Sunday, 29 January 2012

எல்லோரும் வாழ்வோம். . .

 நமது வேண்டுதலுக்கான முழுப்பயன் கிடக்கவேண்டுமானால், இறைவனிடம் வேண்டும் போது '   நான்' , 'எனக்கு' என முதல் கோரிக்கையை வைக்கக்கூடாது என்பார்கள்.

அது போன்ற சுய நல போக்கு இல்லாது, 'இவ்வுலகில் வாழும் அனைவரும் ஆரோக்கியமாக சிறந்து வாழவேண்டும'  என நினைப்பது    நாளடைவில் நாம் நம்மை நல்வழிப் படுத்தி மனோத்தத்துவ ரீதியில் நன்மைகளை பெருக்கிக்கொள்ளும் சிறப்பான ஒன்றாகும்.

சுய நலம் தோன்றாத போது பாவங்கள் தோன்றுவதில்லை. பாவங்கள் இல்லையேல் இறைவனின் அன்பு முழுமையாக பெற எவ்வித தடைகளும் இல்லை.

எனவே, மற்றவர் நன்றாக இருக்க நினைக்கும் நேரம் நம் வாழ்வு சிறப்படைகிறது என்பதை உணர்வோம்.

எல்லோரும் சீரும் சிறப்பும் பெற்று ஆரோகியமாக வாழவே வேண்டுவோம்.

No comments:

Post a Comment