சுமார் 60 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த பிரபல மற்றும் பிரமாண்டமான பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் தனது 91வயதில் இறைவனடி சேர்ந்தார்.எம்.எஸ்.சுப்பையா நாயிடுவால் அன்றைய சுப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கு முதன் முதலில் குரல் கொடுத்தார். பிறகு எம்ஜிஆரின் " எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" எனும் மலைகள்ளன் பாடலின் மூலம் புகழ் பெறத் தொடங்கினார். தொடர்ந்து அவர் எம்ஜிஆருக்கென குரல் கொடுக்கும் முக்கிய பாடகராக அறிமுகமானார். கிடைத்த பல வாய்ப்புக்களை அவர் தன் குரல் வலிமையால் நிரூபித்து தனக்கு நிகர் யாருமில்லை எனச் சொல்லும் அளவுக்கு பேரும் புகழும் பெற்றார்.
யாருக்காகப் பாடுகிறாரோ அவர்களைப் போல குரலை மாற்றிப் பாடுவது இவரின் பாணி. ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுகளின் தமிழ்த்திரை உலகின் முக்கிய நடிகர்களாகிய எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருக்கு இவரின் குரல் அப்படியே பொருந்தியது.
எனவே அவர்களின் பல படங்களுக்கு குரல் கொடுத்ததன் வழி அவர்களோடு இவரும், இவரோடு அவர்களும் புகழ்பெற்றனர்.
சுமார் பத்தாயிரம் பாடல்கள் பாடி இருக்கும் இவர், முருகன் பக்திப் பாடல்கள் என வெளியிட்ட ஒலி நாடா மற்றும் சீடிக்கள் மிகவும் பிரபலமானவை.
No comments:
Post a Comment