நம் சமூகத்து மூத்த குடிமக்கள் பெரும்பாலோனோர் மருமகள்களின் கொடுமைக்கு ஆளாகின்றனர் என்று அவ்வப்போது எடுக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆய்வுகளில் தெரியவருகிறது.
தாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளின் வாழ்விற்காக எண்ணற்ற தியாகங்களை செய்து அவர்களை ஆளாக்கி விட்டு கடைசி காலத்தில் அந்த பிள்ளைகளின் தயவினை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர் முதியவர்கள். இவ்விசயத்தில், தங்களின் அந்திமகால சேமிப்பும் அடங்கும். பொருளை இழந்துவிடும் பெரியோர், சில நேரம் தங்களின் சொந்த பிள்ளைகளாலும், பல நேரம் அவர்களுக்கு வாய்க்கும் மருமகன் அல்லது மருமகள்களாலும் துன்பத்துக்கு ஆளாகிறார்கள்.
60, 70, 80 என அதிக வயது என்பது ஈவிரக்கம் இல்லாத பிள்ளைகளுக்கு வெறும் எண்மட்டுமே.
ஒரு சில குடும்பங்களில், வீட்டிலிருக்கும் பெரியவர்களின் நிலம், வீடு மற்றும் ப்ரோவிடண்ட் பண்ட் பணத்தை கைபற்ற ஆர்வம் காட்டும் மகன்கள், அவர்களை கடைசி வரை தங்களுடன் வைத்துப் பார்க்க எண்ணம் கொள்வதில்லை. இந்த சொத்து சுகங்கள் கிடைக்கப் பெறாத பெண் பிள்ளைகளே வயதான தாய் தந்தையரை கவனிக்கும் பொறுப்பை ஏற்று கவனித்துக்கொள்கிறார்கள். அது ஏனோ மகன்களை மருமகள்கள் கொடுமைக்காரர்களாக ஆக்குவதிலேயே காலமுழுவதும் அமைந்து விடுகிறார்கள். அநாதை இல்லங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் மாமன், மாமியார்களை அனுப்ப நினைக்கும் மருமகள்கள், தங்களின் பெற்றொருக்கு அந்த நிலை வந்தால் என்ன செய்வார்களோ?
முதியோருக்கு எதிரான கொடுமை என்பது அவர்களின் மனதைக் காயப்படுத்தும் செயல் என்பதனால், இதனை கண்முன்னே காணும் அனைவரும் முடிந்தவரை சம்பந்தப் பட்டவரிடம் தங்களின் கண்டனக் கருத்தை பகிர்ந்துகொள்வது நல்லது என நினைக்கிறேன். இதனால், மற்றவர்கள் தங்களை இழிவாக நினைக்காது இருக்கவாவது, பிள்ளைகள் சற்று அடங்கிப் போகலாம்.
சட்டத்திலும் ஒரு சில மாறுதல்கள் செய்யப்பட வேண்டும். பெற்றோர்களின் பொருளாதாரத்தை பலவந்தமாக பிடுங்கிக்கொண்டு அவர்களை வீட்டை வீடு வெளியேற்றும் பிள்ளைகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். அவர்களிடம் இருந்து பறிக்கப்படும் பணம், பத்து மடங்காக அவர்கள் பெயரில் சேமிப்பில் திரும்ப சேர்க்கப்படவேண்டும். பிள்ளைகள் தங்களது கடைசி காலத்தில் தங்களை கவனித்துக்கொள்வார்கள் என்றே பெற்றோர் தங்கள் கைவசம் இருக்கும் பணத்தை அவர்களுக்குத் தருகிறார்கள். இது நடக்காத போது, சட்டப்படி பிள்ளைகளை தண்டிப்பது ஞாயமே. தங்களின் தார்மீக கடமையினை செய்யத் தவறும் பிள்ளைகளுக்கு இறைவன் காட்டும் தண்டனையும் கண்முன்னே நடந்துவிட்டால், இது போல நடப்பது நின்று விடும்.
No comments:
Post a Comment