Wednesday, 30 November 2011

வரவேண்டிய நேரத்தில் சரியா வரனுமில்லே...

காலை - 5.30
"பெண்ணைக் காணோம்,  பெண்ணைக் காணோம்..."

ஒரே பரபரப்பு அந்த அரங்கத்தில்.
 
எல்லோரும் காத்திருந்தனர். பிரம்ம முகூர்தத்தில் அதிகாலைக்  கல்யாணம் அது.

"என்ன பெண்ணைக் காணவில்லையா?" அவர்களோடு சேர்ந்து நானும்  பதற்றப்பட்டேன்.

" அப்படி இல்லைங்க...பெண் இன்னும் வரவில்லையாம் அரங்குக்கு. திருமணம் 4.30லிருந்து 6.00 வரை"

மனைவி விளக்கிட என் கை கடிகாரத்தை பார்த்தேன். காலை 5.30. இன்னும் அரை மணி நேரத்தில் நல்ல நேரம் முடிந்துவிடுமாம். எல்லோருடைய கவனமும் அதுதான் என்று புரிந்தது.

பெண்ணின் தகப்பனார் எனது இனிய நண்பர். அவரை நோக்கிச் சென்றேன்.

"என்னாச்சு...? நேரம் போய்கிட்டே இருக்கே...?"
   மெல்ல பேச்சுக்கொடுத்தேன்.

"கவலைப் படும்படி ஒன்னும் இல்லே ராஜ். சிகை அலங்காரத்துக்கு போன பெண் இப்போதான் வந்துகிட்டு இருக்கு. இதோ வந்திடும்..."
  என்று புன்னகைத்தார்.

"என்ன பிள்ளைங்க இவங்க...? சிகை அலங்காரத்துக்கும் முக அலங்காரத்துக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இவர்கள் தங்களது வாழ்வின் மிக மங்களகரமான முகூர்த்த நேரத்துக்கு தரவில்லயே? இப்போதே இயற்கைக்கு மாறாக நடந்து கொள்கிறார்களே, போகப் போக எப்படியோ? அக்னி வார்த்து, அருந்ததி பார்த்து, அம்மி மிதித்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்திருந்து வாழ்த்தி தொடரப்போகும் ஒரு பூர்வஜென்ம பந்தம், துவங்கும் போதே தத்தளிக்குதே... "

எங்களுக்கு முன் அமர்ந்திருந்த இரு பெரியவர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

என் மனைவியின் பக்கம் திரும்பி, " நேரத்தை மதிக்கும் பழக்கம் எவ்வளவு முக்கியம், பார்த்தியா?" என்று என்னுடைய இயல்பான நமட்டுச்சிரிப்பில் கிசுகிசுத்தேன்.   

"வயதான பெரியோர்களை மதித்தாவது சற்று விரைவில் வந்திருக்கனும்...இல்லே?" என்றார்.
 

( இழந்துவிட்ட நேரம் திரும்ப வருவதில்லை.... சரியான நேரத்தில் சரியானதைச் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுவோம். மிக முக்கியமாக பொது இடங்களிலும் பொது நிகழ்வுகளிலும் மற்றவர் நேரத்தை வீனடிப்பதை தவிர்ப்போம்.)


காலை - 9.30
 



"வரவேண்டிய நேரத்தில் வரவில்லையே, தம்பி?"  என்றேன்.
   
"வரும் நேரத்தில் பல அழைப்புகள் கைபேசியில். பேசி முடித்துப்  புறப்பட நேரம் ஆச்சு,  அண்ணே"  என்றார்.

அழைப்புக்கிடையில் எனக்கொரு  தகவல் தந்திருந்தால் உன்னை எதிர்பார்த்து வீனே நேரம் போயிருக்காதே...காக்க வைப்பது பாவமன்றோ?"  என்றேன்.
 
"சாரி" என்று சொல்லி காரணங்கள் பல சொன்னார்.
 
நீதிக்கு பரிகாரம் சட்டத்தில், பாவத்துக்கு பரிகாரம் தர்மத்தில்"  என்றேன்.
 
கண்களை இருக்க மூடி, "இனி மாட்டேன்..."  என்றார்.
 

( "தூங்காதே தம்பி தூங்காதே," என எம் ஜி ஆர் அன்று சொன்னதன் உண்மைப் பொருள் தூக்கத்தைப் பற்றி அல்ல. " நேரத்தை தொலைத்துவிட்டு முன்னேற்றத்தை இழந்திடாதே," என்பதுதான்.... )

Tuesday, 29 November 2011

The Lady of Shalott. . .

Tennyson's poem, John William Waterhouse (1849-1917)
"And at the closing of the day
She loosed the chain, and down she lay;
The broad stream bore her far away,
The Lady of Shalott.
Lying, robed in snowy white
That loosely flew to the left and right--
The leaves upon her falling light--
Thro' the noises of the night
She floated down to Camelot:"

Sunday, 27 November 2011

Kannan & Balan









"When there is no fun,
life becomes a burden. . ."
- rajpow nov 2011

Mohan Malayalam's Wedding


சற்றுமுன் தான்  மோகனின் திருமணம் இனிதே நடந்தேறியது. அழகிய வேலைப்பாடுகளோடு மணவறை ஒருபுறம் இருக்க, சடங்கு சம்பிரதாயங்களும் வெகு விமர்சியையாக அரங்கேறிக்கொண்டிருந்தது. பல திருமணங்களில் பார்த்ததுதான் இதுவென்றாலும் இன்று ஏனோ இன்னும் பிரமாதமாக அமைந்தது போலிருந்தது...


மோகன் தனது சிறு வயதில் அண்டை வீட்டுக்காரரான என்னோடு ஆட்டம், பாட்டு, கும்மாளம் என அமர்களப்படுத்தியவர். வாலிப இளைஞனாக மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருக்க, அன்று ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்களின் தலைப்புப் பாடல்களை அவர் மனனம் செய்து பாடி எங்களை மகிழ்வித்தது நினைவிற்கு வந்தது. 








இது இப்படி இருக்க, இந்த திருமணத்தில் விஷேஷமாக இன்னொன்றும் இருந்தது.
 மூன்று இசைக்கருவிகள் மூலம் பழைய பாடல்களை இசைத்துக்கொண்டிருந்தனர் மூவர். தாம் தூம் என அட்டகாசமில்லாத, மனதுக்கு இதமான என்றோ கேட்ட பழைய பாடல்கள் அவர்களின் கைவண்ணத்தில் மனதைக் கவர்ந்திழுத்து அவர்கள் பக்கமும் பார்க்க வைத்தது.
பல வருடங்களுக்குப் பின்னர் திருமண வைபமொன்றில் குழலோடு தபெல்லாவும் சித்தாரும் சேர்ந்து பழம் பாடல்களை தேனமுதமாக வந்திருந்தோருக்கு வழங்கி வசப்படுத்தியது நம் மோகனின் திருமணத்தில்தான் என்பது மனதுக்கு இதமளிக்கிறது.


"மாசில்லா உண்மைக்காதலே, மாறுமோ செல்வம் வந்த போதிலே"
"வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்"
போன்ற ரம்மியமான பாடல்கள் குழலிசையில் இளையோரையும் ரசிக்கவைத்தன.
இசையால் மயங்கா இதையம் உண்டோ...



அரங்கம் நிறைய வந்திருந்து புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர். அவர்களில், திருமதி ராஜ்பாவும் ( இடம் ) திருமதி செல்வமும் ( வலம் ) அடங்குவர்.

புதுமணத் தம்பதிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களும்...

"இன்றுபோல் என்றும் இனிதே வாழ்க..."