பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும், ஏழை எளியோருக்கு உதவிகளும், ஆங்காங்கே ரத்த தானங்களும், அவர் பெயரால் மற்ற நல்லெண்ண நிகழ்வுகளும் நடைபெறுவது அவரது நல்ல உள்ளத்துக்கு மக்கள் காட்டும் அன்பின் அடையாளமாக போய்விட்டது. காலமாகி பல வருடங்கள் போனாலும், நம்மிடையே இன்றும் இருப்பது போன்ற உணர்வை மக்கள் ஒரு சிலருக்கே வழங்கி இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராக மக்கள் திலகம் திகழ்கிறார்.
எஸ்ட்ரோ எம்ஜிஆரின் "பெரிய இடத்துப் பெண்", "நம் நாடு" மற்றும் "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படங்களினை காண்பித்து அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றாலும் தமிழ் நேசன் நாளிதழில் அவரைப்பற்றிய நினைவுகளை படித்துக்கொண்டு சிறு வயதில் அவரின் படங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை மனதுக்குள் அசைபோடுவது பசுமையான ஒன்றாக இருந்தது எனக்கு.
எஸ்டேட்டின் பின்னனியில் வாழ்க்கையை தொடங்கியவன் நான். அறுபதாம் ஆண்டுகள் அவை. பந்து விளையாடும் திடலில் திரையினைக் கட்டி, புரொஜெக்டர்கள் மூலமாக தமிழ்ப் படங்களைக் காண்பித்து வந்த காலம் அது. அப்போது மக்களின் மாபெரும் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.
சீனர், மலாய்க்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டவர். அதன் தாக்கம் இன்றளவும் நம் மலேசிய நாட்டில் உண்டு. அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு இன்றைய மலாக்கா மாநில முதல்வர்.
மற்ற இனத்தவர்களில் ஒரு சிலருக்கே நமது தமிழ் நடிகர்களைத் தெரிகிறது. அதிலும் கமல், ரஜினியத் தவிற வேறு யாரையும் அவர்கள் கண்டுகொண்டதாக இல்லை.
எம்ஜிஆரை அன்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
எம்ஜிஆரை அன்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.
No comments:
Post a Comment