சற்றுமுன் தான் மோகனின் திருமணம் இனிதே நடந்தேறியது. அழகிய வேலைப்பாடுகளோடு மணவறை ஒருபுறம் இருக்க, சடங்கு சம்பிரதாயங்களும் வெகு விமர்சியையாக அரங்கேறிக்கொண்டிருந்தது. பல திருமணங்களில் பார்த்ததுதான் இதுவென்றாலும் இன்று ஏனோ இன்னும் பிரமாதமாக அமைந்தது போலிருந்தது...
மோகன் தனது சிறு வயதில் அண்டை வீட்டுக்காரரான என்னோடு ஆட்டம், பாட்டு, கும்மாளம் என அமர்களப்படுத்தியவர். வாலிப இளைஞனாக மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருக்க, அன்று ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்களின் தலைப்புப் பாடல்களை அவர் மனனம் செய்து பாடி எங்களை மகிழ்வித்தது நினைவிற்கு வந்தது.
இது இப்படி இருக்க, இந்த திருமணத்தில் விஷேஷமாக இன்னொன்றும் இருந்தது.
பல வருடங்களுக்குப் பின்னர் திருமண வைபமொன்றில் குழலோடு தபெல்லாவும் சித்தாரும் சேர்ந்து பழம் பாடல்களை தேனமுதமாக வந்திருந்தோருக்கு வழங்கி வசப்படுத்தியது நம் மோகனின் திருமணத்தில்தான் என்பது மனதுக்கு இதமளிக்கிறது.
"மாசில்லா உண்மைக்காதலே, மாறுமோ செல்வம் வந்த போதிலே"
"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"
போன்ற ரம்மியமான பாடல்கள் குழலிசையில் இளையோரையும் ரசிக்கவைத்தன.
இசையால் மயங்கா இதையம் உண்டோ...
அரங்கம் நிறைய வந்திருந்து புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர். அவர்களில், திருமதி ராஜ்பாவும் ( இடம் ) திருமதி செல்வமும் ( வலம் ) அடங்குவர்.
புதுமணத் தம்பதிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களும்...
"இன்றுபோல் என்றும் இனிதே வாழ்க..."
புதுமணத் தம்பதிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களும்...
"இன்றுபோல் என்றும் இனிதே வாழ்க..."
No comments:
Post a Comment