டமாக சீக்கிரம் நீ சாப்பிடு அம்மா
அந்த சந்திரனை விளையாடக் கூப்பிடு அம்மா
நீ சிரித்தால் நான் சிரிப்பேன் சிங்காரக் கண்ணே
நீ அழுதால் நான் அழுவேன் மங்காத பொன்னே"

குழந்தைகளின் மென்மையை உணர்ந்த தாய் நிலவை கதையாக சொல்லி சோறு ஊட்டி தன் பாசத்தினை வெளிப்படுத்தி எதிர்கால வாழ்வுக்கு நிலவை சாட்சியாக காட்டியது மனதை தொடுகிறது.
கதை சொன்ன தாய் இப்போது இல்லாவிட்டாலும் நிலவைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் மெய்மறப்போரில் நானும் ஒருவன்.
(படத்தில் காட்சியமைப்பு வேறு விதமாக இருந்திருக்கலாம். அது நமக்கு தேவை இல்லாத ஒன்று.)

மற்றொரு நாள் ஒரு நண்பர் எனது காரில் ஏறினார். பேசிக்கொண்டு போகும்போது ஒரு பாடல் ஒலித்தது. அவர் பேசுவதைக் குறைத்துக்கொண்டு அடுத்தடுத்த வரிகளை பாடத் தொடங்கிவிட்டார். ஆச்சரியம் என்னவென்றால், பி. பி. சீனீவாஸ் சாயலில் அவர் பாடியது நன்றாகவே இருந்தது.... நிறைய பயிற்சி செய்திருப்பார் என நினைக்கிறேன்.

பாடல்களின் வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக எழுதியிருந்தனர் கவிஞர்கள் அன்று.

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நானில்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நானில்லை

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
 என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
 பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
 என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

ஊமையின் கனவை யார் அறிவார்
 என் உள்ளத்தின் கதவை யார் திறப்பார்
 மூடிய மேகம் கலையுமுன்ன
 நீ பாட வந்தாயோ வென்னிலவே

அமைதி இல்லாத நேரத்திலே
 அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
 நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
 இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்


சில பாடல்களை கவிதைகளாக படிக்க சுவை கூடும்.

"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
ஒன்று மனசாட்சி
ஒன்று தெயவத்தின் சாட்சியம்மா
 நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
 தெய்வத்தின் சாட்சியம்மா"

 இந்தப்பாடலின் வரிகள் இன்றைய இளையோரையும் கவரும் வண்ணம் இருப்பது உண்மை.

அடுத்தவரிகளில்...

"நதி வெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றம் இல்லை
விதி செயத குற்றம் அன்றி வேற யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள
 மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
 மலருக்கு மனைதக் கொஞ்சம் தூது செல்லுங்கள்

  ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
 அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
 மனிதன் அம்மா மயங்குகிறேன்

 தவற்றுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
 தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே"

 நேர்மையான ஒருவனின் சோகப் புலம்பலாக வந்தது இப்பாடல். இசை சராசரிதான். ஆயினும், பலருக்கும் இப்பாடல் பிடிக்கக் காரணம்?

தத்துவார்த்தமான வார்த்தைகள்... எல்லோரும் விளங்கிக்கொள்ளும்  வகையில் அவை கோர்க்கப்பட்ட விதம்.


ஒரு சில வரிகளை அவை எங்கே எப்படி வருகின்றன  என பார்க்காமல் ரசிக்கப் பழக வேண்டும்.

"யேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார் ???


ஒருவழியை மறுவழியால் மறைப்பது விதியாகும்
அதை உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும் "

Sunday, 8 April 2012

காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. . .

சிலவற்றை சற்று ஆழ்ந்து சிந்தித்தோமானால் நமக்கே பிரமிப்பாக இருக்கும்.

எவ்வளவு பெரிய சூழ்நிலைகளை நாம் சமாளித்து வந்திருக்கிறோம் என்பது நமது மனத்திரையில் ஓடும்.

காலம் யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை. அது தனது கடமையைச் செய்துகொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. கால ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் அதனோடு சிக்கிச் சுழன்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

நல்ல அனுபவங்கள் நமக்கு மகிழ்ச்சியூட்டுகின்றன. மற்றவை நம்மை எண்ணச்சிதைவில் தள்ளி ஏக்கத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டு வாழ்ந்துகொண்டிருப்போர் நம்மிடையே நிறைய பேர் உண்டு.  "அந்தக்காலத்திலே நாங்க..." என பெரியோர்கள் தங்கள் கடந்த கால அனுபவங்களை இப்படி நினைவுகூர்வது  அவர்கள் அன்று மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள் இன்னும் பசுமையாக அவர்கள் மனங்களில் இருப்பதனால்தான்.

அதே நேரத்தில் " வேண்டாம், அதைப்பற்றி பேச விரும்பவில்லை..." என்று எண்ண அலைகளில் பின்னோக்கிச்செல்ல விரும்பாதோரும் உண்டு. இவர்களின் அன்றைய பாதை கல்லும் முல்லும் நிறைந்ததாக இருக்குமோ என்னவோ...

எப்படி பார்க்கினும், வாழ்க்கை நமக்கு எல்லாக் காலங்களிலும் ஏதாவதொன்றை சொல்லிக்கொண்டேதான் வந்திருக்கிறது.

சங்க கால இலக்கியங்களில் சொல்லப்பட்ட பாலையும் நீரையும் பிரித்து உண்ணும் அன்னப் பறவைகளைப் போல நாமும் இருக்கப் பழகினால் அன்றைய இனிமையும் இன்றைய புதுமையும் என்றென்றும் நம்மோடு இணைந்து வந்துகொண்டே இருக்கும்...

Saturday, 7 April 2012

Mr Joe Santha family photos . . .

நல்ல நண்பர்கள் கிடைப்பது சிரமம். அப்படி கிடைக்கும் நல்ல நண்பர்களோடு நட்பாக நெடுங்காலம் வாழ்வது அதைவிடச் சிரமம்.

பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும், பண்டிகைத் திரு நாட்களிலும் கலந்துகொள்ள வரும் நண்பர்களோடு பேசி மகிழ்வது  பலருக்கு பிடித்தமான ஒன்று.

அப்படி சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இனிமையாக பழகி வரும் நல்ல நண்பர்கள் திரு ஜோசப் அவர்களும் திருமதி சாந்தா ஜோசப் அவர்களும் ஆகும்.
அன்று போலவே புன்னகை மாறாத முகமும் குணமும் சாந்தாவிற்கு. அவரின் கணவர் மிஸ்டர் ஜோ, நெருங்கிச்சென்று பழகுவோர் அதிசயக்கும் ஒரு அற்புதமானவர்.
இருவரும் குரலை உயர்த்தி பேசாத ஜோடி. வீட்டின் பொறுப்பை ஒருவரும் பொருளீட்டும் பொறுப்பை மற்றவருமாக பகிர்ந்துகொண்டு மலரும் மணமுமாக வாழ்வது மற்ற குடும்பத்தினருக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பிள்ளைகளும் படிப்பில் வெற்றி பெற்று வருவது இன்னுமொரு போனஸ் பொய்ன்ட்.

இவர்களின் திருமணத்தின்போது அங்கும் இங்கும் ஓடி அவர்கள் குடும்பத்தில் ஒருவரைப்போல உதவி செய்தது எனக்கு நினைவுக்கு வருகிறது இப்போது....
எனது குடும்பத்தினரோடு அவர்களை சந்திக்கும் அன்று பலரிடமிருந்து வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன. மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் பிரதிபலித்தது. இருக்காதா என்ன...
திருமண நாளைக் கொண்டாடும் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களையும் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.





















Tuesday, 3 April 2012

Blank


reserved for ING news
 








Monday, 2 April 2012

Joint birthday celebration for Kumaresan & Pancha
















Mullaiventhan's Birthday Photos







Birthdays are an annual observance celebrated by almost everyone in the world for so many centuries. The cultures and customs may differ from one another, but the theme is more or less  the same.  It is a general feeling that  every year when the sun comes to the same spot of a person's birthday, that day is said to be extremely fortunate for those who are celebrating it.  The  wise and the learned  have observed that those who are celebrating their birthdays enjoy a great deal of luck on their days and this pattern of being lucky on a birthday is widely believed by many religions too. Of course, there maybe one or two exceptions to this point of view.

The above photos were taken at Mr Punithan's house last night. Mr Punithan is still well known for his " ex NGO days ". He is a staunch believer of doing things the logical way,  unlike many who do things immitating others. His passion for tamil is an open secret. He proves it by naming his children Venmathi and  Mullaiventhan...