Tuesday, 31 December 2013

வலைப்பூவும் முகநூலும்...


புத்தாண்டுக் களிப்பில் குடும்பத்தினரோடு ஜோலியாக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம் நாம்.

இம்மகிழ்ச்சி ஒவ்வொரு நாளும் தொடர்ந்துவர இறைவனை வேண்டுவோம்.

விளையாட்டாக ஒரு  வலைப்பூவினைத் தொடங்கி இன்று 796வது பதிவினை   இப்போது உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் இங்கு பதிவுலகில் நுழைவதற்கு பெரிதாக ஒரு காரணமும் இல்லை. எதையும் சாதிக்கவோ, மற்றவர்களுக்கு கருத்துச் சொல்லவோ வலைத்தளத்திற்கு வரவில்லை.

கற்ற தமிழ் மறந்திடக்கூடாதே என்னும் எண்ணத்திலும், என்னுடைய சில நண்பர்களின் வற்புறுத்தலினாலுமே  புகைப்பட ஆல்பமாக இருந்த இந்த வலைப்பூவில் சிறிது சிறிதாக எழுதத் தொடங்கி இன்று 800வது பதிவினை
தொடும் நிலைக்கு வந்துள்ளேன்.

மலேசிய இந்தியர்கள்  நல்ல தமிழில் பேசுபவர்கள். முடிந்தளவு ஆங்கிலம் கலக்காத தமிழில் தான் உரையாடுவோம். அந்த நல்லதொரு முறையை எழுத்திலும் தொடராலாம் என என்னைப்போல் சில நண்பர்கள் எண்ணியதின் தொடர்ச்சியே இப்படி சில வலைப்பூக்கள்.

இருப்பினும், ஆங்காங்க ஒரு சில இடங்களில் வல்லின, மெல்லின, இடையின தவறுகள் இருக்கலாம். அதற்கு ஒரு காரணம், இங்கு தங்கிலிஷ் முறையில் தமிழ் பயன்படுத்தப்படுவதால் தான். சில எனது கண்களில் இருந்து தவறிவிடபிழைகள் நேர்ந்து விடுகிறது.

மனதில் எழும் எண்ணங்களை பலருடனும் கலந்துகொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.  அறிவுரை என்றில்லாமல், நான் என்ன நினைக்கிறேன் என்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான். யாரையும் திருத்தும் நோக்கம் எனக்கில்லை.

" ஐயா சாமி, நான் அதற்கு எழுத வரவில்லை... தமிழில் எது செய்தாலும் இனிமை என்பார்களே அது போல ஏதோ எனக்கு தெரிந்த ஒரு சில விசயங்களை எழுதுவதில் ஒரு மகிழ்ச்சி. சிலர் படித்தாலும் அதில் ஓரிருவர் ரசிக்கும் படி இருக்கிறதென்று சொன்னாலும் போதும். அவ்வளவுதான்".
'பெரிய பெரிய மகான்கள் சொல்லியே கேட்காத போது, நாம சொல்லியா கேட்க போறாங்க...?  அதெல்லாம் இல்ல... '

ஐயா சுகிசிவம், "பொழுது போக்கிற்காக எழுதாதே " என்பதையும் மீறி, இங்கு நான் எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெட்டியாக வேறெதுவும் இல்லாத நிலையில்  பொழுதை போக்கத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். (ஐயா மன்னிப்பாராக...).

ஆயிரம் எண்ணங்கள்  என்பது நமது பதிவுலகத் தலைப்பு. ஆயினும், இங்கு ஆரம்ப காலத்தில் இரட்டைவேடம் கொண்ட புகைப்படங்களே  அதிகம் இடம் பெற்றன. இன்னும் அப்படிச் சில படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இடையிடயே சில கட்டுரைகளையும் பதிவிடுகிறேன். இவ்வலைப்பதிவினை பார்வையிட்டோர் எண்ணிக்கை பதினேழாயிரமாக தற்போது உள்ளது மன மகிழ்ச்சியைத் தருகிறது.

கடந்த மாதம் முழுவதுமாக முகநூலில் நாட்டம் அதிகரித்துவிட, வலைப்பூவில் பதிவுகள் சற்று குறைந்துவிட்டன.

பலரும் சுட்டிக்காட்டினர் இதை.

அதனால், முகநூல் பதிவிலும் நமது வலைப்பதிவு முகவரியை தொடர்ந்து கொடுத்து வருகிறேன். இங்கில்லாவிடில் அங்கிருப்பேன் என்று இங்கே வருபவர்களுக்கு கோடிட்டு காட்டவே அப்படி ஒரு யுக்தி. இது எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறதோ தெரியவில்லை.

மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் இந்த வலைப்பதிவே சிறந்தது என்பது ஒரு உண்மையாகும்.  சூசகமாக தெரிவிப்பதில் முகநூலும், தெளிவாக விளக்கிட வலைப்பதிவும் முன்னுதாரணங்களாக திகழ்கின்றன.

இங்கொரு கால், அங்கொரு கால் என சிலர் கூறினாலும், முகநூல் நண்பர்களை இங்கிழுக்க இருவிடங்களிலும் தலைக்காட்டுவதுதான் நல்லதென எனக்குப்படுகிறது.

இன்னும் பல விசயங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருப்பதால், வரும் வருடத்தில் இன்னும் பல பயனுள்ள  கருத்துக்களை மனந்திறந்து இங்கு பதிவிட உள்ளேன்.

அனைவரும் வருக....

புத்தாண்டு பிறக்கிறது...

எல்லாமும் மாறிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் மாறிக்கொண்டு இருக்கிறோம். நீங்களும், நானும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம். உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ  மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையே, அன்றிருந்த சுற்றுப்புறச் சூழல் இன்றில்லை எனும் நிலையும் ஒவ்வொரு வருடமும் மாறிவருவதை நாம் பார்க்கிறோம்.

மாற்றம் ஒன்றே மாறாததென இதைத்தான் சொன்னார்களோ....


2013ம் ஆண்டும் மாறிவிடப்போகிறது... 2014குக்கு வழி கொடுத்து கடந்த வருடம் எனும் பட்டியலில் சேரவிருக்கிறது.  இவ்வருடத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கையில் மன மலர்ச்சியும் இருந்திருக்கலாம், மன அதிர்வுகளும் நிகழ்ந்திருக்கலாம்.

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. வேறுபாடான உணர்ச்சிகளோடு சென்றதை எண்ணிப்பார்க்கும் தருணம் இது. நடந்த அனைத்தும் நன்மைக்கே என ஏற்றுக்கொள்வதே நம் வாழ்வில் சிறக்க நாம் எடுக்கும் முடிவாகும். சென்றதை செலவெனக் கொண்டு, வருவதை வரவில் வைக்கும் துள்ளல் குணமே இன்று நமக்குத் தேவை.

புது வருட தொடக்கம் பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்.

முடிந்த ஆண்டில் செயல் படுத்த முடியாதவைகளை இந்த ஆண்டு முடித்திட சபதம் கொள்வோறும், தேவையற்ற பழக்கங்களையும், பயனில்லாத கொள்கைகளையும் உதறித்தள்ளிட முடிவெடுத்திருப்போரும் மீண்டும் ஒருமுறை தங்களது பட்டியலைச் சரி பார்த்திடும் வேளை இது.

புது வருட தீர்மானங்கள் பலவும் படாத பாடு பட்டிருக்கொண்டிருக்கும் இப்போது.  நான் இதைச் செய்யப்போகிறேன், அதைவிடப்போகிறேன் என பலர் எண்ணம் கொண்டிருக்கலாம். நல்லதை செய்ய எண்ணும்போது மகிழ்ச்சியடைவது இயற்கை. இந்த மகிழ்ச்சி திட்டமிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியபின் பல மடங்கு பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆயினும் ஆண்டுக்கொருமுறை ஆண்டின் இறுதியில் தீர்மானங்களை பட்டியலிடுவதென்பது, அதே கால அளவில் சத்து நிறைந்த உணவுகளை உண்பது போல எனலாம். ஒரு வருடத்தில் ஓரிருமுறை நல்ல உணவை சுவைத்துவிட்டால் மட்டும் போதுமா? வருடம் முழுவதும் தொடர்ந்து உட்கொள்ளவேண்டுமல்லவா... ஆக, தீர்மானங்களும் அப்படியே. புத்தாண்டின் போது  நாம் போடும் தீர்மானங்கள் அவ்வப்போது சரிபார்க்கப்படவேண்டும்.
தேவைப்படும்  மாற்றங்களை செய்து  ஆண்டு இறுதிக்குள் ஆண்டின் துவக்கத்தில் நாம் எழுச்சியுடன் செய்த தீர்மானங்களை  நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். அதுவே ஆக்கப்பூர்வமான தீர்மானமாகும்.

நம்முடைய தனிப்பட்ட  தீர்மானங்களோடு இந்த சிலவும் சேர்ந்தால் பலருக்கும் நன்மையாய் அமையும்:-

  -   அனாவசிய அதிரடி செலவீனங்களைக் கட்டுப்படுத்தி, சேமிப்பை உயர்த்துவோம்.
  -   சாலைகளில் பொறுமை  கடைபிடிப்போம்.
  -   பெரியோர்களை மதிப்போம்.
  -   ஏழை எளியவருக்கு உதவுவோம்.
  -   மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கவனிப்போம்.
  -   இயற்கையை எதிர்த்து எதுவும் செய்யாமல் இயற்கையோடு ஒன்றிப்போவோம்.

மலேசிய நாட்டில் நாமும் நம் சமூகமும் முன்னேற நிறையவே சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது பற்றி திட்டமிடலாம,  நம் மொழி வளர தொடர்ந்து நாம் செய்யவேண்டியதையும் நினைவில் கொள்ளலாம்,  நாம் முன்னேறும் ஆதே நேரம், நம்மோடு வழிதெரியா  மற்றவர்களையும்  தோள் கொடுத்து கூட்டிச் செல்லலாம்.

எங்கு பார்க்கினும் கோயில்கள் எனும் நிலை வரத்தொடங்கிவிட்ட இன்று, நம்முடைய சமய அறிவை பெருக்கிக் கொள்ளும் அதே நேரம்,  தவறான சிந்தனைகளில், மூடப்பழக்கங்களில் மூழ்கிக் கிடப்போரை நல்வழி படுத்தும் அமைப்புக்களில் சேர்ந்து அவர்களுக்கும் ஒரு கை கொடுக்கலாம்.

வழக்கமான  சுய நலப்போக்கில்லேயே சிந்திப்பதை விடுத்து, இப்படி எத்தனை எத்தனையோ புது வருட திட்டங்களாக பட்டியலிட்டு அதன் படி நடக்க முயலலாம். பொது நலமும் நமது தேடல்களில் ஒன்றாக இருப்பது அவசியம். இதுவே நாம் தன்னிறைவு பெற்றவராய் திகழ உத்தமமான வழி.


குடும்பத்தில் அன்பு நிலைக்க பணிவை கடைபிடிப்போம்... 
வீட்டிலுள்ள பெரியோர்களை வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற்று இனிமையாக இந்த புது வருடத்தினை தொடங்குவோம்...

வயது பேதம் பார்க்காது, புத்தாண்டினை வரவேற்க காத்திருக்கும் இவ்வேளையில், நமது  பாதுகாப்புக்கும், நம்மைச் சுற்றி உள்ளோர் பாதுகாப்புக்கும் உரியனவற்றைச் செய்து, எல்லோரும் மன மகிழ்வுடன் வாழ்வில் சிறக்க, 2014ம் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை  அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

" இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பானாக...."

Sunday, 29 December 2013

Friday, 27 December 2013

2013ல் WWE ரெஸ்லிங் ...

மல்யுத்தம், குஸ்தி என பெயர்கள் இருந்தாலும், WWE ரெஸ்லிங் என வரும்போது அதன் சுறு சுறுப்பே தனி. இரத்தம் சொட்டச் சொட்ட ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ஒரு வித பீதியை அரங்கினுள் ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் கலை தெரிந்தவர்களால் நடத்தப்படும் இ ந் நிகழ்ச்சி பலரின் வரவேற்பையும் பெற்ற ஒன்று...

2013ம் ஆண்டில் இடம்பெற்ற சில சுவாரஸ்யமான காட்சிகள்...


















Tuesday, 24 December 2013

கிரிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...


கிரிஸ்துமஸ்  கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய கிரிஸ்துமஸ்  வாழ்த்துக்கள்...

Dr Arul...




Dr Arul, once a neuro specialist in Banting... now migrated to Auckland, NZ came down to see me this evening. The BEST health related problem solver Banting town has lost. He had contacts all over Malaysia and could easily fix an appointment at any hospital if the sickness is severe, hence so much liking by his patients. "Dia mesti bolih..." ( he surely can ) was their favourite motto about him... Though maintaining low profile, he still helps out some old friends like me... I find 'doctors doctors' everywhere these days but none like him. He remains the one and only "REAL DOCTOR" around.

சிறந்த சேவைக்கு நம் வட்டாரத்தில் இருவர்...


உயரிய சிந்தனைகள் எந்த இடத்திலும் தோன்றலாம்... இங்கு 'அங்கிள் ஜாக் காலை உணவகத்தில்' தங்களின் அடுத்தக்  கட்ட  திட்டங்களைப் பகிர்ந்து கொள்ளும் திரு செல்லதுரையும், திரு ரகுவும்...

"ஏதோ ஆசிரியராகப் பள்ளிக்கு வந்தோம், பணி செய்தோம். இனி நம்ம வேலையை நாம் பார்க்க வேண்டியது தான்...." என எண்ணி நடந்துகொள்ளுவோரே நம்மிடையே அதிகம்.

அப்படி சாதாரணமாக ஆசிரியராய் பணியைத் தொடங்கி, தனது திறமையினால் மாணவர்களிடத்தும், பெற்றோர்களிடத்தும் நற்பெயரைப் பெற்று தொடர்ந்து பல பதவி உயர்வும் பெற்று வெற்றி நடைபோடும் ஆசிரியப் பெருமக்கள் மிகவும் குறைவு. 

அந்தக் குறையை தீர்க்கிறார்கள் நம் சமூகத்தின் முக்கிய தூண்களாக திகழும் இந்த இருவரும். இவர்கள், முறையே பூகோளம் மற்றும் சரித்திரப் பாட ஆசிரியர்களாக அதீத திறமையுடன் செயலாற்றிய, செயலாற்றிக் கொண்டிருப்பவர்களாகும்.

ஐயா திரு. ஐ.செல்லதுரை அவர்கள், மெதொடிஸ்ட் (எம் ஈ எஸ்) இடை நிலை பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியாரக அனைத்து இன மாணவர்களுக்கும் சேவை ஆற்றியதன் வழி தனிப்பெரும் இடத்தை பெறுகிறார். பணி ஓய்வில் வீட்டில் வெறுமனே இல்லாது மதப் பிரச்சாரத்தில் தம்மை இணைத்துக்கொண்டிருக்கிறார்.

திரு ரகு, 'சரித்திர ஸ்பெஷலிஸ்ட்' எனும் பட்டப் பெயருக்குச் சொந்தக்காரர். இவரும் எல்லா இன மாணவர்களுக்கும் கல்வியின் அவசியத்தையும், கற்காவிடில் படப்போகும் துண்பங்களையும் துயர்களையும் 'கவுன்சலிங்' முறையில் சொல்லித்தந்து  பல மாணவர்களின் வாழ்வில் மறக்கமுடியா நபராகி வருகிறார். அத்துடன்,  'இந்து தர்ம மாமன்ற  பந்திங் அருள் நிலையத்தின் தலைவராகவும் தனது சேவையை தொடர்ந்து வருகிறார்.

எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் தங்களைத் நாடி உதவிக்கு வரும் எவரையும் இவர்கள் மறுப்பதில்லை.  அப்படி இவர்களிடம் உதவி பெற்று நல்ல நிலையை அடைந்தோர் இவர்களுடனே சேர்ந்து இவர்களின் சேவையை தொடர்வது மன மகிழ்ச்சி தரும் காட்சி.

வாய்ச்சொல்லில் வீரர்களாக வலம் வரும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த இருவரும் தங்களின் சீரிய குணங்களினால் வேறு படுகிறார்கள். பொருளாதாரம் மட்டும் இலக்கல்ல, சமூக முன்னேற்றமும் தேவை என தங்களின் சிந்தனைகளில் முன்னோடிகளாகத் திகழும் இந்த இருவரும் தனிப்பிறவிகளே...

Monday, 23 December 2013

நாளை எம்.ஜி.ஆர் நினைவு நாள்...


அவர் மறைந்தும் இன்னும் மறையாதிருக்கும் அவரின் சேவைகளை மலேசிய எம்ஜிஆர் பொது நல அமைப்புக்கள் பார்த்துக்கொள்வது பாராட்டத்தக்கது... எம்ஜிஆர் இல்லாது போனாலும், அவர் பெயரில் ஏழை எளியோர் நலனடைகின்றனர் இதுபோன்ற அமைப்புகள் மூலம்.

அவர் புகழும் பெருமையும் பலவித பொதுச் சேவைகளினால் எம்.ஜி.ஆர் பொது நல மன்றங்கள் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் பெயரில் ஏழை எளியோர் இன்னும் உதவி பெற்றுக்கொண்டிருப்பது அந்த பொன்மனச்செம்மலுக்கு நாம் அளிக்கும் உன்னத நிலையாகும்.

இந்த உலகம் உள்ளவரை அவரின் நினைவு நம் மனதில் இருந்துகொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை...

வாழ்க எம்.ஜி.ஆர் சேவையும் தொண்டும்...

Friday, 20 December 2013

ஆன்மீக அறிவை ஊட்டுபவர்கள் குருக்கள்...


எங்கும் எதிலும் சந்தேகங்கள் எழலாம். ஆனால், சமய போதனைகளிலுமா சந்தேகம்...? ம்ம் ஒருவேளை, சமயத்தில்தான் அதிக சந்தேகங்களோ?

அப்படி எழும் அந்த சமயக் கேள்விகளுக்கு விளக்கங்கள் தருபவர்களே 'குருக்கள் அல்லது குருமார்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

ஐயமற அறிவு புகட்டும் அவர்களுக்கு பெற்ற தாய் தந்தையைப் போன்றதொரு உயர்ந்த இடம் நம் இந்து மதத்தில் உண்டு. அஞ்ஞான, விஞ்ஞான சந்தேகங்களைப் போக்கி நமக்கு மெய்ஞானத்தை ஊட்டுபவர்களாக குருவிற்கு உன்னதமான ஓரிடம் தந்திருக்கிறோம்..

ஆனால், அது 'குரு' அளவு மட்டுமே அந்த உயர்ந்த இடம், அதற்கு மேலில்லை. அவர்களை இறைவனாக பார்ப்பது தவறு. இறைவன் மட்டுமே இறைவனாக முடியும். மனிதர்கள் அல்ல. அப்படி இருக்க, செய்வதென்னவென்றறியாது சிறு பிள்ளைத்தனமாக குருக்களை தெய்வமெனக்கொள்வது ஆன்மீகத்துக்கு   நம் அறியாமையினால்  செய்யும் பாவம்.

Wednesday, 18 December 2013

கவனம் : பழைய பாடல்கள்...

பழைய பாடல்களில்  இறவா இசையாக பல இருக்கின்றன. அவற்றுள் தற்போது என் மனதில் ரீங்காரமிடும் தேன் துளிகள் இவை:
வெறும் வார்த்தைகளாக இல்லாமல், களிப்பூட்ட,  இலக்கிய மணத்துடன்  இன்பத் தமிழில் வந்த பாடல்கள்....

அன்பே வா
அழைக்கின்றதெந்தன் மூச்சே
கண்ணீரில் துன்பம் போச்சே
கரை சேத்திடேல் காதற்கே
அன்பே வா...

தனிமையிலே..தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா

மயக்கும் மாலைப்பொழுதே நீ போ!போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா!வா!
இன்னலைத் தீர்க்கவா!( மயக்கும்மாலை)
பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே
பசும்புல் படுக்க பாய்போடுமே (பன்னீர்)
(மயக்கும் மாலை)

தென்றல் உறங்கிய போதும்
திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா? காதல்
கண்கள் உறங்கிடுமா..?
காதல் கண்கள் உறங்கிடுமா...
(தென்றல்..)
ஒன்று கலந்திடும் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல்
கண்கள் உறங்கிடுமா..
காதல் கண்கள் உறங்கிடுமா..
(ஒன்று..)

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்

தங்கள் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

கண்களால் காதல் காவியம்
செய்து காட்டிடும் உயிர் ஓவியம்
உந்தன் அன்பெனும் சாம்ராஜ்யம்
சொந்தமானதே எந்தன் பாக்கியம்

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க

தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி

காதோடு தான் நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும் ( மலரென்ற)
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும் ( மலரென்ற)

பளிங்குனால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா...
(பளிங்குனால்..)

அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்
உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா

ஓ சாமி
ஐயா சாமி ஆவோஜி சாமி
ஐயா ராய்யா வாய்யா யூ கம்மைய்யா
ஐயா சாமி ஆவோஜி சாமி
நரிக்கொம்பிருக்கு வாங்கலியோ
(ஐயா)
ஐயா சாமி ஓ ஐயா சாமி

காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே...
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்

அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி

பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கோ தூது விட்டாள்

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்

தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி

என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி (2)
ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின்)
இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி (2)
ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின் )

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையைஅவள் பார்த்திருந்தாள்

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா... பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே
லாலால லாலால லாலா
அனுபவம் புதுமை...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
வசந்த காலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்

வாழ்வில் பலமுறை சாகிறோம் நாம்...


12 ஆண்டுகளுக்கொருமுறை நமது உடலில் உள்ள செல்கள் இறக்கின்றன. மீண்டும் புதுப் புது செல்கள் தோன்றுகின்றன. அதனால் தான் நாம் அன்றைய பழைய படங்களில் இருந்ததைப் போல இன்று இருப்பதில்லை. நாம் நம் வாழ்வில் பலமுறைச் சாகிறோம் என்று இதனையே குறிப்பிடுவார்கள். வாழ்க்கை இப்படி இருக்க இறப்புக்கு ஏன் மனிதன் பயப்படுகிறான்....?

- "மஹாபாரதம் 20 மணி நேர தொடர் பேருரையில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள்.

Tuesday, 17 December 2013

SDB & PALM GARDEN days....

 A year before the closing of Selangor Dredging Berhad.... in 1991
( At the centre with a handbag and a diary is our Dredgemaster Mr Cheok Yaw Seong )

This was in 1994 at the Maintenance Department's family day function in PALM GARDEN GOLF CLUB

Tuesday, 10 December 2013

படித்ததில் பிடித்தது...பகுத்தறிவுள்ள இந்துமதம்

காலப்போக்கில் பல தரமான புத்தகங்களை நாம் மறந்துவிடுகிறோம். பல காரணங்கள் இதற்கு உண்டு. அவற்றுள் ஒன்று, பதிப்பாளர், புத்தக ஆசிரியர் போன்றோர் அந்தந்த புத்தகங்களினால் பெற்ற இலாபம் போதும், இனி எதற்கு மறுபதிவு என எண்ணியிருக்கக்  கூடும். ஆயினும் மனிதர்களுக்கு நன்மை
தரக்கூடிய அரிய விசயங்களை கொண்டிருக்கும் புத்தகங்கள் திரும்பத் திரும்ப பதிவிடப்பட்டு, விளம்பரப் படுத்தப் பட்டு  மக்களைச் சென்றடையச் செய்வதில் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு முனைப்பு எப்போதும்  இருக்க வேண்டியது அவசியம்.

அந்த வகையில், பல வருடங்களுக்கு முன் அச்சிடப்பட்டு வெளிவந்த "பகுத்தறிவுள்ள இந்துமதம்" எனும் புத்தகம் அன்மையில் நான் படித்தவற்றுள் என்னைக் கவர்ந்த ஒன்றாகும்.

"வியப்புக்குரிய விஞ்ஞான விசயங்கள்" என அட்டையிலேயே அதன் உள்ளடக்கத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

நான் ரசித்த அந்த புத்தகத்தில் இருந்து முதல் அத்தியாயத்தை அப்படியே இங்கே உங்களின் ரசனைக்குத் தருகிறேன். நீங்களே படித்து முடித்து அதன் தரத்தை சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இன்னும் பல பிரதிகள் வாங்கி அதனை மற்றவருக்கும் பகிர்ந்து நம் மதத்தின் உண்மைகளை விளக்க உங்களால் ஆனதைச் செய்யுங்கள். பழையது தொடரும் போதுதான் இளையோர் அதைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இனி புத்தகத்தின் முதல் அத்தியாயம்...

சிவன் சக்தி பற்றி சிந்தியுங்கள்!

இயற்கையின் வடிவாய் இன்ன இடமென்றில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதே பிரம்மம்.

அணுவிலும் பிரம்மம் உண்டு.
மனிதனிலும் பிரம்மம் உண்டு.
அண்ட பிரம்மாண்டங்களிலும் அந்த பிரம்மம் உண்டு.

உள்ளார்ந்த அதன் சக்தி வடிவம் அனைத்துப் பொருள்களிலும் ஒரே தத்துவத்தின் அடிப்படையில்தான் இயங்கி வருகிறது.

நாம் மண் என்றும் கல் என்றும் மரம் என்றும் நினைக்கும் ஜடப்பொருள்களின்
நுண்ணிய அணுத்துகள்களுக்குள்ளேயும் உயிரியக்கம் நடந்து வருகிறது.

அந்த அணுக்களின் உயிரியக்கமே அண்டம் வரை  வியாபித்திருக்கிறது.

ஊசிமுனையிலும் பல்லாயிரம் மடங்கு சிறியதான ஒவ்வோர் அணுவிலும், நேர் மின்னாற்றலும் எதிர் மின்னாற்றலும் கொண்ட இரு சக்திகளின் சுழற்சி ஓயாமல் நிகழ்ந்து வருகிறது என்பது இயற்கையின் தத்துவம்.

விஞ்ஞானம் சொல்கிறது அவை 'புரோட்டான் - எலக்ட்ரான்" என்று.
அதற்கு இந்துமதம் சொல்லியது: அவையே " சிவம் - சக்தி" என்று.


அணுவின் இயக்கத்திற்கு ஆதாரமான இந்த சிவமும் சக்தியுமே, அனைத்துலகிலும் அண்ட பேரண்டங்களிலும் உயிரியக்கம் தருகின்றன.

அணுவில் சுழலும் புரோட்டானும் - எலக்ட்ரானுமே சிவமும் சக்தியும் என்றால்,
-  கருவுக்குக் காரணமாகும் விந்தணுவும் - சினை முட்டையுமே சிவமும் சக்தியும்.
-  நுண்ணுயிர்க்குத் தேவையான வெப்பமும் - ஈரமுமே சிவமும் சக்தியும்.
- மூச்சுக்குள் நிலவும் வலக்கலையும் - இடக்கலையுமே சிவமும் சக்தியும்.
-  உடலுக்கு உரமூட்டும் பகலும் - இரவுமே சிவமும் சக்தியும்,
-  உயிர்களுக்கு வாழ்வளிக்கும் வெய்யிலும் - மழையுமே சிவமும் சக்தியும்,
-  அணுவில் தொடங்கி அண்டம் வரை ஒரே பௌதிக விதியே அடங்கியிருக்கிறது.

பாஸிட்டிவ்வும் நெகட்டிவ்வும் சேர்ந்தால்தான் மின்சாரத்துக்கு சக்தி வரும். ஒன்றுக்கொன்று நேர்மாறான சிவ சக்திகளின் இணைப்பே உயிரியக்கத்தின் தத்துவம்.

இந்த மகத்தான ரகசியத்தைப் புரிந்து கொண்டுதான் இந்து மதத்தினர் சிவத்தையும் சக்தியையும் தெய்வங்களாக உருவகித்து வழிபட்டனர்.

அணுக் கூறுகளாய் அவற்றின் சக்திமயமாய் எங்கும் நிரம்பின பிரம்மத்தையே ஆண்டவன் என்கிறது இந்து மதம்.

அதைக் ஆண்டவன் என்று வணங்கினாலும் சரி, தொழுதாலும் சரி, இயற்கை என்று மட்டுமே ஏற்றுக்கொண்டாலும் சரி, யாவும் குறிக்கும் அந்த பரம்பொருள் ஒன்றே.

அதை நினைக்கும் மனதிற்கு நிம்மதி உண்டு. நம்பும் இதயத்திற்கு நன்மை உண்டு,அழைக்கும் உள்ளத்திற்கு ஆறுதல் உண்டு.

கல்லை வணங்கினாலும் அது கடவுளே.
புல்லை போற்றினாலும் அது புனித தெய்வமே.
கல்லையும் மண்ணையும் காலில் இடறுகிற மனிதனுக்கு, அவற்றிலுள்ள கடவுள் தன்மை புரியும்.

முட்டாள் யோசனை கேட்பது புத்திசாலியிடமே.
நோஞ்சான் துணைக்கு அழைப்பது பலசாலியையே.
நோயாளி சிகிச்சைக்குப் போவது மருத்துவரிடமே.
நம்மைவிட மேலானவற்றில்தான் நமக்கு நம்பிக்கை பிறக்கும்.

பாறை வடிவங்கங்களாக இருந்த கற்கள், பரமனின் உருவம்  பெறும்போதுதான் பக்திக்குக் காரணமாகின்றன.

தெய்வத் திருவுருவங்களின் தோற்றுவாய் இதுவே.
ஒன்றில்  மனத்தை நிறுத்தவே இந்த உருவங்கள்.
சூன்யத்திலும் மனத்தை நிறுத்த ஞானிகளால் முடியும்.
பார்க்கும் பொருளில் பரவசப்படவே பாமரனால் முடியும்.
பலவிதமான விக்கிரகங்களும் படைக்கப்பட்டதான்  காரணம் இதுதான்.

ஆனால் ஒவ்வொரு விக்கிரகமும் உன்னதமான அர்த்தங்களின் அடக்கம், தெய்வீக ரகசியங்களின் தேக்கம்.

பரவிக் கிடக்கும் சூரிய ஒளி பூதக் கண்ணாடியின் வழியாய் குவியும் போது பற்றி எரிகிறது.

பசுவின் உடலெங்கும் பாய்கிற ரத்தம் அதன் மடியில்தானே பாலாகச் சொரிகிறது?

எங்கும்  நிறைந்த இறையருள் நம்பிக்கை நினைவால் ஒன்றாகக் குவிகிற இடமே விக்கிரகங்கள்.

அர்த்தம் இல்லாத எதையும் இந்துக்கள் அனுஸ்டானத்திற்கு ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்து மதத்தினரின் பக்தி மார்க்கமும் இணையற்ற பகுத்தறிவின் விளைவே.

பரம் பொருள் ஒன்றே என்பது அவர்களுக்குக் தெரியும். அதன் பல்வேறு தாத்பரியங்களைத்தான் பலவிதமான தெய்வங்களாக உருவகித்து,  அவரவர்கள் மனப் பக்குவத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்றபடி வணங்குகிறார்கள்.

இதய சுத்தியோடு வணங்கினால், எந்த உருவை வழிபடுகிறோமோ அந்த உருவிலேயே ஆண்டவனின் அருள் சித்திக்கும்.

ஜீவஜோதியாகிய சூரியனிலேயே சிவ ஸ்வருபத்தைக் கண்டது இந்துமதம்.

வெப்பம் ஆண்மை மிக்கது, அதன் நிறம் சிவப்பு.

சிவபெருமானை "செம்மேனி எம்மான்", " பொன்னார் மேனியன்" என்றதும், "எரிதழல் கடவுள்", "செந்தழல்சிவபுரத்தரசன் என்றதும் இதனால்தான்.

மாலை நேரச் சூரியன் பரமசிவனின் உருவகம்.
செந்நிறம் பிரதிபலிக்கும் மேகங்களே சிவனின் செஞ்சடை.

சிவன் தலையிலுள்ள ஆகாச கங்கை என்பது, கடல் நீரை உறிஞ்சி உயரே அடக்கிக் கொண்டிருக்கும் மேகங்களின் திரட்சியே.

அந்திவானில் சூரியனின் அருகில் தோன்றும் இளம் பிறையே சிவனின் முடியில் துலங்குவதாக சித்தாந்தம்.

இயற்கையின் வடிவிலும் இறைவனைக் கண்டது இந்து மதம்.

வன்மையும் வெம்மையும் ஆண்மை என்றால், மென்மையும் தண்மையும் பெண்மை அல்லவா...

சூரியன் சிவம் என்றால், சந்திரனே சக்தி.

சந்திரனின் கிரகசக்தி பூமியில் பெண் பாலின் உயிர்த்தோற்றுவாய்க்கு ஆதாரமாக இருக்கிறது.

 நிலவொளியில் நீலநிற நுண்கதிர்களே அதிகமாக இருக்கின்றன.

பெண்மைக்கும் குளுமைக்கும் உரிய நிறம் நீலமே.

சக்தியாகிய உமாமகேஸ்வரியை ஸ்தோத்திரங்களும் புராணங்களும் நீலமேனி நங்கையாக வர்ணிப்பது இந்த அடிப்படையில்தான்.

உலகப் பொருள்களின் நிறங்கள் அத்தனையும் அடிப்படையான இந்த இரண்டு நிறங்களின் விகிதாச்சார சேர்க்கைகளே.

சர்வம் சிவசக்தி மயம்.

மின்சாரம் ஒன்றே என்றாலும் அது விளக்கை எரியவைக்கிறது, வானொலியை பாடவைக்கிறது, வாகனங்களை ஓட வைக்கிறது.

சக்தி ஒன்றே என்றாலும் அதற்குப் பலவிதமான பரிணாமங்கள் உண்டு.

அவற்றின் அர்த்தங்களை உள்ளடக்கியே, சக்திமயமான பராசக்தியை  உமா பார்வதி என்றும், துர்கையம்மன் என்றும், காளீஸ்வரி என்றும், ராஜராஜேஸ்வரி என்றும் பலவிதமாக வழிபாடு வகுத்தது இந்துமதம்.

சிவம் ஒன்றேயாயினும் அதற்குப் பலவிதமான பரிணாம நிலைகள் உண்டு.

அவற்றின் அர்த்தங்களை உள்ளடக்கியே நடராஜர் என்றும், உமாமகேஸ்வரன் என்றும், திருநீலகண்டன் என்றும், பிக்ஷாடனர் என்றும், தக்க்ஷிணாமூர்த்தி என்றும், ருத்திரதேவன் என்றும் பலவைதமாக சிவனை வழிபடுகிறது இந்துமதம்.

பரம் பொருளாகிய பிரம்மம்  நீர் ( அப்பு ),  நெருப்பு ( தேயு ),  காற்று ( வாயு ),  மண் ( ப்ருதிவி ),  வானம் ( ஆகாசம் ) ஆகிய  பஞ்ச பூதங்களிலும்
வியாபித்திருக்கிறது.

இதனை உணர்த்தவே சிவனுக்கு அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ப்ருத்விலிங்கம், ஆகாசலிங்கம் என்னும் திருநாமங்கள் தோன்றின. அவற்றிற்கான ஆலய ஸ்தலங்களும் வழிபடு முறைக்காக அமைக்கப்பட்டன.

லிங்கம் என்றால் குறி என்றும் சின்னம் என்றும் பொருள்.
இறைவனின் உருவைக் குறிக்கும் சின்னமே லிங்கம்.
கோயில்களில் எல்லாத் தெய்வங்களுக்கும் திருவுருவ விக்கிரகங்கள் இருக்க சிவபெருமானுக்கு மட்டும் லிங்கவடிவில் விக்ரகம் இருப்பது ஏன்?
இறைவன் உருவும் அருவும் அற்றவன் என்பதை உணர்த்தவே.

உருவம் என்றும் உர்வமற்ற அருவமென்றும் சொல்ல முடியாத வினோத வடிவமே சிவலிங்கம்.

அமைதியாய் இருந்து செய்யும் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம், மனத்தை ஒருநிலைப்படுத்திப் பரம்பொருளை அணுகுவதற்கு முதல்படி.

சிவாலயங்களின் தலைவாசலில் நெடுமூச்சு விடும் பசுரூபமான நந்தி அமைக்கப்பட்டது இதனை உணர்த்தவே.

நிலையாத் தன்மையுள்ள மானிடரின் இறுதி நிலையை நினைவுபடுத்தும் இடுகுறியே விபூதி.

எதையும் எரித்தால் சாம்பலாகும், சாம்பலைச் சுட்டால் எதுவாகும்?

அழியாத் தன்மை பெற்ற பரம்பொருளை குறிக்கவும் திரு நீறு
சிவச்சின்னமாயிற்று.

அப்பனாகிய சிவனுக்கு திருநீறு என்றால்,
அன்னையாகிய சக்தியின் சின்னம் குங்குமம்.
குங்குமம் கொலுவிருப்பதே மங்கலம்.
மஞ்சள் மிகக் குளிர்ச்சி, அது பெண்மையின் சின்னம்.

சுண்ணம் கொடும் உஷ்ணம்.  அது ஆண்மையின் அடையாளம்.
மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து உருவாவதே குங்குமம் என்பதால், சிவசக்தி ஐக்கியம் குங்குமத்திலும் உண்டு.

சிவத்தைத் தன்னிலிருந்து பிரிக்கவே முடியாதபடி குங்குமத் திலகமிட்டு நித்ய சுமங்கலியாய் வாழ்கிறாள் சக்தி.

" நமச்சிவாய" என்று கூப்பிடுங்கள். அது சக்திக்கும் கேட்கும்.

"ஓம் சக்தி" என்று  அழையுங்கள். அது சிவன் காதிலும் விழும்.

( புத்தகத்தின் தலைப்பு : பகுத்தறிவுள்ள இந்துமதம்
எழுத்து : விவேகா.
என் கையில் உள்ள பிரதி: மே 1983ம் ஆண்டின் 2ம் பதிப்பு.
இப்புத்தகத்தை முழுமையாக படித்து  பயன் பெற, அருகிலுள்ள புத்தகக் கடையினை  நாடுங்கள். அல்லது, தமிழ் நாட்டு புத்தக பிரசுரத்தாரை தொடர்பு கொள்ளுங்கள். அதற்கான சரியான கட்டணத்தை கட்டிவிட்டால், தபாலில் உடனே வந்து சேர்ந்து விடும். இது ஒரு பராசக்தி வெளியீடு. )

Sunday, 8 December 2013

நமக்குப் பிரச்சினையாக இருப்பது யார்...?


பொதுவாக  நமக்கு எதிரி நாம் தான். நமக்குள் இருக்கும் எதிர்மாறான எண்ணங்களே நம்மை பல வேற்றிகளில் இருந்து தடுக்கிறது.  நம்மை நாம் உணரந்துவிட்டால், மற்றவர் நமக்கு ஒரு பிரச்சினையாக பட மாட்டார்...

சில நேரங்களில் பெற்றோர்களின் திட்டங்களும் இப்படித்தான் போகின்றன.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவோடு பாசத்தினையும் ஊட்டி வளர்க்கிறார்கள். கொஞ்சி, கொண்டாடி மகிழும் அதே நேரம், பலவாறான கட்டுப்பாடுகளையும் அங்கே முன் வைக்கிறார்கள்.

பலங்காலத்தில் சிறு சிறு வாக்கியங்களின் மூலம் பிள்ளைகளை கட்டுப்படுத்துவார்கள். " கோல் எடுத்தவன் குருடு, கத்தியைத் தொட்டால் ரத்தம் வரும், தொட்டால் சுடும் நெருப்பு " என்பதில் தொடங்கி, " பூச்சாண்டி வருகிறான், தனியே போகாதே...வாகனத்தில் வருவது அரக்கன், ஜாக்கிரதை" என பயமுறுத்தும் வகையிலும் அவர்களின் மிரட்டல் இருக்கும். குழந்தைகளின் நன்மைக்கு சொல்லப்பட்டவையே அவை. அதுபோன்ற அறிவுரைகளை மீறி நடப்போர் கண்டிக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள்.

அன்பையும் பண்பையும் பரிமாறும் பெற்றோர்  தங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பலவிதமான திட்டங்களையும் தீட்டி நடமுறைப்படுத்த முனைகின்றனர். பாராட்டப்பட வேண்டிய செய்கைகள் இவை.

ஆனால், வளரும் குழந்தைகள் , தங்கல் திட்டப்படி நடந்து கொள்கிறார்களா என மீள்பார்வை இடுவது குறையும் போது, தங்களின் கண்டிப்பும் தளர்த்தப்படுகிறது. கால ஓட்டத்தில் தங்களின் திட்டங்கள் குழந்தைகளின் வற்புறுத்தலுக்காகவும், அவர்களின் எதிர்ப்புக்களுக்காகவும் சிறிது சிறிதாக மாற்றங்களுக்குள்ளாவதை பலர் உணர்வதில்லை.

சில வருடங்களுக்குப் பின் பிள்ளைகள் சொல்வதை கேட்கும் கட்டாயத்துக்குள்ளாகிறார்கள் பெற்றோர்.

கைபேசி இருந்தால் தான் பள்ளிக்குப்போவேன் என அடம் பிடிக்கும் நிலை, ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளை பார்த்தபின் தான் வீட்டுப்பாடங்களைச் செய்வேன் என பெற்றோரை அதட்டும் குழந்தைகளில் சிலரை எனக்குத் தெரியும்.

இப்படி பெற்றோரின் இலக்கு மாறுவதால், சாதனைகளாகவேண்டிய தங்கள் பிள்ளைகளின் வெற்றிகள் சாதாரனமாகிவிடுகின்றன இருவருக்கும்.

பிள்ளைகள் மேல் வைக்கும் ஆரம்பத்திட்டங்கள் வெற்றி பெறாமல் போவதற்கு அவர்களின் அதீத பாசமும் ஒரு காரணம்.

" ஆரம்பத்துல நல்லாத்தான் படிச்சான், நல்ல பிள்ளியாத்தான் வளர்ந்தான். ஆன போகப் போக இப்படி ஆகிட்டான்...." என எத்தனையோ பெற்றோர் ஆதங்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

அதனால் தான் சொல்கிறோம், பிள்ளை சாதிக்கும் வரை, அரவணைப்போடு கண்டிப்பும் மிக அவசியம் என்று.





Friday, 6 December 2013

pows double...?


These days handphones come with improvised technology.  Besides other features, the built in cameras provide clear picture quality. From 256 graphic colours,  they come with 8MP or higher now... making it much more easier to do photo tricks. The only problem for doing the doubles like the above photo  is to maintain the background light. And we can overcome that easily when taking ourdoor photos, whereby the weather is unchanged for a few continuos snap shots. 

( முகநூல் நண்பர்களை நம் பதிவுலகிற்கு இழுக்க இப்படி ஒரு ஆங்கில பதிவு , அவ்வளவுதான்.... )