Friday, 20 July 2012

அப்பா! நான் வேண்டுதல் கேட்டு . . .

மந்திர தந்திரங்களிலும் மாயா ஜாலங்களிலும்  நம்பிக்கை வைப்பதனால் நிம்மதியான வாழ்க்கையை நாம் இழக்கிறோம் ...

 நடந்துவிட்ட தவற்றுக்கு சரியான காரணத்தினை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக அத்தவற்றை நிவர்த்திக்கும் வழிமுறைகளை  பட்டியலிடப் பழகவேண்டும். இதற்கு மாறாக மந்திரங்களினால் பலனை எதிர்ப்பார்த்தால் கிடைக்கப்போவது நிம்மதியற்ற நிலைதான்.

மந்திரம் என்பது மற்றவர் நம்மை தந்திரமாக ஏமாற்றிடும் வித்தை. காலம் கடந்து இதை நாம் உணர்வது நமக்கு நல்லதல்ல.

சாமி ஆடுவது, ஆத்தா வந்திறங்குவது போன்றவை கோயிலுக்குப் போய் முறையாக இறைவனை வழிபடத்தெறியாதோருக்கே நிகழ்பவை. காளிக்கோயிலையும் முனீஸ்வரர் கோயிலையும், மதுரை வீரன் கோயிலையும் சென்று பூஜிப்பதோடு நம் நாட்டில் இருக்கும் முருகன் கோயில்களுக்கும், மாரியம்மன் கோயில்களுக்கும், பெருமாள் மற்றும் பிள்ளையார் கோயில்களுக்கும் சென்று சாஸ்டாங்கமாக பூஜிப்பதும் அவற்றின் பின்புலத்தை ஆராய்ந்தறிவதும் நம்மை சீர்படுத்தும்.

இறையுணர்வை வளப்படுத்த சரியான விதத்தில் ஆகம விதிகளின் படி கட்டப்பட்டு பூஜைகள் இடம்பெறும் கோயில்களுக்குச் செல்லவேண்டும். எழும் சந்தேகங்களை கோயில் குருக்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். குருமார்களுக்கு எல்லாம் தெரியாவிட்டாலும் ஒரு சராசரி மனிதரைவிட சற்று கூடுதலாக தெரிந்து வைத்திருப்பர். எனவே அவர்களிடம் கேட்டறிவது தப்பில்லை.

சிறு தெய்வ வழிபாடாக தனி நபர் சுய நலன்களுக்காக கட்டப்படும்  கோயில்கள் உண்மை இறையாண்மையை பறைசாற்றாது.  மாறாக அங்கு காலம் கடந்த, நம் சமூகத்துக்கு ஒவ்வாத மத நம்பிக்கைகளே தூபமிடப்பட்டு சாபங்களாக மாறி நம்மை வந்தடையும். கவனம் தேவை. 

ஆடு, கோழி என உயிர்பலி இடப்படுவதும் இது போன்ற சிறு கோயில்களில் தான்.

"அப்பா! நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்!
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்"  என்பது வள்ளலார் வாக்கு. 

உயிர் போகும் இடங்களில் எமன் இருப்பானா அல்லது இறைவனா என்பதை நாம் புரிந்து கொள்ளல் அவசியம்.

3 comments:

  1. மிகத் தெளிவாகச் சொன்னீர்கள், ராஜ்.

    ReplyDelete
  2. ஹ்ம்ம் என்னமோ நீங்க பாராட்டுறீங்க... சில இடங்களில் இருந்து அவ்வப்போது 'குட்டும்' அல்லவா வந்து விழுது...
    அதாவது நான் என்ன சொல்றேன்னா.. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை அறிவுரையாக சொல்லவில்லை. மனதில் பட்டதை சொல்கிறேன்.
    நல்லதுன்னா கேட்டுக்குங்க, கெட்டதுன்னா விட்டுடுங்க...

    ReplyDelete