திருமணத்திற்கு முன் சுங்கை பட்டாணிக்கு ஒருமுறை இதில் பயணம் செய்த அனுபவம் உண்டு. திருமணமான பிறகு ஈப்போவிற்கு அடிக்கடி இதில் பயணிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன, மனைவி அங்குள்ளவர் என்பதனால். நாட்கள் ஆக ஆக பயணச்சீட்டு கிடைப்பதில் சிரமங்கள் தோன்றத்தோடங்கி விட்டன.....அனைவரும் ரயிலை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடமாட்டோம் என அடம் பிடித்தால் பின் எப்படி நம் இஷ்டத்துக்கு இதில் பயணிப்பது....? அதோடு, பஸ் வசதிகளும் பெருகத்தொடங்கிவிட்டன.... நானும் கார் வாங்கிவிட்டேன்.
அன்று இரயில் பயணிப்பது சுகமான ஒன்றாக இருந்தது. இடையிடையே சின்னச் சின்ன ஊர்களாகவும், ஒவ்வொரு மாநிலங்களை கடக்கும் போது வயல்வெளிகளும், ரப்பர் தோட்டங்களும், செம்பனை மரங்களுமாக, பல விதங்களில் கிராமத்து வீடுகளை பார்த்தபடி செல்வது பிரம்மிப்பான அனுபவமாகும். குழந்தைகள் பட்டமிடுவதும், ஆட்டமும் பாட்டுமுமாக கவலையற்று மகிழ்வதை பார்த்தபடி பயணிப்பது மனதுக்கு இதமானதாய் இருந்தது.
ரயில் பயனங்கள அன்று அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்ததற்கு இன்றிருக்கும் கைபேசிகளும் ஏனைய நவீன சாதனங்களும் இல்லாததும் ஒரு காரணமென நினைக்கிறேன்.
இது நெடுந்தூர சேவை என்பதனால், பினாங்குக்கு ( பட்டர்வேர்த்தை ) இணைக்கும் சேவையாக, கோலாலும்பூரில் இருந்து இலேக்ட்றிக் ரயிலும் தற்போது இருக்கிறது.
No comments:
Post a Comment