Friday, 31 May 2013

பொறுமை...

பலர் எல்லாவற்றிலும் அவசரமாகவே உள்ளனர். எதிலும், எதற்கெடுத்தாலும் அவசரம். காலையிலிருந்து மாலை வரை அவர்கள் செய்யும் அனைத்திலும் ஒருவித அவசரத்தையே கடைபிடிக்கிறார்கள்.

ஏன்... உண்ணும் உணவைக்கூட அவசர அவசரமாக உண்ணுவோர் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள்.

நமது எல்லா அலுவல்களையும் தலகீழ் மாற்றும் சக்தி பெற்றது பொறுமை இல்லாத அவசரமாகும்.

இது நமக்கு தெரியாதா?

தெரியும், ஆனால் இந்த அவசர உலகில், நாம் இந்த அவசர சூழ் நிலைகளுக்கு ஈடு கொடுத்து அவசர அவசரமாகவே வாழ்கிறோம். பொறுமையே முறையான வாழ்வுக்கு அஸ்திவாரம் என்பது எப்படி நம் நினைவினில் நிற்கத் தவறுகிறது.

ஒவ்வொரு செயலுக்கும் நேர்மறையானதும் எதிர் மறையானதுமாக விளைவுகள் உண்டு என நாம் படித்திருப்போம். அவசரம் என்பது ஒரு சில செயல்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற நேரங்களில் அவசரம் என்பது ஒருவரின் பலவீனம் என்றே பெரியோர் சொல்லிச் சென்றனர். மாறாக பொறுமை என்பதனையே போற்றிப் புகழத்தக்கதாக அவர்கள் வலியுறுத்தினர்.

இயற்கையும் அந்த பொறுமையையே நமக்கு கற்பிக்கிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு  இடத்துக்கு பயணம் போவோர் அவசரமாக  செல்லும் போது, தனக்கும் தன்னோடு பயணிப்போருக்கும், எதிரில் வருவோருக்குமாக  ஆபத்தான சூழ் நிலைகளை உருவாக்குகிறார். பல நேரங்களில் அவசரம் ஆபத்தில் போய் முடிகிறது.

ஆனால், அவர் பொறுமையாய் வாகனத்தை செலுத்தும் போது அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன, போய்ச் சேர வேண்டிய இடத்திற்கும் பத்திரமாக, நிம்மதியாக சென்றடைய முடிகிறது.

இங்கே பொறுமையான பயணத்திற்கு பலனுண்டு என தெரிந்து கொள்கிறோம். விபத்துக்களுக்கான முக்கிய ஒன்றாக சாலைகளில் பொறுமை இல்லாது பயணிப்போர் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

சில செயல்களில் பொறுமை என்பது பல மடங்கு நன்மையை நமக்குப் பெற்றுத் தருகின்றது.  வீடு, நிலம், ஷேர் மார்க்கெட் போன்ற வாங்கி விற்கும் வியாபார முதலீடுகள் சில காலம் பொறுமையோடு காத்திருத்தலுக்கான நன்மையினை நமக்குத் தருகின்றது.  வங்கிகளில் போடப்படும் சேமிப்புக்களுக்கும் இதை சொல்லலாம். இவற்றில் பொறுமையாக காத்திருப்பது வியாபாரத் தன்மையை பொறுத்து அமைகின்றது. சரியான நேரத்தில் இலாபம் அடையும் திறனைச் சார்ந்ததாக இருக்கின்றது.

வெற்றியாளர்களின் பின்னனியை கூர்ந்து பார்த்தால், " கடினமாக உழைத்தேன் ...காத்திருந்தேன்...சரியான நேரத்தில் பலன் கிட்டியது" என்று அவர்கள் சொல்வது நமக்கு புலப்படும்.

 தேர்வுக்கு அமரும் மாணவன் தன் தேர்ச்சியனை தெரிந்து கொள்ளவும் கர்பினித் தாய்மார்கள் தங்கள் குழந்தையினை பெற்றெடுக்கவும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.  இதுபோல சில நம் சக்திக்கு அப்பாற்பட்டவைகளாக இருக்கின்றன. நம்மையும் மீறியச் சில செயல்கள் நமக்கு பொறுமையை கட்டாயமாகச் சொல்லித் தருகின்றன.

செயல் வேகத்தினை முடக்குவதோ, குறைப்பதோ அல்ல பொறுமை என்பது. தடைகள் பல கடந்து செல்லும் சக்தியையும் நிதானத்தையும் தரவல்லது அது. முயற்சி, திறமை, நுண்ணறிவோடு பொறுமையும் சேரும் போது சாதனையாளர்கள் தோன்றுகிறார்கள்.

ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கின் தத்துவமே பொறுமைக்கான உதாரணமாக பெரியோர் நமக்கு காலங்காலமாக சொல்லிவரும் மிகப் பெரிய தத்துவமாகும். பின்பற்றுவோம், பயனடைவோம்....


Thursday, 30 May 2013

ஆங்கிலம்தான் அகிலமெங்கும்...

மொழியென  வரும் போது, உலக மக்கள் அனைவரும் தத்தம் மொழிகளையே உயர்ந்ததென  கருதி போற்றுகிறார்கள்.   எவரும்  தங்களின் தாய்மொழியை விட அடுத்தவர் மொழி உயர்ந்ததென சொல்லக் காணோம். இது இயல்பான  ஒன்று.

ஆயினும்  யாவரும் ஒரு விசயத்தில் மட்டும் ஒத்த கருத்தையே  பிரதிபலிக்கின்றனர்.  அதுதான், உலக தேசிய மொழியாக  ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டது.

தமிழ் நாட்டுக்கு தமிழ், மலாய் நாட்டுக்கு மலாய், ஜெர்மனிக்கு ஜெர்மன், பிரான்ஸ் நாட்டுக்கு ப்ரெஞ்ச் என இருந்தாலும் எல்லா நாட்டில் உள்ளோரும் பேசுகின்ற ஒரு பொது மொழியாக இருப்பது ஆங்கிலமே.

உலகின் பிரதான மொழி ஆங்கிலம் என்பதில் கருத்து வேற்றுமை இல்லாத போது அதை எற்றுக்கொள்வதிலோ, மற்றவர்களுடன் உரையாடுவதிலோ என்ன சுணக்கம் வேண்டிக்கிடக்கிறது?  உலக மொழியைக் கற்றுக்கொள்வதில் ஏன் ஒரு சிலர் தங்களின் தாய்மொழியை முட்டுக் கட்டையாக இடுகின்றனர்...?

இதை தீவிரமாக எண்ணுகையில்  அவர்களின் ஆதங்கம் நமக்கு தெரிகிறது.  ஆங்கிலத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் தங்களின் தாய்மொழி  மறைந்திடுமோ எனும் பயம் ஒரு காரணம் என துணிந்து கூறலாம். இது பல இடங்களில் மறுக்க முடியாத உண்மையாக நடைமுறையில் இருக்கிறது.  சற்றே ஆங்கிலம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் இருக்கும் நேரத்திலும் ஆங்கிலத்திலேயே உரையாட பழக்குகின்றனர். தங்கள் குழந்தைகள் மற்றவர் முன் ஆங்கிலத்தில் பேசுவது கௌரவம் என எண்ணுகிறார்கள். இப்படிச் சிலரால் தமிழ் மொழிக்கு ஆபத்து வந்திடுமோ என பயம் எழுவது இயற்கையே.

ஆனால் இதனால் எல்லாம் நம்மொழி மறைந்துவிடும் என என்னால் எண்ண முடியவில்லை. பிற மொழிகளைப் போலில்லாமல் நம் மொழியை உயிராய் மதித்து வாழ்பவர்கள் நாம்.

தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்ச்சித்தன், தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்த்தென்றல், தமிழ்வண்ணன், என நாம்தான் மூச்சு விடும்போதும் தமிழ்... தமிழ் என தமிழை சுவாசிக்கிறோம்.... உயிராக நேசிக்கிறோம்.  நம் மொழி என்றென்றும் நிலைத்து நிற்கும். அதன் அடிப்படைகளை நம்மில் பலர் தினமும் மேற்கொண்டுதான் வருகிறோம்.

ஆனால், நாம் இப்போது தமிழோடு ஆங்கிலமும் கற்றுக்கொள்ளும்  தருணம் வந்துவிட்டதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இசைத்தமிழ், இயற்றமிழ், நாடகத்தமிழ் என ஊருக்கு ஊர் கருத்தரங்கங்கள் மட்டும் போதுமா? நமது வாழ்வாதாரத்தை உயர்த்த என்ன செய்கிறோம், நமது எதிர்கால திட்டங்கள் யாவை என பார்க்கும் போது, மெச்சத்தக்கதாக தமிழ் நம் உயிராயிருந்தாலும், ஆங்கிலம் நமதுடல் போலாகிறது.  ஒன்றிலிருந்து ஒன்று விடுபட முடியா நிலை. இந்த விகிதாச்சார சம நிலையில் மாற்றம் ஏற்படும்போது நாம் வெற்றி பெற்றோர் பட்டியலில் சேர முடியா நிலையாகிறது.

அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும் மட்டுமல்லாமல் ஆன்மீகத் தலைவர்களும் தங்களை பலருக்கும் அடையாளப் படுத்திக்கொள்ள ஆங்கிலமே உதவுகிறது.

உலக நாடுகள் அவர்களின் சொந்த மொழியினில் பல்கலைகழகங்கள் பல நடத்தி வந்தாலும், மாணவ மாணவியர் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக்கொள்வதில்  அந்நாட்டு அரசாங்கங்கள் அதிக அக்கறை செலுத்துவதை நாம் பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். எந்த நாடும் மற்ற நாடுகளைவிட கலை, கலாச்சாரத்திலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிவிட தயாராக இல்லை. இந்த போட்டி மனப்பான்மையே ஆங்கிலத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்கின்றனர் மொழி வல்லுணர்கள்.

உலகமயமாக்களில் இம்மொழியின் பங்கு அளப்பரியதாக இருப்பதால் தனியொருவர் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும்  ஆங்கில மொழி இன்றியமையாததாகிறது. இதனாலேயே அந்தந்த  நாடுகளில் உள்ள உயர்கல்வி மன்றங்கள் இம்மொழியை அனைவரும் கற்பது அவசியமென  பரிந்துரை செய்கின்றன.

இளந்தலைமுறையினரின் எதிர்காலத்தை மனதில் கொண்டு கற்றலிலும், கற்றுத்தருவதிலும் காலத்துக்கேற்ப எழும் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொண்டே வந்திருக்கிறோம். அதன்படியே ஆங்கில மொழி அவசியத்தையும் நாம் ஏற்றுகொண்டே ஆகவேண்டும்.

 நம் தாய்மொழித் தமிழுக்கு எவ்வளவு  முன்னுரிமை  தருகிறோமோ  அதே அளவுக்கு ஆங்கிலத்திலும் நாம் புலமை பெற்றிருப்பது நமக்கும் நம் பிள்ளைகளுக்கும்  நல்ல பலன்களைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

நம் நாட்டு கல்வி அமைச்சு ஆங்கில பாடத்தை ஒரு கட்டாயப் பாடமாக்கியதிலிருந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு  ஆங்கிலம் ஒரு முக்கிய பாடமென்று நம் தலைவர்கள் கருதுவது தெரிகிறது.

நம் சமூக மாணவர்கள் பன்மொழிப் புலவர்களாக இருப்பதில்  நமக்கு மகிழ்ச்சியே. ஆயினும் தற்போது தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி உயர்கல்வி நிலையங்களில் கற்போர் கூட ஆங்கிலத்தில் சற்று திறன் குன்றி இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

பணி இடங்களுக்கு விண்ணப்பிப்போர் நேர்காணலின் போது ஆங்கிலத்தில் தன்னம்பிக்கை இல்லாது பதிலளிப்பதும்  ஆய்வுகளில் தெரிய வருகிறது. 

ஆண்டுதோரும் உயர்கல்விக்கு பதிவோரும், பட்டதாரிகளாக வெளிவருவோரும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் ஆங்கிலத்தில் திறமையானோர் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளனர் என்கின்றனர்  சம்பந்தப்பட்டோர்.

தமிழில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் திறன்வாய்ந்தவர்களாக மிளிர்வதாக மற்றொரு ஆய்வறிக்கையும் குறிப்பிடுகிறது. தமிழ், ஆங்கிலத்துக்கு எதிரியல்ல என இதனால் தெரிந்துகொள்ளலாம். தமிழ்வழி ஆங்கிலம் கற்று பிரபளமானோர் நம்மிடையே பலர் இருக்கிறார்கள்.

'இலக்கண இலக்கிய ஆங்கிலம்' தெரிகிற அதே நேரம், 'வணிக ஆங்கிலமும்' தெரிந்து வைத்திருப்பது அவசியம் என தொழில் துறையில் இருப்போர் அறிவித்திருக்கின்றனர். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே நில்லாமல், பல சர்வதேச நிறுவனங்களிலும் தங்களின்  வேலை அல்லது தொழில் சம்பந்தப்பட்ட வாய்ப்புக்களை பிரகாசமாக வைத்துக்கொள்ளலாம்.

தொழில்துறைகள் அனைத்தையும் சர்வதேச அளவில் ஏக போகமாக ஆக்கிரமித்துக்கொண்டிருப்பது ஆங்கிலம்தான்.  தனிப்பட்ட நாடுகளின் உள்ளூர் மொழிகள் உள் நாட்டு தேவைக்கு மட்டுமே என்பது எழுதப் படாத சட்டம்.... அவ்வளவே.

இந்தியா, சீனா போன்ற ஏழை நாடுகளில் கூட ஆங்கிலம் உள் நுழைந்து அவர்களை உலகளாவிய முத்திரை பெற்றவர்களாக மாற்றி வருவது நம் கண்முன்னே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எதிலும் எதிர்வித கருத்துக்கள் இருப்பதனால், எரிச்சலடையும் சிலர் ஆங்கிலத்தை எதிர்க்கின்றனர். தங்களின் முக்கியத் துவம் பரிபோய்விடும் எனும் எண்ணம்கூட அவர்களின் பழமைவாத கருத்துக்கு காரணமாக இருக்கலாம். ஆங்கிலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழாசிரியர்களை கவனித்தால் ஒரு உண்மை தெரியவரும்.  அவர்களுக்கு ஆங்கிலம் சரி வரத் தெரியாது என்பதே அது. ஒருவித தாழ்வு மனப்பான்மையால் ஒட்டுமொத்தமாக அம்மொழியினை இகழ்பவர்கள் இவர்கள்.

இதற்கு நேர்மாறானோர், ஆங்கில  ஞானம் உள்ள தமிழாசிரியர்கள். அதனை தம் கற்பிக்கும் மொழித்திறனுக்கு சாதகமானதொன்றாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.   தங்களின் மாணவச் செல்வங்களை வெற்றிபெற்றோர் வரிசையில் நிற்க ஆங்கிலம் இவர்களுக்கு உதவுகிறது.
 
தமிழ் மட்டும் தெரிந்த தலைவரை விட ஆங்கிலமும் தெரிந்த தலைவரே மக்களுக்கு தேவை இப்போது.  கிணற்றுத் தவளைகள் போல் மக்கள் இருக்க, தான்தோன்றித் தனமாக ஆட்சி புரிந்த தலைவர்கள் காலம், கடந்த காலம் ஆகிவிட்டது.  வெளியுலக நடப்புக்களை சீர்தூக்கிப் பார்த்து செயல் வடிவம் தரும் தலவர்களே மக்களைச் சென்றடைகின்றார்கள் இப்போது.  ஆங்கிலம் அதற்கு வழி செய்கிறது கணினி ரூபத்தில்.


 தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் கற்கச் சொல்வதல்ல நமது நோக்கம். தமிழுக்கு அடுத்ததாக ஆங்கிலமும் கற்போம் என்பதே நாம் சொல்லவரும் கருத்து.

தமிழ் நமது உயிர் மூச்சாக இருந்தாலும், நல்ல ஊதியம் பெற, வளமான எதிர்காலம் அமைய ஆங்கிலத்தையும் கற்றுத்தேர்வோம்.

Tuesday, 28 May 2013

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் - 8

உள்ளத்தின் உள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன அந்த உண்மையை சொல்லாயோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் விழியும் என் வாளும் சந்தித்தால்
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
உங்கள் தேவை என்னவென்று தெரியும்
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உன்னை நினைக்கையிலே கண்ணே எண்ணக் கனவுக்கும்
உன்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைத்தானே ஏய் உன்னைத்தானே
ஊரென்ன பேசும் மதிப்பென்ன ஆகும்
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
ஊத்தி கொடுத்தான்டி ஒரு ரவுண்டு இப்போ
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உழைப்பதில்லா உழைப்பை பெறுவதில்லா இன்பம்
வா கலாப மயிலே
வா பொண்ணுக்கு பொட்டு வைக்க வா
வாமா வாமா சின்னம்மா
வானத்தில் வருவது ஒரு நிலவு
வாங்க வாங்க கோபால் ஐயா
வானில் முழு மதியைக் கண்டேன்
வாழ நினைத்தால் வாழலாம்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வண்ணம் பாடுதே வான் எங்கும்
வரனும் வரனும் மகராணி
வருக வருக திருமகளின் முதல் மகளே
வருஷத்தைப் பாரு 66
வசந்த முல்லை போலே வந்து
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று
வெள்ளி நிலா முற்றத்திலே
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
விடியுமட்டும் பேசலாம்
வீடு நோக்கி ஓடி வந்த என்னையே
வீடு வரை உறவு
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விவசாயி விவசாயி
விழியால் காதல் கடிதம்
விழியே விழியே உனக்கென வேலை
யார் அந்த நிலவு ஏன் இந்த கனவு
யார் தருவார் இந்த அரியாசனம்
யாரடா மனிதன் அங்கே
யாரடி நீ மோகினி
யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
யாரது யாரது தங்கமா
யாருக்கு யார் என்று தெரியாதா
யாருக்கு யார் சொந்தமென்பது

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் - 7

சின்ன சின்ன மூக்குத்தியாம்
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
சின்னப் பயலே சின்னப் பயலே செய்தி கேளடா
சின்னப்பெண் ஒருத்தி சிரிக்கிறாள்
சின்னவளை முகம் சிவந்தவளை
சிந்தித்தால் சிரிப்பு வரும்
சிந்து நதியின்மிசை நிலவினிலே
சிரிக்கத் தெரிந்தால் போதும்
சிரிப்பது சிலபேர் அழுவது பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
சிரித்தால் தங்கப் பதுமை
சிரித்து சிரித்து என்னை சிரையிலிட்டாய்
சித்திரை மாத நிலவினிலே
சித்திரம் பேசுதடி
சிட்டாடை கட்டி இருக்கும் சிட்டு
சிவப்பு விளக்கு எரியுதம்மா
சொல்லித்தெரியாது சொல்ல முடியாது
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
சொர்கத்தில் இருந்து நரகம் வரை
சொர்கத்தில் மயங்கும் மயக்கம்
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாயாக மாறவா தாலாட்டு பாடவா
தாயெனும் செல்வங்கள் தாலாட்டும் தீபம்
தாய்மேல் ஆணை தமிழ் மேல் ஆணை
தாழையாம் பூ முடிச்சி
தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும்
தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா
தங்கச் சுரங்கம் போவது எந்த தட்டானைப் பார்க்க
தங்கப் பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே
தன்னந்தனியாக நான் வந்த போது
தண்ணீர் சுடுவதென்ன
தண்ணீரிலே தாமரைப் பூ தள்ளாடுதே அலைகளிலே
தர்மம் தலை காக்கும்
தேடி வரும் தெய்வ சுகம்
தேனடி மீனடி மானடி நீயடி  வா வா
தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது
தேவ மைந்தன் போகின்றான்
தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்
தென் மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள்
தென்றல் வந்து தொட்டதினாலே தேகத்தில் என்னடி குறைந்தது
திருடாதே பாப்பா திருடாதே
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
தொட்டதா தொடாததா கைகளே படாததா
தொட்டு தொட்டு பாடவா
தொட்டு விட தொட்டு விட தொடரும்
துள்ளி விழும் அருவியைப் போல் கண்பார்வை என் மேல் விழுதே
துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி
தூங்காத கண்ணென்று ஒன்று
தூங்காதே தம்பி தூங்காதே
துவானம் இது துவானம் இது துவானம்
உலகம்  ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி
உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது
உலகம் பிறந்தது எனக்காக
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் என்பது ஆமை
உள்ளம் ஒரு கோயில் உன் உருவம் அதில் தெய்வம்
உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே
உள்ளத்தின் கதவுகள் கண்களடா

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் - 6

பாரப்பா பழனியப்பா பட்டனமாம் பட்டணமாம்
பார்த்தேன் பார்க்காத அழகை
பார்வை ஒன்றே போதுமே
பார்வை யுவராணி கண்ணோவியம்
பாட்டு ஒரு பாட்டு
பாட்டு வரும் 2 உன்னை பார்த்துக்கொண்டிருந்தால்
பாவாடை தாவனியில் பார்த்த உருவமா
பாவி என்னை மறுபடியும் பிறக்கவைக்காதே
பேர் தெரியா அன்னை எனை பெற்றெடுத்தாளே
பேசுவது கிளியா இல்லை
பெண் போனால் இந்த பெண் போனால்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
பிள்ளை மனம் கலங்குதென்றால் பெற்ற மனம் உருகாதோ
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
பொன்மகள் வந்தாள்
பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை
பொன்னை விரும்பும் பூமியிலே
பொன்னெழில் பூத்தது புது வானில்
போடா போடா பைதியமே
போனால் போகட்டும் போடா
போனாளே போனாளே ஒரு பூவுமில்லாமல் பொட்டுமில்லாமல்
போர்களம் போர்களம் காதல் என்னும் போர்களம்
போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
புதிய வானம் புதிய பூமி
புத்தம் புதிய புத்தகமே
புத்தன் ஏசு காந்தி பிறந்தது
புது நாடகத்தில் ஒரு நாயகி
புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
பூஜியத்துக்குள்ளே ஒரு
பூமியை படைச்சது சாமியா
பூஞ்சிட்டுக் கண்ணங்கள்
பூந்தோட்ட காவல்காரா
பூப்போல பூப்போல பிறக்கும்
பூட்டிய மனதை திறந்து விடு
பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா
பூவிலும் மெல்லிய பூங்கொடி
பூவின்றி மணமேது பூமியின் மீது
ராஜாங்கம் நடக்கின்றதா
ராஜாத்தி காத்திருந்தா ரோஜா போலே பூத்திருந்தா
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
ராதா மாதவ வினோத ராஜா
சபாஷ் தம்பி உன் செய்கையை போற்றுகிறேன்
சக்கர கட்டி ராஜாத்தி
சமாதானமே தேவை
சந்ரோதயம் ஒரு பெண்ணானதோ
சத்தியமா நான் சொல்லுவதெல்லாம் தத்துவம்
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செல்லக்கிளியே மெல்லப் பேசு
செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சீருலாவும் இன்ப நாதம் தெய்வ சங்கீதம்
சீவி முடிச்சி சிங்காரிச்சி
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
சில்லென்று காற்று வந்ததோ
சின்ன சின்ன கண்ணனுக்கு என்னவேண்டும்

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் - 5

நித்தம் நித்தம் ஒரு புத்தம் புதிய
 நீ ஆட ஆட அழகு
 நீ எங்கே என் நினைவுகள் அங்கே
 நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே
 நீயா இல்லை நானா
 நீயே ஒரு நேரம் சொல்லு
 நீயேதான் எனக்கு மணவாட்டி
நெஞ்சுக்கு முகமே கண்ணாடி
நேரம் நல்ல நேரம்
நேருக்கு நேர் நின்று பாருங்கள்  போதும்
நேத்து நீ சின்னபாப்பா
நேத்து பரிச்ச ரோஜா
ஞாயிறு என்பது கண்ணாக
ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணுக்கு தெரிகின்றது
ஒண்ணா இருக்க கத்துக்கனும்
ஒண்ணு கொடுத்தா ஒன்பது கிடைக்கும் உனக்கு தெரியுமா 2
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒரே முறைதான் உன்னோடு பேசிப்பார்த்தேன்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா
ஒரு மரத்தில் குடி இருக்கும் பறவை இரண்டு
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
ஒரு நாளிலே உறவானதே கனவாயிரம் நினைவானதே
ஒரு பெண்ணைப் பார்த்து நிலைவைப் பார்த்தேன்
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டான்
ஒருவன் மனது ஒன்பதடா
ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது
ஒருவர் வாழும் ஆலயம்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம் பாடலாம்
ஒத்தையடி பாதையிலே அத்தை மகள் போகையிலே
ஓ எந்தன் பிரேமா என்னாசை பிரேமா
ஓ ராஜா.. ராஜா.. நீ வரவேண்டும் என எதிர்பார்த்தேன்
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளிரோ
ஓஹோ ஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
ஓஹோ லிட்டல் ஃப்ளவர்
ஓமைனா ஓமைனா இது உன் கண்ணா பொன் மீனா
ஓர் ஆயிரம் பார்வையிலே
பச்சைக்கிளி முத்துச்சரம்
படைத்தானே படைத்தானே
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வளம் போக
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பனி இல்லாத மார்கழியா
பந்தல் இருந்தால் கொடி படறும்
பறக்கும் பந்து பறக்கும்
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பருவத்தில் கொஞ்சம் உருவத்தில் கொஞ்சம்
பசுமை நிறைந்த நினைவுகளே
பதினாறும் நிறையாத பருவமங்கை
பட்டிலும் மெல்லிய பெண்ணிது
பட்டு சேலை காத்தாட
பட்டு வண்ண சிட்டு படகுத்துறை விட்டு
பட்டுப் பாவடை எங்கே
பாடினார் கவிஞர் பாடினார்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பார் மகளே பார்

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் - 4

மானல்லவோ கண்கள் தந்தது
மாணிக்க மகுடம் சூட்டிக்கொண்டாள் மகாராணி
மாணிக்கத் தேரில் மரகத கலசம் மின்னுவதென்ன
மாணிக்கத்தொட்டில் இங்கிருக்க
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாசிலா நிலவே நம் காதலை
மாதவி பொன் மயிலால் தோகை விரித்தாள்
முகத்தை காட்டி காட்டி மூடிக்கொண்டது ஞாயமா
முதல் என்பது தொடக்கம்
முத்தமோ மோகமோ தத்தி வந்த வேகமோ
முத்துக்களோ கண்கள்
முது நகையே உன்னை நானறிவேன்
மூடுபனி குளிரெடுத்து
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
 நடடா ராஜா நடடா
 நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது
 நடந்து வந்த பாதையிலே
 நல்ல இடம் நீ வந்த இடம்
 நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூட
 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
 நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே
 நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்
 நல்லது கண்ணே கனவு கனிந்தது நன்றி உனக்கு
 நல்லவன் எனக்கு நானே நல்லவன்
 நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
 நதி எங்கே போகிறது கடலைத் தேடி
 நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
 நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
 நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போமென
 நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
 நான் அளவோடு ரசிப்பவன்
 நான் அனுப்புவது கடிதம் அல்ல
 நான் ஏன் பிறந்தேன்
 நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
 நான் கடவுளைக் கண்டேன்
 நான் கவிஞனும் இல்லை
 நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
 நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவென் தமாஷா
 நான் பாடிய முதல் பாட்டு
 நான் பாடும் பாடல் நலமாகவேண்டும்
 நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
 நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
 நான் போட்டால் தெரியும் போடு
 நான் தென்ன மரத்தில குந்தி இருப்பத சின்னப்பாப்பா
 நான் உன்னை அழைக்கவில்லை
 நான் யார் நான் யார் நீ யார்
 நான் யார் யார் என்று நீ சொல்ல
 நாணமோ இன்னும் நாணமோ
 நாணத்தாலே கண்ணம் மின்ன மின்ன
 நாணயம் மனுசனுக்கு அவசியம்
 நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
 நாதஸ்வர ஓசையிலே
 நாட்டுக்கு பொருத்தம் நாமே நடத்தும்
 நிலைவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
 நிலவென்ன பேசும் குயில் என்ன பாடும் மலரென்ன சொல்லும் மனதிலே
 நிலவென்னும் ஆடை கொண்டாளோ அவள் தன் நிழலுக்கு நின்றாளோ
 நிலவில்லாமல் வான் இருக்கும்
 நில்லடி நில்லடி சீமாட்டி
 நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
 நினைத்தேன் வந்தாய் நூறு வயது

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் - 3

கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கண்ணு மயங்கி மயங்கி போனா
கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி
கண்ணுக்குத் தெரியாதா
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ
கண்பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
கண்வழியே கண்வழியே போனது கிளியே
கரைமேல் பிறக்கவைத்தான்
கதா நாயகன் கதை சொன்னான்
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு
கட்டான கட்டழகு கண்ணா
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
கட்டோடு குழல் ஆட ஆட
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காகிதத்தில் கப்பல் செய்து
காகித ஓடம் கடலலை மீது
காலை நேரம் ஒருவன் வந்தான்
காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வாங்க போனேன்
காசேதான் கடவுளப்பா
காதல் மலர்க் கூட்டம் ஒன்று
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
காதல் உள்ளம் கவர்ந்த நீயே கள்வன்தானோ காதலன் தானோ
காவலும் இல்லாமல் வேலியும் இல்லாமல்
காவேரிக் கரை இருக்கு
காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி
கேளம்மா சின்னபொண்ணு கேளு
கேள்வி பிறந்தது அன்று
கேட்டால் ஒன்று தரவேண்டும்
கேட்டவரெல்லாம் பாடலாம்
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கொடியில் இரண்டு மலருண்டு
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கோவிலிலே வீடு கட்டி கோபுரத்தில் கூடு கட்டி
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குங்குமச் சிமிழே
குங்குமப் பொட்டின் மங்களம்
குங்குமப் பொட்டுக்காரா கோண கிறாப்புக் காரா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா
கூந்தல் கறுப்பு
லவ் லவ் எத்தனை அழகு எங்கள் கண்களிலே
மட்ராஸ் நல்ல மட்ராஸ்
மலை சாய்ந்து போனால் மரமாகலாம்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
மலரும் கொடியும் பெண்ணென்பார்
மலரும் வான் நிலவும் கொஞ்சும் எழிலெல்லாம் உன்
மனம் ஒரு குரங்கு
மனத்தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
மங்கியதோர் நிலவினிலே
மனிதனை மனிதன் சாப்பிடுராண்டா
மஞ்சள் முகமே வருக
மன்னிக்க வேண்டுகிறேன்
மண்ணுக்கு மேலாடை
மயக்கம் எனது தாயகம்
மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு
மாடிவீட்டுப் பொண்ணு மீனா

Monday, 27 May 2013

டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் - 2

என்னம்மா சௌகியமா எப்படி இருக்குது மனசு
எண்ணப் பறவை சிறகடித்து
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
என்றும் பதினாறு வயது பதினாறு
என்றும் துண்பமில்லை இனி சோகமில்லை
எந்தன் மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
எதையும் தாங்குவேன் அன்புக்காக
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
எத்தனை பெரிய மனிதனுக்கு
எல்லோரும் கொண்டாடுவோம்
ஏமாறச் சொன்னது நானோ
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்
ஹெல்லோ ஹெல்லோ சுகமா
இடி இடிச்சி மழை பொழிந்து எல்லாம் நின்னாச்சி
இகலோகமே இனிதாகுமே
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
இன்பம் இன்பம் என்னவென்றொருவன் இறைவனை கேட்டானாம்
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
இனியது இனியது உலகம்
இனியவளே எனக்குறியவளே
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா
இந்த புன்னகை என்ன விலை
இப்படியே இருந்து விட்டால் எப்படி இருக்கும் எதிர் காலம்
இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சி
இறைவன் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
இதய ஊஞ்சல் ஆடவா
இது மாலை நேரத்து மயக்கம்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா
இது வேறுலகம் தனி உலகம்
இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா
இவளொரு அழகிய பூஞ்சிட்டு வயது ஈரொம்போது பதினெட்டு
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
ஈனா மீனா டிக்கா ஜெய் ஜாமனிக்கா
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துண்பம் யாவும்
கை இருக்குது கால் இருக்குது முத்தையா
கை விரலில் பிறந்தது நாதம்
கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கல்வியா செல்வமா வீரமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
கல்யாண சாப்பாடு போடவா
கண் கவரும் சிலையே காட்சி தரும் கலையே
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
கண் போன போக்கிலே கால் போகலாமா
கணக்கெழுத தெரிந்த பெரியவனே
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் மலர் முகம்
கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உள்ளாசம் காண்போமே
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
கண்ணானால் நான் இமையாவேன்
கன்னத்தில் என்னடி காயம்
கண்ணே தேடி வந்தது யோகம்
கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தை காட்டினாள்

டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் - 1

அச்சம் என்பது மடமையடா
அடி என்னடி ராக்கம்மா
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா
அடியே நேத்து பிறந்தவள் நீயே
அக்கம் பக்கம் பார்க்காதே
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடியெடுத்து
அமைதியான நதியினிலே ஓடம்
அம்மா வேண்டுமா உனக்கோர் அம்மா வேண்டுமா
அம்மாக் கண்ணு சும்மா சொல்லு
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு
அம்மாடி தூக்கமா ஆமாமா கேட்கனுமா
அன்பே உன் பெயர் அன்னை
அன்பே வா உள்ளம் என்றொரு கோயிலிலே
அன்பு வாழ்க ஆசை வாழ்க
அன்பு நடமாடும் கலை கூடமே
அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்
அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகதித்திலே
அன்று வந்ததும் இதே நிலா
அனுபவி ஜோரா அனுபவி
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
அவள் ஜாதிப் பூவென சிரித்தாள்
அவளா சொன்னாள் இருக்காது
அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அவுளுக்கென்ன அழகிய முகம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அழகை பாடவந்தேன்
ஆடையை பாரு ஜாடையை பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
ஆண்டவன் முகத்தை பார்க்கனும்
ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான்
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு
ஆற்றும் கடமையை மறக்காதே
ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
ஆசை கனவே நீ வா
ஆசைப் பட்டது நானல்ல மனது என் மனது
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
டிங்கிரி டிங்காலே
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச்சொல்லி
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
என் கேள்விக்கென்ன பதில்
எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்
எனது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே போய்விடும் காலம் அது உன்னையும் வாழ வைக்கும்
எங்கெல்லாம் வலையோசை கேட்கின்றதோ
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
என்ன கோபம் சொல்லு பாமா
என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்
என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில்
என்னை காதலித்தால் மட்டும் போதுமா
என்னை முதல் முதலாக பார்த்தபோது
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
என்னைத் தெரியுமா நான் சிரித்துப் பேசி

டி எம் எஸ் அவர்களின் பக்திப் பாடல்கள்

ஐயா டி எம் சௌந்தரரஜன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு...
தனது கம்பீரக் குரலால், வசீகரக் குரலால் தமிழை உலகமெங்கும்
தனது இசையின் மூலம் பரப்பிய ஒப்பற்ற ஒரு தெய்வப் பிறவி. 

அன்னார் உடல் வீழ்ந்தாலும் அவரின் அறுபது ஆண்டுகளின் தொண்டு நம்மை விட்டு அகலாது என்றும்.

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
- கற்பனை என்றாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்



முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா
முருகா....
(உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம் உருகுதய்யா)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம் உருகுதய்யா)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
(கந்தன்)


சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்துச் சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)


மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா
(கந்தன்)


சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா


இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்


சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுடர்மிகு வடிவேலா !
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா - தீஞ்சுவை ஆகவில்லையே!


எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா - இன்பம் ஏதும் இல்லையே!


அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா - அங்கம் மணக்கவில்லையே!


சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா - சீர் மணம் வேறு இல்லையே!


முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா - முதற் பொருள் ஆகவில்லையே!


சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா - மெய்ப் பொருள் வேறு இல்லையே!


எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே -
முருகய்யா - எண்ணத்தில் ஆடவில்லையே!

மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே!
(தித்திக்கும் தேன் பாகும்)


முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்

மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா


முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா


மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா மாயை நீங்க

வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே ஏ..ஏ... ஏ...
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா


ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்

சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா... ஹே சிவ பாலா.... தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா


சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை ஆ...ஆ..
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


முருகா நீ வரவேண்டும்!
முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்!

நினைத்த போது நீ வரவேண்டும்!

நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!

உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே!

நினைத்த போது நீ வரவேண்டும்!

கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே

நினைத்த போது நீ வரவேண்டும்!

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

பலவித நாடும் கலை ஏடும்
பணிவுடன் உனையே துதி பாடும்
கலை அலங்கார பாண்டிய ராணி நேசா
மலையின் வாசா
மங்கா மதியானவா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா


சுமார் பத்தாயிரம் பாடல்கள் பாடி இருக்கும் ஐயா சௌந்தரராஜன் அவர்கள் முருகன் பக்திப் பாடல்கள் என வெளியிட்டிருந்த ஒலி நாடாக்கள் மிகப் புகழ் பெற்றவை. பட்டி தொட்டி என்றில்லாது எல்லா நகரங்களிலும் கூட இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. முருக பக்தர்களை முருகனிடம் இணையச் செய்யும் அப்படியொரு சக்தி அப்பாடல்களுக்கு. அவர் மறைந்தாலும் அவர் முருகனுக்காற்றிய சேவை மறையாது.

Saturday, 25 May 2013

டி எம் சௌந்தரராஜன் காலமானார்...



சுமார் 60 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த பிரபல மற்றும் பிரமாண்டமான பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் தனது 91வயதில் இறைவனடி சேர்ந்தார்.

எம்.எஸ்.சுப்பையா நாயிடுவால் அன்றைய சுப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கு முதன் முதலில் குரல் கொடுத்தார். பிறகு எம்ஜிஆரின் " எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" எனும் மலைகள்ளன் பாடலின் மூலம் புகழ் பெறத் தொடங்கினார். தொடர்ந்து அவர் எம்ஜிஆருக்கென குரல் கொடுக்கும் முக்கிய பாடகராக அறிமுகமானார். கிடைத்த பல வாய்ப்புக்களை அவர் தன் குரல் வலிமையால் நிரூபித்து தனக்கு நிகர் யாருமில்லை எனச் சொல்லும் அளவுக்கு பேரும் புகழும் பெற்றார்.

யாருக்காகப் பாடுகிறாரோ அவர்களைப் போல குரலை மாற்றிப் பாடுவது இவரின் பாணி. ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுகளின் தமிழ்த்திரை உலகின் முக்கிய நடிகர்களாகிய எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருக்கு இவரின் குரல் அப்படியே பொருந்தியது.
 எனவே அவர்களின் பல படங்களுக்கு குரல் கொடுத்ததன் வழி அவர்களோடு இவரும், இவரோடு அவர்களும் புகழ்பெற்றனர்.

சுமார் பத்தாயிரம் பாடல்கள் பாடி இருக்கும் இவர், முருகன் பக்திப் பாடல்கள் என வெளியிட்ட ஒலி நாடா மற்றும் சீடிக்கள் மிகவும் பிரபலமானவை.



Friday, 24 May 2013

வைகாசி விசாகம்...



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இது. விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

 நம்மூர் ஆலயங்களில் தற்போது  வெகு விமரிசையாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சின்ன சின்ன நடை நடந்து...

'சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
அம்மா என்று நீ அழைத்தால்
அமுத கானம்
பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா...'

அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் தாதியர் தினம் போன்ற  சிறப்பு தினங்களை ஏன் கொண்டாடுகிறோம்....?

அவர்களின் சேவைகளுக்கு மதிப்புக் கொடுத்து, அந்த தியாகத்தை போற்றி, அவரகளின் தொண்டுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே தான் நாம் அது போன்ற சிறப்பு நாட்களை நினைவுகூர்கிறோம். அவை அந்த ஒரு நாட்களுக்கு மட்டுமல்ல, தொடர்ந்து வரும் எல்லா நாட்களிலும் அவர்களின் அர்ப்பணிப்பு பூஜிக்கப் படவேண்டும்.

இந்த தூய எண்ணம் நம் மனதில் என்றென்றும் இருப்பது அவசியம்.

சின்ன சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா

ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா

கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா

சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா!!


'காவேரியின் கணவன்' படத்தில்  பி.சுசீலாவின் குரலில் இந்த பாடல் தாயுள்ளத்துக்கு ஒரு உதாரணம். பழைய பாடல் விரும்பிகளுக்கு இன்றும் இனிமை சேர்க்கும் அற்புதமான ஒன்று இது.

'வாங்க... போங்க' என குழந்தைகளை அழைப்பது...

மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவது காலங்காலமாக நம் சமூகத்தில் உள்ள ஒரு உன்னத பண்பு.  மேலை நாட்டு கலாச்சார சீர்கேடுகள் இறக்குமதியாகும் இப்போதும் மரியாதை என்பது தொடர்ந்து நாம் கட்டிக் காப்பாற்றி வரும் ஒன்றாகும்.

தாய், தந்தை எனும் வித்தியாசமின்றி சினிமாவில் புகுத்தப்படும் கேவலமான உரையாடல்களைத் தவிர்த்து நம் நாட்டில் எல்லா வீடுகளிலும் குறை சொல்ல முடியா அளவுக்கு மரியாதைக்கு எவ்வித பங்கமுமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆயினும், மரியாதை என்பது சிறுவர்களுக்கு வித்தியாசமாக கற்பிக்கப் படுகிறது இப்போது.  பாலர் பருவத்திலேயே "வாங்க ...போங்க..." என்கிற மரியாதைச் சொற்களுடன் மழலைகள் அழைக்கப்படுகிறார்கள். அதன்படியே, அதனைச் சார்ந்தவாறே அனைவரும் குழந்தைகளை அழைக்கவேண்டிய கட்டாயம் இப்போது யாவருக்கும் திணிக்கப் படுகிறது. இதில் தவறில்லைதான். இதனால் குழந்தைகள் மரியாதையைக் கற்றுக்கொள்கிறார்கள் என்றால் அது நல்லது தானே...

ஆனல், பல குடும்பங்களில் உண்மை நிலை இதுவா?

 நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்த " வாங்க...போங்க..." எனும் பண்பான வார்த்தைகளை நம் பெற்றோரும், சுற்றத்தாரும் எப்படிச் சொல்லித் தந்தனர் என்பதை இங்கு நினைவு கூறும் போது, அன்றைக்கும் இன்றைக்குமான நடைமுறை வித்தியாசங்கள் பல  தெரிகின்றன.

வயதில் மூத்த யாவரையும் நாம் மரியாதைக் குறைவுடன் அழைத்ததே இல்லை.  ஆனாலும் நம் வீட்டுப் பெரியோர் நம்மை இப்போதைய "ஸ்டைலில்" வாங்க ... போங்க... என அழைத்ததில்லை.

காலச் சூழலில், வா...போ... நீ எனும் ஒற்றைசொல்லின் பயன்பாட்டை குறைப்பதற்காக இவ்வாறு குழந்தைகள் அழைக்கப் படுகிறார்கள் என்று வாதிடுவோர் கூறினாலும் இப்படியான குடும்பங்களில் இவர்கள் சொல்வதுபோல் "ங்க...." எனும் மரியாதை நிலை நிறுத்தப் படுகிறதா என்றால் பல வீடுகளில் இல்லை என்ற பதில் தெளிவாகத் தெரிகிறது.
பெற்றோர் பிள்ளைகளை "ஐயா வாங்க...அம்மா வாங்க.." என அழைக்கிறார்கள். ஆனால் குழைதைகளோ..."அம்மா, தண்ணி கொண்டு வா..சோறு ஊட்டு..." என ஒருமையில் பதில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால் சொல்லித்தரப்படும் இந்த " ங்க..." அவ்வளவுதானா?  வெறும் பந்தாவுக்குத்தான் மற்றவர் முன் குழந்தைகளை 'வாங்க போங்க' என அழைக்கிறார்களோ..?

 நம்மைச் சுற்றி உள்ள சிலரின் உரையாடல்கள் சுவாரஸ்யமாக இருக்கும்...

மகள்      : அம்மா வா வீட்டுக்கு போகலாம்...
அம்மா : கொஞ்சம் பொறுங்கம்மா, ஆண்டியோட அஞ்சு நிமிஷம் பேசிய  பிறகு உங்கள வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்...

---------
அப்பா  : ராயன், கணக்கில் உங்க மார்க் நல்லா இல்லையே...அங்கிள் கிட்ட காட்டுங்க...
மகன்  : நீதான் எனக்கு டியூசனுக்கு ஏற்பாடு பண்ணலயே..அத மொதல்ல அங்கிள் கிட்ட  சொல்லு...

--------
இப்படி பல நடப்புக்கள் நம்மைச் சுற்றி மரியாதைக்கான உதாரணங்களாக நாம் பார்க்கலாம்.

உண்மையில் மரியாதை என்பது வார்த்தயில் அல்ல.  அது மனதில் இருப்பது. பெற்றோர் பிள்ளைகளுக்கு மரியாதை என்பதன் பொருளை சிறுகச் சிறுக விளக்கிவர குழந்தைகள் உணரத்தொடங்கி விடுவார்களேயன்றி, இந்த "ங்க.." நடைமுறை, பல குடும்பங்களில் காமெடி விசயமாகவே இன்றிருக்கிறது.

 நம்ம வீட்டுல எப்படி?

வாகன நெரிசல்...

நம் நாட்டில் பல பிரமாதமான மாநகர்கள் இருந்தாலும் போக்கு வரத்து வசதி என பார்க்கும்போது நமக்கு தலையை சுற்றுகிறது.  நம்முடைய இன்றியமையாத தேவை தற்போது அதிகம் சிறமமில்லாத போக்குவரத்து  வசதிதான். இது வாகனம் செலுத்துவோர் மட்டுமல்ல, பொதுமக்களும் எழுப்பும் முக்கிய கேள்வியாகும்.

 நமக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் எதிர்பார்ப்பது சுலபமாக நகரின் கடைத் தெருக்களுக்குச் செல்வதுதான். ருசிமிகும் உணவுக்கும், தங்களின் தேவைக்கான இதர துணிமணிகளுக்கும் நிம்மதியாக கடைகளுக்கு சென்று வருவதையே இங்கு வரும் பெரும்பாலானோர் பெரிதும் விரும்புவார்கள்.

கோலாலம்பூர், கிள்ளான், பினாங்கு, ஜோகூர் மற்றும் பல நகர்களிலும் சாலைகளில் குவியும் வாகனங்களைக் காணுகின்ற போது சுற்றுலாப் பயணிகள் பல கசப்பான அனுபவங்களுக்கு தங்களைத் தயார் படுத்திக்கொண்டுதான் இங்கு வரவேண்டி உள்ளது.

 நினைத்த நேரத்தில் ஒரு இடத்துக்குச் சென்று சேர முடியாத நிலை இன்னும் தொடர்வது  ஆச்சரியமான ஒன்றுதான். காரணம் உலகின் பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வது நமது சாலைகளும் அதன் தரமும் என்றால் அது பொய்யில்லை.

வாகன நெரிசலை தீர்க்க என்னவெல்லாமோ அரசாங்க அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள். ஆயினும் சரியான தீர்வை அவர்கள் தொட்டதற்கான அறிகுறிகளைக் காணோம். பல இடங்களில் தொடங்கப் பட்ட சாலையை சீர் செய்யும் வேலைகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கின்றன.
மானியத் தொகை போதாததால் குத்தகைக் காரர்கள் தொடர்ந்து சீரமைப்புப் பணிகளை செய்ய முடியாததாகிறது.

அழகாக தூர நோக்கு சிந்தனையில் தொடங்கப் பட்ட பல போக்குவரத்து பணிகள் பல வருடங்களாக  முடங்கிக் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது. அரசாங்கம் இவற்றில் தீவிரம் காட்டாத வரையில், நெரிசல்கள் குறையும் சாத்தியம் நிச்சயம் இல்லை.

உள்ளூர்வாசிகள் அத்தியாவசிய தேவையின்றி நகரின் வீதிகளுக்குச் செல்ல அஞ்சும் அளவுக்கு இந்த வாகன நெரிசல்  இருக்கின்றது தினமும்.  மணிக் கணக்கில் வாகனங்களில் மெல்ல ஊர்வது நம்மில் பலருக்கும் பொறுமையை சோதிக்கும் அனுபவமாகும்.

பொதுப் போக்குவரத்தில் போவது பல இடங்களில் உச்சிதமில்லாத ஒன்றாக இருக்கும் நிலை இப்போது. பொது போக்குவரத்து வாகனங்களுக்கென தனிப் பாதை இல்லாததால், வழக்கமான நெரிசலில் சிக்கியே நகர்கின்றன. 

முன்பு வேலை தொடங்கும் போதும் முடியும் போதும் இருந்த வாகன நெரிசல் இப்போது மற்ற நேரங்களிலும் தொடர்வது சம்பந்தப் பட்ட அமைச்சும் அதன் அதிகாரிகளும் சரியான திட்டமிடல் வழி, தேவைக்கேற்ப போக்குவரத்து விதிகளில்  மாற்றங்களை அமல் படுத்தவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

Wednesday, 22 May 2013

கடன் பட்டார் நெஞ்சமா...அப்படின்னா???

" நாம் கேட்பதை நிறுத்தும்வரை மற்றவர்கள் நமக்கு அல்வா கொடுத்துக்கொண்டேதான் இருப்பார்கள். அதற்காக கேட்பதை நிறுத்திவிட முடியுமா என்ன? கிடைக்கும் வரை கேட்டுதான் ஆகவேண்டி இருக்கு...."
மெல்ல என் காதுகளில் கிசு கிசுத்தார் பக்கத்திலிருந்த என் நண்பர்.

"என்ன சொல்றீங்க..விளங்கலையே..." என்று அவரைப் பார்த்தேன்.

"அவசரம்னு ஆயிரம் வெள்ளி கேட்டார், கொடுத்தேன். இப்ப என்னப் பார்த்ததும் வேறு பக்கமா என் கண்ணில் படாதமாதிரி போறார்..." என்றார்.

" அடடா...என்ன தவறு பண்ணிட்டீங்க..கடன் கொடுக்கலாமா...? கடன் அன்பை முறிக்கும்னு படிச்சதில்லையா....?"

"கொடுக்கக் கூடாதுன்னுதான் நினைச்சேன்...சோகமா கதை சொன்னார். நிச்சயம் ஓரிரண்டு மாசத்துலே கொடுத்திடுறேன்'னார். ஒரு வருசத்துக்கும் மேலாச்சு...ஹ்ம்ம்ம்..."

 நண்பருக்கு பணம் திரும்ப வராவிட்டாலும் சாக்கு போக்கு சொல்லி தம்மை ஏமாற்றி ஒளிந்து கொண்டிருக்கும்  கடன் வாங்கியவரின்  செயல் சினமூட்டியது.

ஒரு ஆபத்து அவசரத்துக்கு 'கைமாத்தாக' வாங்குவது இயற்கை. ஆனால் நாணயம் தவறலாமா? நாக்கில் சுத்தம் அவசியமன்றோ... வாங்கியதை திருப்பிக்   கொடுக்கும்போது இப்படிச் செய்தால் பின்பு உண்மையான காரணங்களோடு  உதவி கேட்டு வருவோருக்கு மற்றவர்கள் எப்படி உதவி செய்வார்கள்...?

அதுமட்டுமல்ல, உதவும் மனப்பான்மை உள்ளோரிடம் சுமூகமாக பழகவேண்டாமா...? அதுவரை நன்றாக பழகியவர்கள், கடனை பெற்றபின்பு பழகுவதை குறைத்துக்கொள்வதும், பார்த்தும் பார்க்காதது போல போவதும் அந்த நட்பையும் உறவையும் கொச்சைப்படுத்துவதாகாதா???

"அவர் நல்ல நண்பர்தான். ரொம்ப நாள் பழக்கம். அதன் அடிப்படியில் தான் கொடுத்தேன். அவருக்கு அப்போ என்ன கஷ்ட்டமோ அது இந்நேரம் தீர்ந்திருக்கும். அதனால பணத்தை திருப்பிக்கேட்டேன். இப்ப, மனதை வருத்தப்படுறது மாதிரி நடந்துக்கிறார்."

நானும் கொடுத்துதவி இருக்கிறேன். ஆயினும், மனதினில் ஒரு நெருடல். அவரின் அனுபவம் நமக்கும் ஒரு பாடம்தான். தொகை எவ்வளவென்பது இங்கு கேள்வி அல்ல. நடந்துகொள்ளும் விதமே நம்மை நாம் எக்குல மக்கள் என எண்ண வைக்கிறது. வாக்குச் சுத்தத்தினைக் கடைபிடிப்போர் உயர்ந்தவரென்றும், பித்தலாட்ட மனமுடையோர் தாழ்ந்தவரென்றும் முன்னோர் சொன்னது பொருள் புதைந்த வாக்கியமன்றோ...

செத்தால்தான் சுடுகாட்டுக்கு பாதை தெரியவேண்டுமா, என்ன? நம்மை சுற்றி நடப்பவைகளை வைத்தே சுதாகரித்துச் செல்லும் சுபாவம் வேண்டும்.

கடன் வாங்குபவர் ஒரு நாள்தான் நம் வீட்டுக்கு நடக்கிறார். கொடுப்பவர்களோ ஆயிரம் முறை நடக்கவேண்டி இருக்கிறது கொடுத்த பணத்தை திரும்பப்பெற. இது கடன் பற்றி சொல்லப்படுகிற நகைச்சுவை. வெறும் நகைப்புக்கு மட்டுமன்று, பொதிந்திருக்கும் உட்கருத்து நமது கௌரவத்தின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

"இல்லாதபோது வாங்குறாங்க. இருக்கும்போது கொடுக்கலாமில்லையா...?"

 நாம் பிறரிடம் கடன் வாங்கும் போது எவ்வளவு சிரமப்படுகிறோமோ அந்தளவு பாதுகாப்பு அம்சங்களை கண்டறிய   வேண்டும் பணம் கை மாறும் முன். இல்லையேல், கொடுத்தப் பணம் ஒரு வழிப் பயணம் போன கதைதான்.

காலம் மாறுது...

இனி உலக அறிவு இல்லாமல், சென்றடைய வேண்டிய இலக்கு இல்லாமல் நாம் வாழ்வது நாளுக்கு நாள் சிரமமாகிக் கொண்டு  வருகிறது. அறிவு ஜீவிகளாக இருக்காவிடினும், நமக்குத்  தேவையான தெளிந்த அறிவை அடைந்தே ஆகவேண்டிய அவசியம் வந்துவிட்டது.

இந்த நிலையில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளாவிடில், மற்றவர்கள் சொல்லுவதையே நாம் எப்போதும் கேட்டு தலை ஆட்டவேண்டி இருக்கும். எல்லா விசயத்திலும் அவர்கள் நம்மை விட ஒருபடி முன்னே நிற்பார்கள்.

ஆக, மற்றவர்களுக்கு இணையாக நாம் வாழ  பொது அறிவும், நுண்ணறிவும் நமக்குத் தேவை.

'இன்டர்நெட்' என்னும் 'கம்யூட்டர்' உலகம் நமக்கு அந்த வாய்ப்பினை வழங்குகிறது.

உலகம் என்பது இப்போது கையடக்க ஐபேட்டிலும், ஐபோட்டிலும், கைபேசிகளிலும்  வந்துவிட்டது.  எதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள நினைத்தாலும் அவை அனைத்தும் ஒரு சில வினாடிகளில் நம் கண் முன்னே காட்டிவிடும் இது போன்ற கையடக்க கருவிகள்.

சர்வதேச நிகழ்வுகளைக்கூட நம் வீட்டில் நடக்கும் சர்வ சாதாரண ஒன்று போல நம் பார்வைக்கு கிடைக்கின்றன சில நேரடி இணையதளங்கள் மூலமாக.

"காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாறவேண்டும்
நம்மால் நாடும் மாறவேண்டும்"

ராசிகளின் பலன்களும் அப்பாவி மக்களும்...

எனக்கு ஜாதகம், ஜோசியம், கிரக நிலைப் பலன்கள் போன்றவற்றில் அவ்வளவு நம்பிக்கையோ ஆர்வமோ இல்லை.

தொலைகாட்சியில் "இந்த நாள் உங்களுக்கு எப்படி?" என்றவாறு  ஒவ்வொரு நட்சத்திரத்துக்குமான நன்மை தீமைகளை அலசுவதாக கூறிக்கொண்டு தினமும் ஒரே விசயத்தை திரும்பத்திரும்ப ஒப்புவிக்கும் ஜோதிட குறிப்புக்கள் எனக்கு அதிக வெறுப்பைத் தருவன வாகும்.

அதிலும் "உங்களுடன் இருக்கும் நண்பர்களால் உங்களுக்கு இன்று பாதிப்புகள் வரலாம்" என தினமும் இடம்பெருகின்றது. இது முறையில்லாத ஒழுக்கமில்லாத குறிப்பு.

உடன் இருக்கும் நண்பர்களினால் மட்டுமா பாதிப்பு?  உறவினர்களினாலும் உடன் பிறந்தோராலும் பாதிப்புகள் இல்லையா?  தினமும் நண்பர்களை பலிகடா ஆக்குவது சரியாகப் படவில்லை. அறிவுக்குப் பொதுந்துவதாகவும் இல்லை. பின்பு உண்மை நட்பின் மேல் எப்படி நம்பிக்கை வளரும்?
இதுபோன்ற தினப் பலன்களைக் கேட்போர் அனைவரும் அறிவாளிகள் அல்ல. அனுபவம் குறைந்த சிலர் இதைக் கேட்கும் போது, தங்களின் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம்....இவற்றை நம்பி.

ஒரு உதாரணம் சொல்வேன். எனக்கு பழக்கமான குடும்பத்தில் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். மறு நாள் மகனின் தந்தையார் நோயில் வீழ்ந்தார். மருத்துவரைப் பார்ப்பதை விடுத்து ஜோசியம் பார்பவரிடம் போயினர். புதிதாக வீட்டுக்கு வந்த ஒருவரால்தான் வீட்டுப் பெரியவர் நோயுற்றார் என அந்த ஆசாமி உளறி வைக்க, அதை நம்பிய அந்த அறிவுக் கொழுந்துகள், பாவம் அந்த அப்பாவி இளம் மனைவியை தனிமைப் படுத்தி சில நாட்களில் அவரின் தாய் வீட்டுக்கே அனுப்பி வைத்துவிட்டனர்.

திகைத்துப்போய்,  நம்ப முடியாமல், ஆச்சரியத்தில் கண்கள் அகல விரித்தபடி அக்கம் பக்கத்து வீட்டார் பார்த்துக் கொண்டிருக்கத்தான்  முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

வாழ்க்கையின் முக்கியத்துவம் புரியாமல் என்னமோ ஏதோ என வாழ்பவர்கள் இவர்கள். திருமணம் எவ்வளவு முக்கியமான விசயம். அதில் சொல்லப்படுகின்ற மந்திரங்கள் காதில் இருந்து மறைவதற்குள் இந்த மணப் பெண்ணை கேள்விக்குறியாக்கி விட்ட இவர்களை என்னவென்பது. விரும்பி நடந்ததா அல்லது திணிக்கப்பட்டதா..?  திருமணத்திற்கு முன்னால் யோசிக்கவேண்டிய பலவற்றை பலரும் திருமணம் முடிந்த பின்பே யோசிக்கிரார்கள்.

காலையில் தொலைகாட்சியில் ராசிபலனில் சொன்னதும், மாலையில் ஜோசியம் பார்க்கும் இடத்தில் சொன்னதும் ஒரே மாதிரியாக சரியாக உள்ளதாம்....வீட்டுக்கு வந்த புது உறவு சரியில்லை என்று. அடப் பாவிகளா.... திருமண ஜாதகம் பார்க்கும் போது இவை எல்லாம் மறைக்கப் பட்டு விட்டதா என்ன?
மிகச் சாதாரணமாக கையாள வேண்டிய ராசி பலன்கள் வாழ்வை சிதைக்கும் ஒன்றாக உருமாறி வருகின்றன.  அதை வழங்குவோர் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுமளவுக்கு, நடைமுறைக்கு ஏற்ற வகையில்  சொல்வதை விடுத்து மற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாவது போல் செய்வதை மாற்றிக் கொள்ளவேண்டும்.

உண்மையென எண்ணி கற்பனக் கதைகளையோ, நடைமுறைக்கு ஒவ்வாத தகவல்களையோ ராசி பலன் எனச் சொல்லும் போது பாதிப்புக்கு உள்ளாவோரையும் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
கல்வியறிவில் சம பலத்துடன் இல்லாதோர், காதில் விழும் அனைத்தையும் நம்புகின்றவர்களாகவே இருக்கினறனர் இன்னமும். 

ஜோதிடத்தில் நேர்மையானவர்கள் மிகவும் குறைவு. 'வாய்ப்பேச்சில் வீரர்கள்' என்பது இவர்களுக்கும் பொருந்தும். இல்லையேல் இவர்கள் பிழைப்பிற்கு என்ன செய்வார்கள்...? ஆயினும் ஒன்றைச் சொல்வேன். உங்கள் ராசி பலன் சொல்லும் திறன் அவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பிற்கு நீங்களும் ஒரு உபகாரணம் ஆகிறீர்கள். அதன் விகிதப்படி பாவமும் தண்டனையும் உங்களுக்கே...

 நடப்பவை நடந்தே தீரும்... அதை யாராலும் மாற்றிட முடியாது. உதிக்கும்போது விதிக்கப்பட்ட எதனில் இருந்தும் நாம் ஓடி ஒளிந்திட முடியாது. நடக்கும் அனைத்தும் நன்மைக்கே என்பது பலரும் உணரத்தொடங்கி விட்ட ஒரு கருத்து.

"இதைச் செய்திருந்தால் அதைத் தடுத்திருக்கலாம், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிருக்கும் " என்று சொல்லப் படுகின்ற எதிலும் எனக்கு உடன்பாடில்லை. அவை நாம் நமக்கு ஆறுதலாக சொல்லிக்கொள்ளும் சில, அவ்வளவே.

ஒரு சிலர் பணம் பண்ணுவதற்காக நான் ஏமாறத் தயாராக இல்லை. அதற்காக என்னை யார் எப்படிச் சொன்னாலும் எனக்கு அதனைப் பற்றிய கவலையும் இல்லை.

பூ வாசத்திற்கும் குப்பைகளின் நெடிக்குமான வித்தியாசம் எனக்குத் தெரியும்.


 

Sunday, 19 May 2013

பணம் தேவையே, ஆனால்...

இளம் பிராயம் முதல் பணம் என்பது எனக்கு முக்கிய ஒன்றாகவே மற்றாவர்களைப் போல் எனக்கும் பட்டது. அதனை அடைய எல்லோரும் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதனை பார்க்கும் போது பணத்தின் தேவை எவ்வளவு பெரியது என விளங்கத்தொடங்கியது.

எனது வெவ்வேறு பிராயத்தில் வெவ்வேறு வித உணர்வுகளை உண்டு பண்ணிய பணம் என்னிடம் இல்லாது, என்னை வதைத்த காலமும், அனுபவமும் நிறையவே உண்டு. ஆனால் அதற்காக நான் என் கொள்கைகளையும் பிடிப்புகளையும் விட்டுக் கொடுத்ததில்லை.
குறுக்குவழிகளில் அதனை அடையும் குணம் எனக்கிருந்ததில்லை. அதுபோன்ற சிக்கலான சூழ் நிலைகளை சமாளிக்கும் வழிகள் எப்படியாவது ஒன்றிரண்டு எண்ணத்தில் உதித்து தேவைக்குத் தகுந்த பொருள் ஞாயமான வழிகளில் வந்தடைந்ததை இப்போதும் மன மகிழ்வுடனேயே எண்ணிப்பார்க்கிறேன்.

ஈய லம்பத்தில் வேலை செய்த போது பல்வேறு சந்தர்ப்பங்கள் கிட்டியபோதும்கூட, அதன் லாவகப் பிடியில், நேர்மைக்குப் புறம்பாக நான் செயல்பட்டதில்லை, .  உடன் வேலை பார்த்த பலரும் மூன்று நான்கு வீடுகளின் அதிபர்களாக வலம் வரும்போது, நான் பல காலம் வாடகை வீட்டில் இருந்ததும் எனக்கு தெரிந்திருந்ததுதான். ஆயினும் தகாத வழிகளில் வரும் பணத்தின் மேல் எப்போதுமே ஆசை வந்ததில்லை.

உறவினர்களிலும் நண்பர்களிலும் பலர் எப்படியும் வாழலாம் என பணத்தை அடைவதில் தீவிரம் காட்டுகின்றனர். மாட்டிக்கொண்டு அவமானமும் அடைகிறார்கள். அந்த  நேரத்தில் சுற்றி இருப்போர் அவர்களை எப்படி பார்ப்பார்கள், எவ்விதம் எண்ணுவார்கள் எனும் பயம் இல்லாமலே பலரும் தொடர்ந்து அடாத, தகாத வழிகளில் பணம் புறட்டுகிறார்கள். தங்கள் செயலால் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் நன்மதிப்பும் பாதிக்கப் படுவதை இவர்கள் அறியவில்லையோ...? இப்படி ஆணும் பெண்ணும் கேவல நிலைகளில் பணம் தேடுவதை பார்க்கையில் ஆச்சரியம் மேலிடுகிறது.

அரசாங்க பட்ஜெட்டில் எக்கொனொமிஸ்டுகள் போடும் கணக்கினைப்போல , சில நேரங்களில் அவர்களையும் மிஞ்சிய துள்ளியமான கணக்குகள் போட்டு குடும்பத்தை மேம்பாடடைந்த நிலைக்கு கொண்டுவந்த அனுபவமும், ஆனந்தமும் என் மனவிக்கும் எனக்கும் அதிகம் உண்டு.

குடும்பத்தில் எந்த முக்கிய செலவுகளையும் தள்ளிப் போட்டதில்லை...கடன் கேட்டதில்லை...பிறர் மெச்சும்படி வாழ நினைத்ததும் இல்லை.
போதும் என்ற மனமே சீரான எங்கள் வாழ்வின் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது.

நான் உங்கள் வீட்டு பிள்ளை ...


நான் உங்கள் வீட்டு பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேர் அறிஞர் காடும் பாதை

காலம் தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயறம் போக்கும்
செயலே எந்தன் சேவை

இதயம் என்பது ரோஜாவானால்
நினைவே நறுமணமாகும்
எங்கே இதயம் அங்கே வாழும்
அன்பே என்னை ஆளும்

நான் உங்கள் வீட்டு பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேர் அறிஞர் காடும் பாதை

கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்ட்றல் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த செல்வம்
பேசும் மொழியே கோவில்
இதை மறந்திடாமல் வாழ்ந்து வந்தால்
கோபுரம் ஆகும் கொள்கை

நான் உங்கள் வீட்டு பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேர் அறிஞர் காடும் பாதை

உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும்
உலகில் நிச்சயம் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும்
உலகம் செழிப்பதுண்டு
எதுவந்தாலும் ஏற்றுக்கொண்டால்
துணிவே துணையாய் மாறும்
இளையோர் கூட்டம் தலைமை தாங்கும்
பூமியே புதிய பூமி

Suba's birthday...





அமுதா இருவராக...