Wednesday, 4 December 2013

வாகன உரிமையாளர்களுக்கு ஒரு பயனுள்ள ஆலோசனை...

கார் திருட்டுக்கள் ஆங்காங்கே  நடப்பதை நாம் பார்த்து வருகிறோம். நமது கார் திருட்டுப்போன உடனே அதனை மிக விரைவான நேரத்தில் கண்டுபிடிப்பதெப்படி….? ஆச்சரியப்படும் படியாக நடைமுறையில் எளிதான ஒரு வழி உண்டு.

எந்தவித  பாதுகாப்பு கருவிகளை நாம் நமது வாகனத்தில் பொருத்தி இருந்தாலும் திருடர்கள்  இரண்டே நிமிடங்களில்  திருடிக்கொண்டு போய் விடுகிறார்கள்.  சில மணி நேரத்தில் உதிரிப்பாகங்களாக நமது கார் விற்கப்படுமுன் அதனைக் கண்டு பிடித்தாக வேண்டும். எப்படி…?

தொடர்பு கொள்ளக்கூடிய அளவில் ஒரு கைபேசியை  நமது காரின் மறைவிடமொன்றில் ஓலியவைப்பதே சிறந்த யுக்தியாகும்.

1. மலிவான அதே நேரம் பாட்டரி அதிக நேரம் தாங்கக் கூடிய கைபேசி ஒன்றை வாங்குங்கள்.

2. சிம் கார்ட்டுடன் எப்போதும் தொடர்பு நிலையில் கைபேசி இருப்பது அவசியம்.

3. சைலன்டாகவும் வைப்ரேட் பண்ணாத அமைதியான நிலையிலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

4. அழுக்கடையாமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றி வைப்பது நல்லது.

5. வெளியிலிருந்து வரும் அழைப்புக்களை அந்தக் கைபேசி  எவ்வித பிரச்சினையும் இன்றி பெருகிறதா என்று உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

6. காரின் மறைவிடத்தில் கைபேசியினை ஒளித்து வையுங்கள்.

அவ்வளவுதான் நீங்கள் செய்யவேண்டியது.

கார் திருடப்பட்டதை  அறியும் அதே நேரம் போலிசில் இந்த மறைத்துவைத்திருக்கும் கைபேசியின் தகவலைச் சொல்லுங்கள். 'டெல்கோ' கம்பனிகளின் துணை கொண்டு மிகச் சொற்ப காலத்தில் திருடு போன காரை கண்டுபிடித்து விடலாம்.

குறிப்பு : எப்போதும் அந்த கைபேசியின் பாட்டரி நிறைவுடன் இருக்கிறதா என பரிசோதிக்கொள்வது  மிக முக்கியம்.

No comments:

Post a Comment