Friday, 16 March 2012

ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர்

a very rare picture...
Jaishankar, our 007 with MGR

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன் என பல கதா நாயகர்கள் நடித்த அந்தக் காலத்தில் ஜெய்சங்கரும் ஒரு முக்கியமான நாயக நடிகராக போற்றப்பட்டார்.

1965 ஆம் ஆண்டு ஜனவரி 14, வெளிவந்த இரவும் பகலும் எனும் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே உலகத்தின் மிகப் பெரிய தத்துவத்திற்கு வாயசைத்து நடித்தவர்....

"இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
உறவும் வரும் பகையும் வரும் வாழ்க்கை ஒன்றுதான்

இசையமைப்பு : டி. ஆர். பாப்பா

கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாதது இவரது நடிப்பு... காரணம் இவர் எவ்வித சோகக்காட்சியிலோ  குணச்சித்திர காட்சியிலோ நடித்து பெயர் பெற்றதில்லை. கலகலப்பான, நகைச்சுவையான, காதல் படங்களில் நடித்ததுடன், துப்பறியும் கதைகளில் நடித்ததினால், இவர் தமிழக ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்பட்டார்.



டி எம் எஸ் இவருக்காகப் பாடிய பல பாடல்கள் பெரும் புகழ் பெற்றன.


இசையமைப்பாளர் வேதா இவரின் ஆரம்ப காலப் படங்களுக்கு நல்ல முறையில் இசையமைத்து இவரை மக்களின் மனங்களில் நிற்கச் செய்தார்.


நான்கு கில்லாடிகள்,
யார் நீ,
வல்லவன் ஒருவன், 
C I D சங்கர்,
எதிரிகள் ஜாக்கிரதை,
காதலித்தால் மட்டும் போதுமா

போன்ற படங்கள் இசையமைப்பாளர் வேதா அவர்களின் திறமையில் ஜெய்சங்கருக்கு வெற்றியை ஈட்டித்தந்தன...

1 comment:

  1. இசையமைப்பாளர் திரு.தேவா புகைப்படம் போட்டிருக்கலாம்.

    ReplyDelete