மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களில் உங்களுக்குத் பிடித்தது எது என ஒரு நண்பர் என்னிடம் வினவினார். அருமையான கேள்வி.
இளம் வயதில் அப்படி ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு வந்த புத்தகங்களில் சிலவற்றை படித்திருக்கிறேன். பெயர் தெரியா எழுத்தாளர்களாகவே அவர்களின் படைப்புகள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, 'ரோமுக்கு அப்பால்...", துப்பறியும் புதினம்.
ஆனாலும் நான் மொழிபெயர்ப்பதில் வல்லுனர்களான பலரின் புத்தகங்களை படித்ததில்லை. எனக்கு பிடித்தது... நான் ரசித்தது... ரா.கி.ர எனும் காலஞ்சென்ற குமுதம் உதவி ஆசிரியர், அய்யா ரங்கராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பு புத்தகங்களை மட்டுமே.
''லாரா'', ''ஜென்னிபர்'', ''தாரகை'' போன்ற சிட்னி செல்டனின் நாவல்கள் இவர் கைப்பட தமிழில் புகழ் பெற்றன. அதிலும், அவரின் ''பட்டாம் பூச்சி'' ஒரு இமையம். அதற்கு மிஞ்சியது எதுவுமில்லை என்பேன் நான்.
ஆங்கில நாவலையும், தமிழிலில் வெளிவந்த மொழிபெயர்ப்பையும் படித்திருந்ததால், ஒரு மொழிபெயர்ப்பாளர் எந்தெந்த பகுதிகளில் கவனத்தை செலுத்த வேண்டும் எனும் நுணுக்கங்களை புரிந்துகொள்ள முடிந்தது.
மூல ஆசிரியர் ஹென்றி ஷாரியார் கதைக்கருவில் இருந்து அவர் நழுவிடவில்லை. ஆயினும், நாவல் நடையினில் அப்படி ஒரு சுதந்திரத்தை அய்யா ரா.கி.ர கையாண்டார். இதை வெட்டலாமா, அதை சுருக்கலாமா என அவர் யோசித்தது கிடையாது. நாவலின் சுவாரஸ்யம் கருதி இரண்டையும் செய்தார். அதனால்தானோ என்னவோ, அவரின் இந்த தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறனே அவரை பலருக்கும் அறிமுகப்படுத்தியது.... பட்டாம் பூச்சி நிலைத்து நிற்க காரணமுமாகியது.
மூலப் பிரதியையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் படித்திருந்தாலும், எனக்கு என்னவோ தமிழில் வந்ததே நினைவில் நிற்கிறது.
பட்டாம் பூச்சி நாவலின் ஆங்கில அசலை எழுதியவர்.
1973ல் திரைப்படமாக வந்த போது....
ஜெயமோகன் பலரும் அறிந்த நல்ல எழுத்தாளர். அவரின் பார்வையில் நாவலும், திரைப்படமுமாக ஒரு விமர்சனத்தை ''பட்டாம் பூச்சியின் சிறகுகள்'' என ஆகஸ்ட் 29, 2014\ ல் தந்திருந்தார். அதனைப் படிக்க இங்கு சொடுக்கவும். http://www.jeyamohan.in/7939#.WSLsMeuGOM8