Saturday, 31 December 2011

புத்தாண்டு மலர்கின்றது...

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் .................அடிபேணிக் (கைத்தல)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...............கடிதேகும் (கற்றிடும்)

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய ............மதயானை (மத்தமும்)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...........பணிவேனே(மத்தள)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...............முதல்வோனே(முத்தமிழ்)

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ..........அதிதீரா(முப்புரம்)

அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை........... இபமாகி (அத்துய)

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் .............பெருமாளே. (அக்குற)
-----0----------0----------0-------------0-----------0-----------0---------


கைத்தலம் நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி ... கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி,

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும் ... அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில் நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே, என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில் ஓடிப் போய்விடும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை ... ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும் சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ் மலர்கொ (ண்) டு பணிவேனே ... மத்தளம் போன்ற பெருவயிறு உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத் தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே ... இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல் முதலில் எழுதிய முதன்மையானவனே,

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது பொடிசெய்த அதிதீரா ... (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத் தூளாக்கிய மிகுந்த தீரனே*,

அத்துயர் அது கொ (ண்) டு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி ... (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத் துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப் புனத்திடையில் யானையாகத் தோன்றி,

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமாளே. ... அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச் சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள் பாலித்த பெருமாளே.

happy newyear 2012. . .


Thursday, 29 December 2011

Why this kolaveri... the star article

மற்ற நாடுகளைப் போல நம் நாட்டிலும் மலாய் மொழியில் இந்த பாட்டு வந்துவிட்டதாம்....த ஸ்டார் நாளேடு சொல்கிறது.

Wednesday, 28 December 2011

எண்ணங்கள் ஆயிரம்...7


நல்ல நண்பர்கள் கிடைக்க ரொம்பவும் கஷ்ட்டம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்...

நம்மை எந்த விதத்திலாவது தங்களின் சுய நலத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளவே பலர் நம்மோடு நட்பாக இருப்பார்கள். அதிலும் உறவுக்காரர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்... நம்மால் அவர்களுக்கு எவ்வளவு இலாபம் கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

நாக்கில் சுத்தம் என்பது இவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்கவே இருக்காது. சொல்லில் இனிமையும் செயலில் கொடுமையும் கொண்டு நம்முடன் நாடகமாடுபவர்களே அதிகம். நம் நன்மை மட்டுமே அவர்களின் மூச்சு என்பது போல முகத்துக்கு முன் நடந்துகொள்வர். கண்களிலிருந்து மறைந்திடும் அடுத்த நிமிடம், இலக்கனமரபின்றி வரும் அவர்களின் வார்த்தைகள்.

கண்களை மூடி சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

எந்தவித பிரதிபலனும் இன்றி நம்மோடு பழகக் கூடியவர்கள் உறவினர்களிலும் நண்பர்களிலும் ஒரு சிலரே...

ஒன்றைச் செய்துவிட்டு பத்தை எதிர்ப்பார்ப்பது இதுபோன்றவர்களின் சாதுர்ய குணம்.  எனினும் இதை அடையாளம் கண்டு அவர்களை விட்டு அகன்றிடுவோரிடம் இந்த தந்திர குணம் பலிப்பதில்லை.

தனிமரம் தோப்பாகாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.
நேர்மையானவர்கள் அவர்கள் பக்கம் இருப்பதே பலம் என்று மனதில் படும்போது நல்லவர்களை தேடத்தொடங்குவார்களோ என்னவோ...

டூ லேட்டாக முடிவெடுக்காமல் இருந்தால் சரிதான்.

நல்லதை மட்டுமே சிந்தித்து செயல்படுவோம். . .

எதையும் குறையாகவே பார்ப்பது பலருக்கு வாடிக்கையாகிவிட்ட ஒன்று.

மற்றவர்களிடம் உள்ள நல்லவற்றை அவர்கள் கண்கள் காண்பதில்லை. ஆனால், ஏதாவதொரு சிறிய புள்ளி போன்ற வழக்கத்திற்கு மாறான ஒன்றை பார்த்திடும் போது ஊதி ஊதி பெரிது பண்ணி அதை மலைபோல உயர்த்திக்காட்டி மட்டம் தட்ட முயல்கின்றனர்.

ஒரு சிறு பிரச்சினை பூதாகரமாக வெடித்து குடும்பங்கள் சின்னா பின்னமாக சிதறுவதற்கு இந்த "குறைககளைத் தவிர  வேறு எந்த நல்லதையும் காண முடியாத" அரை வேக்காடு குணமே காரணம் என்பதை எப்போதுதான் அவர்கள் உணர்வார்களோ....?

தன் மகனையோ மருமகளையோ அல்லது பேரன்களையோ மற்ற யாரும் அப்படிக் குறைகூறி அது அவர்கள் காதில் விழும்போது தான் திருந்துவார்களோ??? ஊகும்....அப்படி இன்னமுமா காதில் விழாமல்  இருந்திருக்கும்..?

ஒருவேளை, தொலைக்காட்ச்சி தொடர்கள் அவர்களுக்கு இதுபோன்ற கேவல நிலையை பயிற்றுவிக்கின்றனவோ... அடுத்தவர் எப்படி புண்பட்டு மனம் நோவார் என்பது தெரியாமலா வாயில் வரும் வார்த்தைகளை எவ்வித தீர்க்க சிந்தனையும் தெய்வீக தன்மையும் இல்லாமல் எடுத்து விடுவது???

எண்ணிப்பார்க்கும்போது மனம் நொந்துதான் போகிறது. பெரியோர் சொன்னால் பெருமாள் சொன்னமாதிரி என்று இளையோர் சொல்லி வந்த காலமும் இருந்தது.

இளையோர் "கோஸிப்" பண்ணுவது இயற்கை. அவர்களுக்கு இன்னும் எவ்வளவோ நாட்கள் உண்டு,அனுபவம் மூலமாக தன் தவற்றை உணர்ந்து, வருந்தி, திருத்திக்கொள்ள.

வயதில் பெரியோர் மற்றவர்களிடம் சரியில்லையெனப் படுவதை சொல்லுவதில் ஒரு ஞாயமும், தர்மமும், நேர்மையும் இருக்கவேண்டும்.

இல்லையேல்,
முன்னவர் முடிவு நமக்குப் பாடம் என்பதாகிவிடும்,
தலை சாயும் நேரம் தண்டனையும் வந்துசேரும். . .

My 100th posting for the year 2011. . .


The song " why this kolaveri3 di" by Dhanush has become a mantra for the music lovers internationally. Reports released in the online portals say this silly song has been winning some awards these days and the list of those wanting to offer him contracts for singing is increasing. Dhanush admits that even he nor his team responsible for making of this song had ever expected such a huge success.
Despite some serious song writes condemning the idiotic and not acceptable style of lyrics in the song, world wide music lovers just fall flat for the first line of the song that goes as:
"why this kolaveri kolaveri kolaveri di....."
( in litteral meaning, "hey, why this rage..")
the following is the full text of the song:

 Yo boys i am singing song
Soup song...
Flop song ...
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Rhythm correct
Why this kolaveri kolaveri kolaveri di
Maintain this
Why this kolaveri..aaa di.

Distance la moonu moonu moonu coloru whiteu
white background nightu nigthu
nightu coloru blacku
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

White skin-u girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes-u eyes-u meet-u meet-u
My future dark
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di

Maama notes eduthuko
Apdiye kaila snacks eduthuko
Pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
Sariya vaasi
Super maama ready
Ready 1 2 3 4

Whaa wat a change over maama
Ok maama now tune change-u
Kaila glass only english
Hand la glass
Glass la scotch
Eyes-u full-aa tear-u
Empty life-u
Girl-u come-u
Life reverse gear-u
Lovv-u lovv-u, oh my lovv-u
You showed me bouv-u
Cow-u cow-u holi cow-u
i want u hear now-u
god i m dying now-u
she is happy how-u

This song for soup boys-u
We dont have choice-u
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Flop song..





சில செய்திகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் தனுஷ் பாடி வெளிவந்த இந்த கொலைவெறி பாடலும் அடங்கும்.

இலக்கனப்படி இல்லையென்றாலும் பாடலின் ஏதோ ஒன்றினால் உலக மக்கள் எல்லோருமே மயங்கிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. காரணம் இப்போது இந்த பாடல்தான் உலகம் முழுவதும் பல இன மக்களைக் கவர்ந்த ஒன்றாகியிருக்கிறது.முதல் வரியிலேயே தாங்கள் மயங்கிவிட்டதாக பலர் ஒப்புக்கொள்கின்றனர்.

இரு தனிப்பட்ட கதா நாயகர்களுக்கிடையிலான கேள்வி பதில் பாடலாக இருப்பதை தமிழ் சினிமாவை கூர்ந்து கவனித்து வருவோருக்கு தெரிந்திருக்கும்.

இந்த பாடல் பதிலென்றால், கேள்வி ?

அதை ஓஸ்தி திரையில் உள்ள பாடலைக் கேட்டால் விளங்கும்.

Tuesday, 27 December 2011

எண்ணங்கள் ஆயிரம்...6 சிலாங்கூர் டிரெட்ஜிங்





டெங்கிலில் உள்ள சிலாங்கூர் டிரெட்ஜிங் என்னும் இடத்தில் நான் 1978ல் இருந்து 1993 வரை பணியிலிருக்கும் போது நடந்த ஏராளமான நிகழ்வுகள் என் மனதை எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.

அது ஒரு ஈய லம்பம். ஈயக்கப்பல் மூலம் மண்ணுக்கு அடியில் இருக்கும் ஈயத்தை தோண்டி எடுத்து வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது எங்கள் வேலை. 80ம் ஆண்டுகளின் உற்சக்கட்டத்தின் போது சிலாங்கூர் டிரெட்ஜிங் நிருவனத்திடன் இரண்டு ஈயக்கப்பல்கள் இருந்தன.



( உதாரணப் படங்களாக இங்கே கொடுத்திருப்பது "தீமா லங்காட்" நிறுவனத்திற்குச்சொந்தமான ஒரு ஈயக்கப்பல். தேவையற்று, மதிப்பிழந்து, சீண்டப்படாத ஒன்றாக சோகமே உறுவான நிலையில் காட்சி தரும் இந்தக் கப்பல் பல ஆயிரம் பேர் உயிர்வாழக் காரணமாக இருந்தது அன்று. )



சுமார் 150 இந்தியக்குடும்பங்களின் ஜீவாதாரமாக இருந்தது அன்றைய ஈயம் தோண்டி எடுக்கும் தொழில்.

ஈச்சமர அல்லது பால்மர எஸ்டேட்டுகளைப் போலவே ஈய லம்பத்தில் பணிபுரிவோர் தங்கும் இடமும் இருக்கும். சம்பளம் குறைவாக இருந்தாலும் தண்ணீரும் மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

தங்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்தாலே போதும் என அன்றைய மக்கள் நினைத்திருந்த காலம். லாப நஷ்ட்டத்தைப் பார்க்காவிட்டாலும் அன்று அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.

ஆண்டுதோறும் கோயில் திருவிழாவும் உண்டு.

 நிறைய நண்பர்கள் எனக்கிருந்தனர். தமிழர், சீனர், மலாய்க்காரர்கள் என பேதமில்லாமல் நிஜமாகவே நல்ல நட்புறவோடு பழகிவந்த அந்த காலத்தை நினைக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.




வேலை நேரத்தினிடையே கூட கூத்தும் கும்மாளமுமாக நாங்கள் ஆட்டமும் பாட்டுமாக செலவிட்ட அந்த நெஞ்சிலிருந்து அகலா நினைவுகளை எண்ணிப்பார்க்கும்போது முகத்தில் ஒரு புன்முறுவல்தான் மிஞ்சுகிறது.


 பின் பக்கத்தில் தெரியும் ஈய கப்பல்தான் எங்களின் ட்ரெஜ் 2. என்னுடன் இருப்பது சொங்.

பெரியசாமியுடன் டிரெஜ் 1 பகுதியில் எடுத்த படம் இது.


(மேலே: சிலாங்கூர் டிரெட்ஜிங்கிலில் நான் பணிக்கு சேர்ந்தபோது நண்பர்களானோம். நல்ல மனது படைத்தவர் ...ஏனோ அற்ப வயதில் காலமாகிவிட்டார். எலோருக்கும் உதவும் குணம் கொண்டதனால் மிகவும் பிரபலமானவர்.... விஜயன் என்றால் யார் என்று தெரியாதவரே அன்று இருந்திருக்க முடியாது. )



1978ல் வேலைக்கு புதிதாய் சேர்ந்த போது வார கடைசி நாட்களில் விஜயனின் மோட்டார் சைக்கிளில் என்னை வீட்டில் கொண்டுவந்து விட்டுச் செல்வார். பந்திங் நகரில் இருந்து 4 மைல் தொலைவில் கன்சோங் டாரட் என்னும் இடத்தில் தங்கி இருந்த நாட்கள் அவை.

அலுவலகத்தில் மற்ற இனத்தவர் அதிகம் வேலை செய்துகொண்டிருந்த 1978 - 1982 காலங்களில் விஜயனும் நானும் மட்டுமே தமிழர்கள். அதனாலேயே எங்களுக்குள் அப்படி ஒரு நெருக்கமான நட்பு. எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று கலந்து கொள்வோம். யோகதாஸ் திருமணத்தின் போது எடுத்த படம் இது. அந்தப்பக்கம் நிற்பவர்தான் கந்தையா...

பட படவென்று பொரிந்து தள்ளும் பழக்கம் நம்மவர்களிடையே மட்டுமல்ல, மற்ற இனத்தவரிடம் உண்டு. பாரம் தூக்கியை அந்த நாளில் ஓட்டிய சுலைமான் என்னருகில் நிற்கிறார். இவரிடம் நல்ல பெயர் எடுப்பது சுலபமல்ல...ஆனால், பழகிவிட்ட பின் ஆச்சரியப் படும்படி நடந்து கொண்ட ஒரு நண்பர். எனக்கு முதன் முதலில் பாரம் தூக்கியில் "கார்" ஓட்டக் கற்றுத்தந்தவர். பத்து வருடங்களுக்குப் பின், " எல்லோரும் கார் ஒட்டக்கற்றுக்கொண்டபின் பாரம் தூக்கியை ஓட்டுவது எப்படி என்று ஓட்ட வருவார்கள்... நீயோ என்னிடம் பாரம் தூக்கியைக் கற்றுக்கொண்டபின் கார் ஓட்டக்கற்றுக்கொண்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது" என்று என்னிடமே கிண்டல் அடிப்பார்.





1980களின் தொடக்கதில் என்னுடைய தோற்றம்.

 பெயர்: ஹியு செ ஹொங். அப்பா டெங்கில் பட்டனத்தில் சீன மருந்துக்கடை முதலாளி. சீன நாட்டு வைதியத்தின் மூலம் எல்லாம் சரியாகும் என்று தந்தையின் தொழிலை பிரகடனப்படுதுவார். பல நேரங்களில் ஒரு சீன சின் சே கைவசம் இருந்தது உபயோகமானதாகவே இருந்தது. 13.5.1980ல் எடுத்த படம் இது.

 1978ல் நான் முதன் முதலில் வேலைக்கு சென்றபோது என்னுடன் அலுவலகத்தில் இருந்தோரில் முக்கியமான இருவர். ஹியு சே ஹொங் & இஸ்மையில் காமிட். புகைப்படம் எடுத்த தேதி: 26.1.1979

வேலை செய்யும் எல்லா இடங்களிலும் சில காமிடியன் கள் இருப்பார்கள். எங்களுக்கு வாய்த்த காமிடியன் கள் இவர்கள். மஸ்ரிட் மஸ்சோட் & அஹ்மாட் டான் ஸீஸீ. ஸீரியஸாக வேலை பார்த்துக்கொண்டிருப்பது, இஸ்மையில் காமிட்.

Saturday, 24 December 2011

இன்று எம்ஜிஆர் நினைவு நாள்...


பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும், ஏழை எளியோருக்கு உதவிகளும், ஆங்காங்கே ரத்த தானங்களும், அவர் பெயரால் மற்ற நல்லெண்ண நிகழ்வுகளும் நடைபெறுவது அவரது நல்ல உள்ளத்துக்கு மக்கள் காட்டும் அன்பின் அடையாளமாக போய்விட்டது. காலமாகி பல வருடங்கள் போனாலும்,  நம்மிடையே இன்றும் இருப்பது போன்ற உணர்வை மக்கள் ஒரு சிலருக்கே வழங்கி இருக்கின்றனர். அவர்களுள் ஒருவராக மக்கள் திலகம் திகழ்கிறார்.

எஸ்ட்ரோ எம்ஜிஆரின் "பெரிய இடத்துப் பெண்", "நம் நாடு" மற்றும் "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படங்களினை காண்பித்து அவரின் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றாலும் தமிழ் நேசன் நாளிதழில் அவரைப்பற்றிய நினைவுகளை படித்துக்கொண்டு சிறு வயதில் அவரின் படங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை மனதுக்குள் அசைபோடுவது பசுமையான ஒன்றாக இருந்தது எனக்கு.

எஸ்டேட்டின் பின்னனியில் வாழ்க்கையை தொடங்கியவன் நான். அறுபதாம் ஆண்டுகள் அவை. பந்து விளையாடும் திடலில் திரையினைக் கட்டி, புரொஜெக்டர்கள் மூலமாக தமிழ்ப் படங்களைக் காண்பித்து வந்த காலம் அது. அப்போது மக்களின் மாபெரும் ஹீரோவாக திகழ்ந்தவர் எம்ஜிஆர்.

சீனர், மலாய்க்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவராலும் ரசிக்கப்பட்டவர். அதன் தாக்கம் இன்றளவும் நம் மலேசிய நாட்டில் உண்டு. அதற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு இன்றைய மலாக்கா மாநில முதல்வர்.

மற்ற இனத்தவர்களில் ஒரு சிலருக்கே நமது தமிழ் நடிகர்களைத் தெரிகிறது. அதிலும் கமல், ரஜினியத் தவிற வேறு யாரையும் அவர்கள் கண்டுகொண்டதாக இல்லை.
எம்ஜிஆரை அன்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

Sunday, 18 December 2011

ஆடுகள் பலியிடப்படுவது தொடர்கிறது. . .

"இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், பூஜைகள்  செய்வதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும், நடப்பதும் போன்றே அவையும் உண்மையான செயல்கள் " என மகாத்மா காந்தியடிகள் சொல்லியிருப்பது நமக்குத் தெரிந்ததே...

இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்கப்போவதில்லை. ஆனால், அவை என்ன மாதிரியான வேண்டுதல்கள், எவ்வகை பூஜைகள், எப்படிப்பட்ட பிரார்த்தனைகள் என்பதில்தான் பலருக்கும் குழப்பம்.

பெரிய கோயில்களில் இப்போது சைவ உணவே பரிமாறப்படுவதைப் பார்க்கும் போது நாம் அந்த ஒன்றில் மட்டும் தெளிவுடன் இருக்கிறோம் என்று  நினைத்தோம். ஆனால், அதே நேரம், வாரத்துக்கு ஐம்பது, நூறு என ஆடுகள் சிறு தெய்வ வழிபாட்டுக்காக  பலியிடப்படுவதும் இன்னும் நம் நாட்டில் தொடர்கிறது என்பது வருத்தத்தைத் தருகிறது.

அவர்கள் சொல்லும் காரணங்கள் பல மாதிரியாக இருந்தாலும், மக்கள் இன்னும் மாறவில்லை என்றே படுகிறது.

Friday, 9 December 2011

எண்ணங்கள் ஆயிரம்...6

நண்பர்கள் பலவிதம்.

நமக்குத்தெரியாத ஒன்றல்ல இது.

நல்லது கெட்டது என சீர்தூக்கிப்பார்த்த பின்னே அவர்களுடன் நாம் தொடர்ந்து நட்பாக பழகிவருகிறோம்.

ஆயினும் நெடு நாள் நட்புகூட சில நேரங்களில் நமக்கொரு மனச்சுமையாக மாறிவிடுகிறது. நண்பர்கள் பகைவர்கள் ஆகிறார்கள்.

யாருக்கு யாரும் சளைத்தவர் அல்ல என்பது போல மாற்றி மாற்றி குற்றங்களையும் குறைகளையும் கூறிக்கொள்வர்.  இது சகஜமாக நடைமுறையில் உள்ள ஒன்றுதான்.

இப்படி கசந்துபோகும் நட்புக்கு உண்மையில் யார் அல்லது எது காரணம்?

" நாம் எவ்வளவு செய்கிறோம் எப்படி அன்பாக நடந்துகொள்கிறோம். இப்படி நேர்மையாக நாம் பழகும்போது அவர்கள் நம்மைப்போல நடந்துகொள்ளவில்லையே என்னும் அதிக எதிர்ப்பார்ப்பின் காரணமோ என்னவோ...?"

 நட்பு என்பது ஒரு இருவழிப்பாதை. கொடுக்கல் வாங்கல் என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சுமூகமான குடும்ப சூழ் நிலையில் ஒருவருக்கொருவர் எந்த லாபமும் பார்க்காமல் பழகுவதிலும் இருக்கவேண்டும். 

நட்பின் நற்பண்புகளை பொதுவில் வைத்து அதன்படி இருவரும் நடக்கவேண்டும். சாலை போக்குவரத்தில் மட்டுமல்ல, நட்பிலும் சட்ட திட்டங்கள் உண்டு.அந்த  சட்ட திட்டங்களின் படி நடந்து கொண்டால் நல்ல நட்பு நீடித்திருக்கும்.

நேரத்தைப் போலவே ஒருமுறை நமது நல்ல நண்பர்களை இழந்துவிட்டோமானால், அவர்களை மீண்டும் திரும்பப்பெற முடியாது. திரும்ப வந்தாலும் அந்த உறவு சிறக்காது. பேங்கில் கறுப்புப் புள்ளி பட்டியலில் நமது பெயர் இருப்பதுபோல மனதில் என்றென்றும் இருந்து சுதந்திரமாக செயல் பட விடாது.

நாம் இழந்துவிட்ட நல்ல நட்பு, திரைப்படங்களில் வருவது போல, வாழ்வின் அந்திம காலத்தில் எட்டி நின்று கவலைப்பட வைக்கும்.

என்றோ  நமக்கு நல்ல நண்பராக திகழ்ந்த ஒருவரின் கடைசி நிமிடத்தில், அவரின் மூச்சு நிற்கும் தருவாயில் ண்கள் பணித்து, இதயம் கனக்க நம்மை தீரா சோகத்திற்கு இட்டுச்செல்லும்...

வேண்டாம்.... இப்படி நம் வாழ்வில் வேண்டாம்... நண்பர்களை நண்பர்களாக நடத்துவோம்.

ING மெடிக்கல் கார்ட் சொல்வது போல, தேவையின் போது ஓடி வந்து உதவும் உற்ற துணையாக நாம் இருப்போம்.

மலேசியாவின் சிறந்த ஹைவே ரோடுகளைப்போல நாமும் இருபக்க நல்லுணர்வுகளை பேணிக்காத்துச் சிறப்புடன் வாழ்வோம்.

Thursday, 8 December 2011

எண்ணங்கள் ஆயிரம்...5 தியாகு

என் திருமணத்திற்கு முன்னரே தியாகு எனக்கு ஒரு நல்ல நண்பர். பலருக்கு தெரியாத உண்மை இது.

1983 முதல் 1987 வரை நாங்கள் நண்பர்கள்தான். 1987ல் குடும்பத்தினர் ஏற்பாட்டில் அவரது சகோதரியுடனான திருமணம் நடந்தது.

அதற்கு முன்னும் பின்னும் பல இனிய நினைவுகள் எங்களுக்குள் உண்டு. இரட்டை வேட படமெடுப்பதில் நாங்கள் தலையை சொரிந்து குழம்பியது பல நாட்கள்.

அவரின் பரிசாக வந்த அந்த நைக்கோன் FX ரக கேமரா மூலமே எங்களின் "டபுள்ஸ்: எண்ணம் வியாபார ரீதியில் வெற்றிபெற்றது...






ஆங்கிலத்திலே ஒன்னு சொல்லுவாங்க....ஒவ்வொரு வெற்றிபெற்ற ஆண்மகனுக்கு பின்னும் ஒரு பெண்மணி உண்டு என.... இங்கே தியாகுவும் அவருக்கு பின்னே அவர் மனைவி ராஜியும் இருக்காங்க....

ஒரு சிறப்பு என்னன்னா..."அத்தான்" சொல்றதுக்கு அப்படியே நல்லா "ஜால்ரா" போடுவாங்க இவங்க. அப்புறம் எப்படி குடும்பத்திலே குழப்பம் வரும்...???

போட்டோவிலேகூட பாருங்க, அவருக்கு பின்னாலேதான் அவங்க நிக்கிறாங்க...   "தி பெஸ்ட் தம்பதி ஒப் தி இயர்" அப்படின்னு பட்டம் கொடுக்கலாம். தப்பே இல்ல... நகைச்சுவைக்காக மட்டுமல்ல, உண்மையும் அதுதான்....











இங்கே மேலும் கீழும் உள்ள இரு படங்களையும் 1987ல் க்ரியேட்டிவ் சிந்தனையுடன் எடுத்தோம்.




பழைய காலத்து ஆள் போலவே தோற்றமளிக்கிறேன், இல்ல...?
'நோ தாங்க்ஸ் டு தியாகு'. கொஞ்சம் மோடனாக கிராபிக்ஸ்ல யங்ஙா எடுத்திருக்கலாம்னு படுது....

ஆனால் நாங்கள் இருவரும் போட்டோ கடைகளில் உபயோகிக்கும் கிராபிக்ஸ் தொழில் நுற்பத்தை எங்கள் புகைப்படங்களில் அவ்வளவு காண்பிப்பது இல்லை...  வெவ்வேறு மாதிரியாக எடுத்து இணைப்போம். ஆவ்வளவுதான். அதனால்தான் எங்களுடைய படங்களும் காட்சிகளும் மற்றவற்றைவிட மாறுபடுகின்றன.

அட, அதெ விடுங்க...செஸ் விளையாட்டுல எப்படி சிந்திச்சி, கவனம் செலுத்தி விளையாடுகிறேன், பாருங்க....

அது சரி...ஒரு பக்கம் நான். அடுத்த பக்கம் யார் விளையாடுவது?
அடுத்த படத்தை பாருங்க தெரியும்....



போட்டோ எடுத்தது: தியாகு...