Sunday, 8 December 2013

நமக்குப் பிரச்சினையாக இருப்பது யார்...?


பொதுவாக  நமக்கு எதிரி நாம் தான். நமக்குள் இருக்கும் எதிர்மாறான எண்ணங்களே நம்மை பல வேற்றிகளில் இருந்து தடுக்கிறது.  நம்மை நாம் உணரந்துவிட்டால், மற்றவர் நமக்கு ஒரு பிரச்சினையாக பட மாட்டார்...

சில நேரங்களில் பெற்றோர்களின் திட்டங்களும் இப்படித்தான் போகின்றன.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவோடு பாசத்தினையும் ஊட்டி வளர்க்கிறார்கள். கொஞ்சி, கொண்டாடி மகிழும் அதே நேரம், பலவாறான கட்டுப்பாடுகளையும் அங்கே முன் வைக்கிறார்கள்.

பலங்காலத்தில் சிறு சிறு வாக்கியங்களின் மூலம் பிள்ளைகளை கட்டுப்படுத்துவார்கள். " கோல் எடுத்தவன் குருடு, கத்தியைத் தொட்டால் ரத்தம் வரும், தொட்டால் சுடும் நெருப்பு " என்பதில் தொடங்கி, " பூச்சாண்டி வருகிறான், தனியே போகாதே...வாகனத்தில் வருவது அரக்கன், ஜாக்கிரதை" என பயமுறுத்தும் வகையிலும் அவர்களின் மிரட்டல் இருக்கும். குழந்தைகளின் நன்மைக்கு சொல்லப்பட்டவையே அவை. அதுபோன்ற அறிவுரைகளை மீறி நடப்போர் கண்டிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்.

அன்பையும் பண்பையும் பரிமாறும் பெற்றோர்  தங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பலவிதமான திட்டங்களையும் தீட்டி நடமுறைப்படுத்த முனைகின்றனர். பாராட்டப்பட வேண்டிய செய்கைகள் இவை.

ஆனால், வளரும் குழந்தைகள் , தங்கல் திட்டப்படி நடந்து கொள்கிறார்களா என மீள்பார்வை இடுவது குறையும் போது, தங்களின் கண்டிப்பும் தளர்த்தப்படுகிறது. கால ஓட்டத்தில் தங்களின் திட்டங்கள் குழந்தைகளின் வற்புறுத்தலுக்காகவும், அவர்களின் எதிர்ப்புக்களுக்காகவும் சிறிது சிறிதாக மாற்றங்களுக்குள்ளாவதை பலர் உணர்வதில்லை.

சில வருடங்களுக்குப் பின் பிள்ளைகள் சொல்வதை கேட்கும் கட்டாயத்துக்குள்ளாகிறார்கள் பெற்றோர்.

கைபேசி இருந்தால் தான் பள்ளிக்குப்போவேன் என அடம் பிடிக்கும் நிலை, ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளை பார்த்தபின் தான் வீட்டுப்பாடங்களைச் செய்வேன் என பெற்றோரை அதட்டும் குழந்தைகளில் சிலரை எனக்குத் தெரியும்.

இப்படி பெற்றோரின் இலக்கு மாறுவதால், சாதனைகளாகவேண்டிய தங்கள் பிள்ளைகளின் வெற்றிகள் சாதாரனமாகிவிடுகின்றன இருவருக்கும்.

பிள்ளைகள் மேல் வைக்கும் ஆரம்பத்திட்டங்கள் வெற்றி பெறாமல் போவதற்கு அவர்களின் அதீத பாசமும் ஒரு காரணம்.

" ஆரம்பத்துல நல்லாத்தான் படிச்சான், நல்ல பிள்ளியாத்தான் வளர்ந்தான். ஆன போகப் போக இப்படி ஆகிட்டான்...." என எத்தனையோ பெற்றோர் ஆதங்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

அதனால் தான் சொல்கிறோம், பிள்ளை சாதிக்கும் வரை, அரவணைப்போடு கண்டிப்பும் மிக அவசியம் என்று.





No comments:

Post a Comment