வானத்தில் ஆந்தை ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.
எதிர்புறமாக வந்த இன்னொரு பறவை,
" ஆந்தையே, எங்கே இவ்வளவு அவசரம்...? " என்று வினவியது.
"நான் வேறு நாட்டிற்கு சென்றுகொண்டிருக்கிறேன். இருள் படர்வதற்குள் நான் அங்கு சென்று சேர வேண்டும்..." என்றது.
"வேறு நாட்டிற்கா....? இந்த நாட்டில் என்ன குறையோ உனக்கு ?"
"இந்த நாட்டில் என் குரலைக் கேட்க அருவருக்கிறார்கள். வேறு நாட்டுக்குப் போய் சுகமாக வாழலாம் என எண்ணியே போய்க்கொண்டிருக்கிறேன்.." என்று பதில் சொன்னது ஆந்தை.
அந்த இன்னொரு பறவைக்கு ஆச்சரியம் ...
"ஆந்தையே. நீ சொல்வதெல்லாம் சரி, ஆனால் நீ உன் குரலை மாற்றாவிட்டால் நீ எந்த நாட்டுக்குப் போனாலும் எல்லோருக்கும் உன்மேல் அருவருப்பும் வெறுப்பும்தானே வரும்.." என்றது.
நம்மில் பலரும் இப்படித்தான், முறையான மாற்றங்களை நம்மில் ஏற்படுத்திக்கொள்ளாமல் இடம் பெயர்ந்து வெற்றியைத் தேடி அங்கும் இங்கும் அலைகிறோம்.

No comments:
Post a Comment