Monday, 5 December 2011

எண்ணங்கள் ஆயிரம்...2

காவலன், ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டும்...
நடிகர் சங்கத்துக்காக நிதி திரட்ட சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து மலேசிய நாட்டிற்கு எல்லா முன்னனி நடிகர்களும் படை திரண்டு வந்திருந்னர்.

இரண்டு நாட்களாக வந்திறங்கிய அவர்களின் பாதுகாப்புக்காக சுயேச்சையான ஒரு குழுவினரை "பி டி ஆர் எம், கே எல் ஐ ஏ" பிரிவுஏற்பாடு செய்திருந்தது.

அதில் பங்கு கொள்ளும்படி சுபத்திராவின் பள்ளிதோழியின் தந்தை கேட்டுக்கொண்டதற்காக நானும் சம்மதித்து மற்ற ஏனைய காவலர்களோடு சென்றிருந்தேன்.

இங்கே இருப்பது அவர்களின் வருகையின் போது எடுத்த படங்கள்.



நடிகர்களோடு ஒரு 200 மீட்டர் பேசிக்கொண்டே நடந்து வந்தது சுவாரஸ்யமான ஒன்றுதான்.


ஆனால் நடிகைகள் வந்திறங்கியதும் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. இளையோர் முதல் முதியோர் வரை, அவர்களை தொட்டுப்பார்க்கவே ஆசைப்பட்டனர் அன்று.

யாருக்கும் சேதமில்லாமல் இருக்கமான ஒரு கட்டத்தை நகைச்சுவையோடு சமாளிக்க மிகவும் சிரமப்படவேண்டியதாயிற்று.

நல்ல  வேளை, இவரை இழுத்ததும் நகர்ந்து போய்விட்டார்.
" சும்மா ஒதுங்கு சார்...  நீ என்னா பெரிய போலிஸா" என்று கேட்டிருந்தால்  நிலைமை என்ன    ஆகியிருக்கும் ....?

"இது எனக்கு தேவையா... ?" என்று மனதுக்கு பட்டது.
அடுத்தடுத்து வந்த சுயேச்சை காவல் பணிகளை நிராகரித்து விட்டேன்.

 நட்சத்திரங்களை தூர இருந்து பார்ப்பதுதான் அழகு.

No comments:

Post a Comment