Monday, 26 March 2012

இரட்டைவேட புகைப்படங்கள். . .

இரட்டைவேட புகைப்படங்களை எடுப்பதற்கு சினிமாத்துறையினர் பல தொழில்னுட்ப யுக்திகளை பயன்படுத்துகிறார்கள். அவற்றுள்  மாஸ்க் என்ற முறையை எம்ஜிஆர், சிவாஜி காலத்திலும், பின்னர் கணினி வரவினால் க்ரீன் மேட், ப்ளூ மேட் என்னும் புதிய முறையையும் பயண்படுத்தினர்.

கமல ஹாசனின் ஆளவந்தான் படத்திற்குப் பின்னர் மோஷன் கொன்றோல் கேமரா பயண்பாட்டுக்கு வந்தது. கம்யூட்டர் மூலம் இந்தக் கேமராவை நம் விருப்பத்திற்கு உபயோகப்படுத்திகொள்ளலாம்.

ஒரு கதாபாத்திரத்தை ஒரு பக்கம் நடிக்கச்செய்து பின்னர் அதே நபரை வேறொரு கதாபாத்திரமாக அடுத்தப் பக்கம் இடம்பெயறச்செய்து நடிக்க வைத்து எடுப்பது மிகவும் எளிமையாகிவிட்டது இப்போது.


இந்த வித்தையை அன்றே எனது மைத்துனர் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்த எப். எக்ஸ். ரக கேமரா மூலம் செய்தோம். ஒரே பிரேமில் ஒருவரை இருவராகக் காட்ட ஒரு பகுதி கேமராவை மறைத்து ஒருவரை எடுத்து முடித்தபின் மற்றொருவராய் அவரை நிறுத்தி அந்த பிரேமை பின் நகர்த்தி மீண்டும் படமெடுத்தோம்.


அறிவியல் இங்கே கொஞ்சம் தேவை.

கேமராவின்  "லென்ஸை" ஒரு பக்கம் மறைக்கும்போது, காட்சி திறக்கப்பட்டிருக்கும் வழி உள்ளே சென்று, உள்ளிருக்கும் படச்சுருளில் பதிவாகிறது. ஆனால், மூடி மறைக்கப்பட்டிருக்கும் உட்பகுதி அப்படியே பயன்பாட்டிற்கு தயார் நிலையில் தான்  இருக்கும் இன்னமும்.

அடுத்ததாக, முன்பு மறைக்கப்பட்ட "லென்ஸ்"  பகுதியை திறந்து முன்னர் திறந்திருந்த பகுதியை இப்போது மறைத்து அடுத்த காட்சியை எடுக்கும்போது உபயோகத்திற்கு மூடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பகுதியிலும் காட்சி பட்டு படச்சுருளில் பதிவாகும். இதுதான் அன்றைய இரட்டைவேட நுணுக்கம்.

தற்போதைய கம்யூட்டர் உதவிகள் எங்களுக்கு அப்போது இருந்ததில்லை. ஆனால், கம்யூட்டரின் வரவால் இப்படி இரண்டாகவும் இரண்டுக்கு மேலாகவும் படமெடுப்பது மிகச்சாதாரனமாகிவிட்டது.

போட்டோ ஷொப், பெயின்ட் போன்ற புரோகிராம்கள் வழி ஒருவரை படமெடுத்து வெட்டி, அவரை மலை உச்சியிலோ அல்லது நிலவின் மேலோ அமரச்செய்வது போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனைகளில் நான் இறங்குவதில்லை.

கடைகளில் இதுபோன்ற காட்சிகளை ஒரு வெள்ளிக்கு மிகச்சாதாரனமாக செய்து தருகிறார்கள் இப்போது.
 

No comments:

Post a Comment