ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
-------0----------0-----------0-----------0---------0---------------
(தேவாரப் பாடல்கள் பக்திக்கு மட்டுமல்ல நோய் தீர்க்கும் நிவாரணியாகவும் இருந்திருக்கின்றது அன்று. வயிறு சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கு "குற்றாயினவாறு" என்னும் தேவரப்பாடல் இறைவனிடம் நாம் போடுகின்ற நல்லதொரு விண்ணப்பம். என்னை வாட்டுகின்ற நோய்களிலிருந்து காத்து அருள் புரிவாய் ஐயா என்று சரணடைவோம். )
கூற்றாயினாவாறு விலக்ககிலீர்
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞாநக்கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே!
-------0----------0-----------0-----------0---------0---------------
கூற்றாயினாவாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றா தென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடகியிட
ஆற்றேன் அடியேன் அதிகை கெடில
வீரட்டான துறை அம்மானே
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பழிகொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அளந்தேன் அடியேன் அதிகை கெடில
வீரட்டான துறை அம்மானே
- திருநாவுக்கரசர்
No comments:
Post a Comment