Wednesday, 4 January 2012

துணிந்து நில்...தொடர்ந்து செல்....

"நம்மால் முடியுமா" என்று நாம் கேட்கலாமா? 

பலருக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரிவதில்லை. ஏதோ ஒவ்வொரு நாளும் விடிகிறது, முடிகிறது என்பது போன்றே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

எவ்வித பிரச்சினையுமின்றி வழக்கம் போலவே ஒவ்வொரு நாளும் தோன்றி மறைந்தால் போதும் என்ற எண்ணத்தில் மற்ற எந்த முன்னேற்றகரமான முடிவுகளையும் எடுக்க தயங்குகின்றனர்.

'மெடிக்கல் கார்ட்டை' மற்றவர்களுக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய நேரங்களில் எடுக்காமல் போன சரியான முடிவுகளை அடையாளம் காணும் சந்தர்ப்பம் எனக்கு கிட்டியதுண்டு.  தொழில் மாற்றம், இட மாற்றம் மற்றும் பிள்ளைகளின் கல்வி நலன்களில் மாற்றங்களைச்செய்ய மிகவும் பயப்படுகின்றனர்.

ஒரு வகையில் அவர்களை குற்றம் சொல்ல முடியாதுதான். இன்றைய சூழ்நிலை அவர்களின் மன நிலையை மாற்ற இயலாது. இருப்பதை விட்டு அனாவசிய திடீர் முடிவுகளை எடுப்பது பாதகமாக இருக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்தே இருக்கின்றது.

ஆனாலும், வாழ்வின் முக்கியத்துவங்கள் யாவை என அறிந்து, அவற்றைப் பட்டியலிட்டு அவற்றிற்காக ஒரு சில மாற்றங்களைச் செய்வதிலும் சாமர்த்தியமான திறமை தேவை. 

எதிலும் ஒரு சுணக்கம், எதிலும் ஒரு தயக்கம் நம்மை ஒரு போதும் வாழ்வின் மேல் நிலைக்கு கூட்டிச்செல்லாது.

 'நம்மால் முடியுமா?' என்று கேட்டுக்கொள்ளும் அதே நேரம் முடியுமென்று படுவதை திறந்த மனதுடன் வெற்றிக்கு முதல் படியாக நினைத்து செயல் படுவத்துவோரில் பலர் வெற்றியே அடைகிறார்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை. . .
தயங்கியவர் வென்றதில்லை. . .

No comments:

Post a Comment