Wednesday, 9 November 2011

ஹெல்லோ ... எக்ஸ்க்யூஸ் மி பிளீஸ். . .


சென்னை பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சில நாட்களாக நாம் பார்த்து வருகிறோம்.  ஒரு சில பதிவுகளில் இன்னும் இருக்கும் மீத படங்களும் இடம் பெற்றுவிடும்.

என்னோடு நீங்களும் ரசித்துப் பார்க்கிறீர்கள் என்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களின் இனிய வார்த்தைகளுக்கு நன்றி.

இரட்டைவேடப் படங்களில் இனாமாக எடுப்பதை மட்டுமே இங்கே நாம் பார்க்கிறோம். தொழில் ரீதியாக எடுக்கும் படங்களை நான் இங்கே வெளியிடுவதில்லை. பணத்தை வாங்கிக்கொண்டு அதை பப்லிசிட்டி பண்ண எனக்கு ஆர்வம் இல்லை. அதோடு, தனி நபர் உணர்வுகளை மதிப்பது மிக முக்கியம் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்.

எனவே, உறவினர், நண்பர்கள் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் படங்களை மட்டும் ஒரு ஆர்வக் கோளாறு காரணமாக மற்றவர்களும் பார்த்து ரசிக்கட்டுமே என்று இங்கே வெளியிடுகிறேன்.

இங்கே வெளிவரும் படங்களைப்பார்த்தே பலர் இப்படி வித்தியாசமாக படம் எடுக்கப் பழகி வருகின்றனர் என்பது இன்னொரு காரணம். அவர்கள் ஆர்வத்தோடு எனக்கெழுதும் இனிய ஈமெயில்கள் எனக்கு பிடித்த ஒன்று.

தங்கள் வருகைக்கு நன்றி....முடிந்தால் நீங்களும் ஓரிரு வார்த்தை எழுதி அனுப்பலாமே எனக்கு...
rajpow2011@yahoo.com

No comments:

Post a Comment