Sunday, 4 September 2016

சினிமா எடுத்துப் பார் by நவீனன்

நான் பார்த்து, ரசித்து, பாராட்டி, விமர்சித்த சினிமாவுக்குப் பின்பக்கம் இருந்த முயற்சி, உழைப்பு, மகிழ்ச்சி இப்படி பலவிதமான அனுபவங்களைஎன் மூலம் இந்தத் தொடர் வழியே நீங்களும் பெறப் போகிறீர்கள். வாருங்கள்தொடர்வோம்
என் இளமைப் பருவத்திலேயே சினிமாவின் மீது ஒரு விதமான பாசம் படர ஆரம்பித்துவிட்டது. பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி முடித்தேன். மேற்கொண்டு என்னை வீட்டினர் பி. படிக்க வைக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டார்கள்.
அவர்கள் தங்கள் ஆசையை என்னிடம் சொல்லும்போதெல்லாம்அந்தப் பட்டப் படிப்பெல்லாம் ரெண்டே ரெண்டு எழுத்து தான். இப்போ நான் படிச்சிருக்கிறது எஸ்.எஸ்.எல்.சி. இது நாலு எழுத்து. நான் சினிமா எடுத்து அப்புறமா ஏகப்பட்ட பட்டம் வாங்கிக்கிறேன்அதுதான் என்னோட ஆசைஎன்று கூறிவிட்டு ஓடிவிடுவேன்.
‘‘டேய் ஒவ்வொருத்தரும் என்ன ஆக ணும்னு ஆசைப்படறீங்கன்னு வகுப் பறையில் வாத்தியார் கேட்கும்போது, சக மாணவர்கள் ஒவ்வொருத்தரும்மருத்துவர், கலெக்டர், இன்ஜினீயர்…’ என்று தங்களின் எதிர்கால ஆசையை சொல்வார்கள். நான் எழுந்துசினிமா எடுக்கப் போகிறேன்…’ என்று உரக்கக் கத்துவேன். வாத்தியாரும் சக மாணவர் களும் என்னை வித்தியாசமாக பார்ப் பார்கள்.
சினிமா உலகத்துக்குள் நுழைய வேண்டும் என்கிற ஆசை விதையை, என் மனசைக் கீறி ஊன்றியதுஅந்த நாட்களில் எங்கள் ஊரில் நடைபெற்ற நாடகங்கள்தான். காரைக்குடி பகுதி களில் அப்போது தொடர்ச்சியாக நாடகங் கள் நடந்துகொண்டே இருக்கும். குறிப் பாக, டி.கே.எஸ். சகோதரர்கள் எங்கள் பகுதியில் மூன்று, நான்கு மாதங்கள் தங்கியிருந்து பிரமாதமான நாடகங்களை நடத்துவார்கள். நாடகம் என்றால் சாப்பாடு கூட எனக்குத் தேவைப்படாது.
திசையெங்கும் புராண நாடகங்கள் மட்டுமே கொடிகட்டிப் பறந்த அந்தக் காலகட்டத்தில், டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடக கம்பெனி சமூக நாடகங்களை நடத்தினார்கள். ‘பில்ஹனன், ‘மனிதன்இன்னும் பெயர் நினைவில்லாத பல நாடகங்களை அந்த நாட்களில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
என்னைப் போன்ற பல இளைஞர் களை அந்த நேரத்தில் சினிமா மீது மோகம் ஏற்பட வைத்த படம்பராசக்தி’. கருணாநிதியின் வசனமும், சிவாஜிகணே சனின் நடிப்பும் வெள்ளித்திரை மீதான என் கனவுக்கு வண்ணமடித்து மேலும் மேலும் சிறகடிக்க வைத்தது.
பையனுக்கு மேல்படிப்பு மீது ஆர்வம் இல்லை. சினிமா ஆசையோடு திரிகிறான்…’ என்று என் தந்தை, கவியரசு கண்ணதாசனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்த அந்த நாள்இன்றைக்கும் என் மனதில் பச்சை யத்தை இழக்காமல் பசுமையாக நிற்கிறது. ‘என்னடா இவன் சினிமா கினிமா என்று சுத்துகிட்டிருக்கானேஎன்று, அருகில் இருந்த அழகப்பா கல்லூரியில் படிக்கச் சொல்லி சேர்த்து விட்டுவிடுவாரோ என்று பதற்றத்தோடு நான் திரிந்த நேரத்தில், கண்ணதாசனிடம் அழைத்துப் போய் இப்படி ஒரு வார்த்தையை சொன்னால் உள்ளுக்குள் கொஞ்சமா மகிழ்ச்சி இருக்கும்!
என் தந்தையும் கண்ணதாசனும் நண்பர்களாக அறிமுகமாகி நட்புடன் பழகிவந்தாலும், ஒரு காலகட்டத்தில் இன் பம், துன்பம், குடும்பம் என்று எல்லா வற்றையும் பகிர்ந்துகொள்கிற மிக நெருங்கிய உறவினர்களாகவே மாறியவர்கள்.
‘‘இப்போதானே படிப்பை முடிச்சிருக் கான். நான்தென்றல்னு ஒரு பத்திரிகை ஆரம்பிக்கப் போறேன். அதில் கொஞ்ச நாள் வேலை செய்யட்டும். போகப் போக மத்ததையெல்லாம் பார்த்துக்கலாம்என்று கவிஞர் சொன்னபோது, அப்பா எதுவும் மறுத்துப் பேசவில்லை.
வீட்டிலேயே சாப்பாடு போட்டு, தங்க இடமும் கொடுத்து, வேலையும் கொடுத்தார் கண்ணதாசன். சினிமா பற்றிய மத்தாப்பூ கனவுகளை சுமந்த அந்த வயதில் அழகான ஓர் அனுபவம் அது.
1954-ம் ஆண்டுவாக்கில்தென்றல்பத்திரிகை வேலைக்காகத்தான் முதன் முதலில் சென்னைக்கு வந்தேன். ‘எல்லா வேலைகளையும் கற்றுக்கொள்..’ என்று கண்ணதாசன் பல பொறுப்புகளை என்னிடம் தந்துதென்றல்பத்திரிகை யின்ஆல் இன் ஒன்மனிதனாகவே என்னை மாற்றினார். போகும் எல்லா இடங்களிலும்இவன் என்னோட தம்பி. அலுவலகத்தைக் கவனிச்சிக்கிறான்என்று அன்பு ததும்பக் கூறுவார்.
இரண்டு ஆண்டுகள் அங்கே வேலை பார்த்தேன். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வேன். பொது வாக என்னிடம் ஒரு வேலை கொடுத்து விட்டால், அதை சரியாக இவன் முடித்துவிடுவான் என்கிற நம்பிக்கை கவியரசருக்கு வந்துவிட்டது. அவருக்கு என்னை ரொம்பவும் பிடித்துப்போயிற்று. தமிழும், கவிதையுமாகவே வாழ்ந்த கவியரசரின் ஆலோசனைகளைக் கேட்டு வளர்ந்த பிள்ளை என்பதில் எனக்கு எப்போதும் பெருமை!
இருந்தபோதிலும் எனக்குள் இருந்த சினிமா ஆர்வம் என்னை மற்ற வேலை களைத் தொடர்ந்து செய்யவிடுவதாக இல்லை. ‘சினிமாவுக்குப் போகிறேன்என்று ஒருநாள் கவியரசரிடம் சொன்ன போது என்னுடைய சுறுசுறுப்பு, உழைப்பு, என் மீதான பாசம் இவையெல்லாம், என்னை வெளியே அனுப்ப அவருக்கு விருப்பமில்லாமல் ஆக்கியது.
ஓர் இரவுநாடகம் சினிமாவாக உருமாறியது ஒரே இரவில். ‘கணக்குபிள்ளை வைத்து எழுதும் ஒரு சிறிய மேஜை, பேப்பர், வெத்திலை- பாக்குப் பெட்டிஇது போதும். காலையில் வாங்க…’ என்று சொல்லி ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த ஒரு குடிசை அறையில் அமர்ந்து, ஒரே இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடித்தார் அண்ணா.
இது நடப்பதற்கு முன்ஓர் இரவுநாடகத்தைத் திரைப்படமாக எடுக்க ஏவி.மெய்யப்ப செட்டியார், அறிஞர் அண்ணாவைச் சந்திக்கத் திட்ட மிட்டிருந்தார். அது தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் சந்திப்புகளில் என் தந்தை இராம.சுப்பையா, ஏவி.மெய்யப்ப செட்டியாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

சினிமா எடுக்க ஆசைப்படுறான். கண்ணதாசனிடம் ரெண்டு வருஷம் அவரோட பத்திரிகையில வேலை பார்த் திருக்கான்…’ என்று என்னுடைய அப்பா, மெய்யப்ப செட்டியாரிடம் கூறியபோது, ‘அடடே, பத்திரிகை அனுபவம் எல்லாம் இருக்கா. சினிமாவில் அடிப்படை விஷயமே எடிட்டிங்தான். பத்திரிகையில் எழுதும்போது, வடிவமைக்கும்போது எது தேவையோ, அதை மட்டும் வைத்து மற்ற வரிகளை எல்லாம் எடிட் செய்த அனுபவம் இருந்திருக்குமே. அந்த வேலை மாதிரி, இங்கே சினிமாவிலும் படம் பிடிக்கும் காட்சிகளை எல்லாம் கொண்டுவந்து ஒரு மேஜையின் மீது வைத்துதேவையானதை எடுத்துக் கோக்கும் வேலையை செய்வார்கள். அந்த அறையில் அமர்ந்து மேற்கொள்ளும் திட்டமிடல் அறிவு ஒரு நல்ல சினிமாக்காரனை உருவாக்கும். முதலில் நீ அதை கற்றுக்கொள்என்று எடிட்டிங் துறையைச் சேர்ந்தவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் ஏவி.மெய்யப்பச் செட்டியார்.




தாய்மொழிக்கு நிகரில்லை. ஆனாலும் ஆங்கிலம்...


நம்ம மொழிக்கு நிகர் நம்ம மொழிதான், அதற்கு ஈடான வேறொரு மொழி இல்லை. இது நாம் அனைவரும் ஏற்றுக் கொண்ட வாதங்களுக்கும்,, விவாதங்களுக்கும் அப்பாற்பட்ட உண்மை. 

ஆனாலும், நமது அரசாங்கம் ஏற்று நடத்தும் மன வள மேம்பாட்டு திட்டங்களில் வலியுறுத்தப் படும் முக்கிய கருத்து, நமது தாய்மொழிக்கடுத்து ஆங்கிலமும் முக்கியம் என்பதே. 

உலகளவிலான தொழில் நுணுக்கத்திலும் புத்தாக்கத் திறனிலும் நாம் மற்ற நாட்டினரோடு கலந்துறவாட ஆங்கிலம் இன்றியமையாத ஒன்றாகும். அதில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருப்போர் வெற்றிகளில் மிதக்கிறார்கள். இது ஒரு சிலருக்கே தெரிந்த, பலருக்கும் தெரியாத, பலராலும் அலட்சியம் செய்யப் படும் ஒரு உண்மை.

நம் நாட்டைப் பொறுத்தவரை, எழுபதுகளில் இருந்த ஆங்கில தரம், தற்போது இல்லை என பெரும்பாலோரின் கருத்தாக இருக்கிறது. இதற்கு நமதரசின், அவ்வப்போதான கல்விக் கொள்கையின் மாற்றங்களும் காரணமாக இருந்து வந்திருக்கிறது.

இடைநிலைப் பள்ளிகளின் போதனா மொழியாக இருந்த ஆங்கிலம் பின்பு மலாய் மொழிக்கு மாற்றம் கண்டபின் ஆங்கிலத்தின் சரிவு தொடங்கி விட்டது எனச் சொன்னால் அது மிகையாகாது.

19777 ம் ஆண்டு ஐந்தாம் படிவ தேர்வு மலாய் மொழியில் இருந்ததை நினைப்படுத்திப் பார்க்கிறேன். அப்போதே தொடங்கிவிட்டது ஆங்கில மொழியினை புறம் தள்ளும் நடவடிக்கைகள். காரணம், அதனைத் தொடர்ந்து வந்த அனைத்திலும் மலாய் மொழி முக்கிய இடத்தினை ஆக்கிரமிக்க, ஆங்கிலம் ஓரங்ககட்டப் பட்டது.

எனவே, இன்று நமது பட்டதாரிகள் ஆங்கிலத்தில் திறன் குன்றி இருக்கிறார்கள் என புலம்பும் அரசு அதிகாரிகள், அன்று பயிற்று மொழியாய் இருந்த ஆங்கிலத்தை மாற்றியது தான் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டால் சரிதான்.

இதனை வலியுறுத்திக் கூற மற்றொரு காரணமும் உண்டு. கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மாணவர்களை மட்டும் பாதிக்கவில்லை, ஆசிரியர்களையும் பெருமளவில் பாதித்து விட்டது. சான்றிதழ்கள் வைத்திருந்த, ஆங்கிலத்தில் சரளமில்லா ஆசிரியர்கள் கிராமங்களுக்கும், தோட்டப்புறங்களுக்கும் ஆங்கில போதகர்களாக பணியில் அமர்த்தப் பட, ஆங்கிலம் "கொட்டாவி'' விட ஆரம்பித்து விட்டது. தரமில்லாத ஆசிரியர்களிடமிருந்து தரமான மாணவர்கள் எங்கனம் வெளித்தெரிவார்கள்.

நமது தேசிய மொழி, மலாய். அதன் பயன்பாட்டை நாம் ஆதரிப்பது அவசியம். அதே வேளையில் அனைத்துலக வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு ஆங்கிலத்தின் தேவையையும் நாம் உணர்ந்திருக்க வேண்டும்.

பிறந்த குழந்தையின் சிந்தனை விரிவாக்கம் தாய்மொழியில் தொடங்குகிறது என்கிறார்கள். அது பிரத்தியேகமாக பளிச்சிடுவதற்கு பிற மொழிகளுக்கும் பங்குண்டு... அதிலும் ஆங்கிலம் உலக மொழி என்பதனால், அதனை வலியுறுத்துகிறோம் நாம்.

Friday, 12 August 2016

பழைய பாவங்கள், புதிய தண்டனைகள் 2 - பகுதி 1

கார் கிரீச்சிடும் ஓசை....

ஒரு சில வினாடிகளுக்குப் பிறகு, "டமால்..."

ஒரு பிஎம்டபுள்யூ ரக கார் முன்னால் சென்று கொண்டிருந்த காரை இடித்திட, அதனை செலுத்திவந்த அமலா செய்வதறியாது அப்படியே அமர்ந்திருந்தாள்.

இடிபட்ட வாகனத்திலிருந்து ஒரு இளைஞன் கீழிறங்கினான். தனது காரின் பின்னால் வந்து பார்த்து விட்டு, இடித்தது யார் என உற்று நோக்கினான். கார் பலமாக கருப்பு நிற வர்ணத்தில் யாரும் உள்ளே பார்க்க இயலா வண்ணம் இருந்தது. சற்று அருகில் சென்று காரின் கதவைத் திறந்தான்.
அங்கே, அமலா ஓட்டுனர் இருக்கையில் இருப்பதை பார்த்து,
'என்னமா இப்படி செய்யுறீங்களே மா ' எனும் தோரணையில் தனது கைகளை அசைத்து தனது காரின் அடிபட்ட பாகத்தை காட்டினான்.

அவளும் தனது கார் இருக்கையிலிருந்து கீழிறங்கினாள்.
''சாரி, நான் இடிக்கனும்னு இடிக்கல, இடையிலே ஒரு மோட்டார் சைக்கிள்... அதை தவிர்க்கப்போய் உங்கள்  காரை இடிக்கவேண்டியதாகி விட்டது..."

அவனின் அடிபட்ட கார் பகுதியை கண்டாள். அதை விட தனது பிஎம்டபுள்யூ ரக கார் எப்படி என்பதிலும் கவனம் சென்றது. அதை அவனும் கவனித்தான்.

" இதற்கு இப்போ என்ன சொல்றீங்க?" என்றான் சற்று குரலை உயர்த்தி.

" அதற்குத்தான் சாரி சொல்லிட்டேனே..."

"சாரி சொல்லிவிட்டால், சரியாகிடுமா?"

" என் தவறு தான். காருக்கு நஷ்ட்ட ஈடாக எவ்வளவு எனச் சொன்னால், தந்துடுவேன்" என்றபடி அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவள் கண்களில் அதிகாரம் தெரிந்தது. ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவள் இது போன்ற சாதாரண விபத்துக்கெல்லாம் அசைந்துவிடுவாளா என்ன.

"காருக்கு நஷ்ட்டயீடாக கொடுத்திடுவீங்க, விபத்தின் போது நேர்ந்த எனது மன அதிர்வுக்கும், மன உளைச்சலுக்கும் என்ன செய்யப் போறீங்க...?"
பணிந்து பேசுவதை விட்டு, 'உன் விலை என்ன சொல்..' என்பது போல அவள் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை.

" என்ன செய்யணும்...? உன்னை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கணுமா?"
அவனின் முரட்டுத் தனமான குரலுக்கு ஈடாக அமலாவும் தன்னிலை மறந்து பதிலளித்துவிட்டாள்.

ஆனால் மறுகணமே சுதாரித்துக் கொண்டு  'சே, அதிகம் பேசிவிட்டோமோ' என மனதில் பட்டது.

"ஆமாம்.... கட்டிப் பிடிச்சி ஒரு முத்தம் கொடு, விட்டுடுறேன்..." என்றான் அவன்.

தன் வார்த்தையை அவன் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான் என்பதை உணர்ந்து அவள் சற்று தடுமாறிப் போனாள். அதை தடுத்து நிறுத்த, கடுகடுப்பான அதே நிலையில்,
"டேய், உனக்கு என்னை யாருன்னு தெரியாது.... வேண்டாம், விட்டுடு, உனக்கு எவ்வளவு வேண்டுமோ சொல், தந்துடுறேன்...." என்றாள்.

இதற்கிடையே கூட்டம் கூடிவிட, இவர்களின் வாய்ச்சண்டையில் புன்னகை முகங்களாக தெரிந்தனர் அருகில் இருந்தோர்.

இது சரிப்பட்டு வராது. உடனடியாக இந்தப் பிரச்சினையை தீர்த்தாக வேண்டும், என சிந்தித்த படி  தனது விவேக கைபேசியில்  தனது மேனேஜரை தொடர்பு கொண்டாள். அவனின் கார் எண்ணைச் சொல்லி, "எவ்வளவு ஆகும்னு உடனே சொல்லுங்க" என உத்தரவிட்டாள்.

சில வினாடிகள் நகர்ந்தன....

கைபேசி ஒலிக்க, மறு முனையில் அவளின் மேனேஜர் ஏதோ பேசிக்கொண்டிருப்பது அவனுக்கும் லேசாக கேட்டது.

அவனிடம் திரும்பி,
" இங்க பார், இரண்டாயிரம் ரிங்கிட் தரேன். வாங்கிட்டு போ...."  என்றாள்.

" அதுதான் சொன்னேனே, காருக்கு நஷ்டயீடு கிடைச்சிடும்.... என்னுடை மன உளைச்சலுக்கு என்ன தீர்வு? கட்டிப் பிடிக்கிறியா, முத்தம் தரியா? " என்று மீண்டும் அவளை வம்புக்கிழுத்தான்.

" நீ அனாவசியாமா பேசுறே. போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணுவேன். ஜாக்கிரதை..."

"அட பாருடா... ''இவள் வந்து இடிப்பாளாம், போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணுவாளாம், நாம வேடிக்கைபார்த்தபடி கைகட்டி நிற்கணுமாம்....'' என்றவாறு அலட்சியமாய்ச் சிரித்தான்.

அவனின் காமிடி பேச்சைக் கேட்டு  சுற்றி இருந்தோர் கேலியாக தன்னைப் பார்ப்பதை உணர்ந்தாள். 'இவனிடமிருந்து எப்படி உடனே தன்னை விடுவித்துக் கொண்டு இவ்விடத்தை விட்டு அகல்வது' என அதிவேகத்தில் மனதில் ஓடியது.
"சரி இப்ப உனக்கு என்னதான் வேணும்...?"

இந்தச் சின்ன சின்ன விசயங்களுக்காக நேரத்தைக் கடத்திக்கொண்டு நடுத் தெருவில் முன் பின் தெரியாவனுடன் வாதிட தயாராயில்லை அவள்.

" இரண்டு விசயங்கள்..... ஒன்று, அடிபட்ட காரை நீயே உன் பொறுப்பில்  ஏதாவதொரு பட்டறைக்கு அனுப்பி வைத்து, அந்த பழுதுகள் முடிவடையும் வரை உடன் இருக்கணும். இரண்டு, உன் வாயிலிருந்து வந்தது போலவே, என்னைக் கட்டிப் பிடித்து ஒரு முத்தம் தரணும். அவ்வளவுதான், நாம சமாதானமா போயிடலாம்...."

அவளுக்கு ஜிவ்வென்று கண்கள் கோபத்தில் சிவந்தன....
மீண்டும் கைபேசியை எடுத்தாள்.... அவனுக்கு நேர் எதிர்பக்கம் திரும்பியபடி,
" மொத்த விலை எவ்வளோ சொன்னீங்க, சரி .. நான் செக் கொடுத்துடுறேன், நீங்க வந்து பார்த்துக்குங்க இதை " என தனது மேனேஜருக்கு  உத்தரவிட்டாள்.

' இங்க பாரு, உனக்கு ஐந்தாயிரம் வெள்ளி தரேன், வாங்கிட்டு போய் பழுது பார்த்துக்க"

" உன் பணம் எனக்கெதுக்கு. உன் தவற்றினால்  அடித்து நொறுக்கிய காரை நீயே சரி செய்து கொடுத்திடு.... அதுவரை நீ இங்குதான் இருக்கணும்...."

"டேய் என்ன புதுசா பேசுற, வேறு  எங்கும் இதுபோல விபத்துக்கள் நடக்காதது மாதிரி. அங்கெல்லாம் உன்னை மாதிரியா திமிரா பேசினாங்க?"

" யாருக்கு திமிர், உனக்கா எனக்கா?" அவனுக்கும்  கோபம் வந்தது.

" கடைசியா கேட்குறேன், உனக்கு என்னதான் வேணும்...?"

சுற்றி நின்றவர்களில் ஒருவன்,
"இங்க பாருங்க மேடம். ரிப்பேர் சுமார் இரண்டாயிரம் வரும். நீங்க சொன்னது போல ஐந்தாயிரமா அவருக்கு கொடுத்திடுங்க... நீங்க சும்மா பேசிக்கொண்டே இருந்தா காரியம் ஆகாது" என்று அழைக்காத நடுவரானார்.

அவள் உடனடியாக அவனுக்கு பணத்தை கொடுத்து பிரச்சினையில் இருந்து விடுவித்துக் கொள்ள எண்ணினாள். காருக்குச் சென்று தனது செக் புத்தகத்தில் 'ஐந்தாயிரம்' என தயார் செய்து, அவனுக்கு கொடுத்திட அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ, தனது காரில் ஏறி செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான்.

" ஏய் மிஸ்டர். இந்தா செக்...." என அவனை நோக்கி வேகமாக நடந்து வருவதற்குள், அவன் அங்கிருந்து சென்று கண்ணில் இருந்து மறைந்தான்....

'யார் இவன். அதிக பணம் கொடுத்தாலும்  வேண்டாம் என்று போய்விட்டானே....' அதிகாரத் தோரணையில் அவனுடன் பேசி இருந்தாலும், அவனின் ஒரு சில வார்த்தைகளில் தான் சினத்தில் சிக்குண்டதை எண்ணிப் பார்த்தாள். மற்றவர்களின் பார்வையில் தன்னை அவன் கேலிப் பொருளாக்கி நகர்ந்துவிட்டான் என்பது மட்டும் அவளின் அடி மனதில் பதியத் தொடங்கியது.

ஓட்டுனர் இருக்கையில் வந்தமர்ந்து காரை செலுத்தி,  தனது நிறுவனத்துக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கு  அவளின் வருகைக்காக மேனேஜர் காத்திருந்தார்.
" மேடம் உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?" என அக்கறையுடன் விசாரித்தார்.

அமலாவின் தந்தை காலத்தில் இருந்து அவர்களின் நிறுவனத்தில் மேலாளராக புரிந்து வந்தவர். தனது தந்தையின் மறைவுக்குப் பின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அமலா, இந்தப் பெரியவரையே தனது மேனேஜராகவும் தொடரச் சொல்லிவிட்டாள்.

" இல்ல ... எனக்கு ஒண்ணுமில்ல.... என் அறைக்கு வாங்க..."
என்றபடி அவருக்கு முன்னால் நடந்து சென்று தனது இருக்கையில் அமர்ந்தாள்.

" என்ன நடந்தது மேடம். ஏன் ஒரு சின்ன விபத்துக்கு இப்படி விசனப் படுறீங்க? அவன் ஏதும் முரட்டுத் தனமா நடந்து கொண்டானா....? நான் என்ன ஏதுன்னு விசாரிச்சு ஒரு தட்டு தட்டச் சொல்லவா?" என்றார் பெரியவர்.

" வேண்டாம்..வேண்டாம்... அப்படி ஒன்னும் நடக்கல"

"பிறகு என்னதான் நடந்தது...."

" ஒரு மோட்டார் சைக்கிள் குறுக்கே போனது. அதை தவிர்க்க நினைத்து வேறு பக்கம் ஸ்டியரிங்கை வளைத்தேன். எதிர்பாரா விதமாக முன்னால் சென்ற அவன் காரை மோதிவிட்டேன்.... என் தவறுதான். ஆனா அவன் ரொம்பவே பேசிவிட்டான்...." என்றாள் மீண்டுமொரு முறை நடந்ததை  நினைவுபடுத்திபடி....

" அப்படி என்ன பேசிவிட்டான், உங்களுக்கு கோபம் வரும்படி...?" என  பெரியவர் கேட்க,  சுய உணர்வுக்கு வந்தாள், அமலா....

உம்.. இவரிடம் எப்படிச் சொல்வது, அவன் கட்டிப்பிடித்து முத்தம் ஒன்றைக் கேட்டான் என்று....

" அது பரவாயில்ல. விடுங்க.... ஆனா, அவன் எந்த போலிஸ் நிலையத்திலாவது ரிப்போர்ட் செய்த்திருக்கானான்னு மட்டும் பார்த்துக்குங்க....  அடுத்த  24 மணி நேரம் நாமும் கவனமா இருக்கணும்."

சரியென தலையாட்டிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.

அவளும் அன்றைய வேலைகளில் மூழ்கத் தொடங்கினாள்.

வேலைகள் நகர்ந்தனவே தவிர, மனம் மீண்டும் அவனை சுற்றியே வலம் வந்தது. அதிக விலையில் காரின் உபரி பாகங்கள் விற்கப் படும் இக்காலத்தில், அவன் தான் கொடுக்க வந்த பணத்தை வாங்க மறுத்து அங்கிருந்து அகன்று விட்டது அமலாவை என்னவோ செய்தது.

அவன் ஒரு நடுத்தர வர்கத்து இளைஞனாகவே அவளுக்கு பட்டது. தூக்கலான தொனியில் தான் பேசியது அவனுக்கு எரிச்சலைத் தந்திருக்குமோ..... அல்லது போலிஸ் என நான் மிரட்டியதும் பயந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டானா? முகத்தையும் உருவத்தையும் பார்த்தால், அவன் கெட்டவனாக கற்பனை பண்ணிட முடியவில்லையே.

விபத்துக்களை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தா தீர்த்துக் கொள்கிறார்கள்.... இவன் மட்டும் ஏன் அப்படி சிந்திக்க வேண்டும்....?
இல்லை.... அது அவனாக உதிர்த்த சொல் அல்ல.... அவசரத்தில் நான் உளறியதை அவன் கையிலெடுத்துக் கொண்டான். அவ்வளவுதான்.....
பெயரையும் வசிக்கும் இடத்தையும் கேட்டிருக்கலாம். ஹூஹும் ... நமக்கெதற்கு அவன் பெயரும், வசிக்கும் இடமும்...??? மனது என்னென்னவோ சிந்திக்க, அவனின் குறு குறு பார்வையோடு, அந்த புன்னகையும் சேர்ந்து அவனை அழகாகவே காட்டியது.

கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு நினைவலைகளில் இருந்து திரும்பியவள்,
"யெஸ் , கம் இன்..." என்றாள்.

தனது நிறுவன பரிசோதனைக்கு   வந்திருந்த அரசாங்க அதிகாரிகளுடன் பேசி பணியில் கவனம் திரும்பிட மணி மதியம் இரண்டாகியது.

தனது மேனேஜரிடம் வந்திருப்போரை அருகில் இருக்கும் உணவகத்துக்கு அழைத்துச் சென்று  மதிய உணவு வாங்கித் தந்துவிடும் படி கேட்டுக் கொண்டாள்.
" நீங்களும் வாங்களேன், மேடம்...." பெரியவர் அவளையும் அழைத்தார்.

" இல்லை நீங்க போயிட்டு வாங்க ..." என மறுத்து விட்டாள் அமலா.
தான் கொண்டு வந்திருந்த சிற்றுண்டியை கொறித்துக் கொண்டே, பார்வை ஏதோ ஓரிடத்தில் பதிந்திட மீண்டும் கற்பனை உலகில் மிதக்கலானாள்.

'அவனிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்கிறதோ இல்லையோ... தான் ஒரு பணக்காரி எனும் தோற்றத்தை அவன் மதித்தது போல் இல்லையே. கார், உடை, பேசும் தோரணையில் என்னைப் பார்த்தபின்னுமா எனக்கு மரியாதை தர அவனுக்குத் தோன்றவில்லை....? எங்கே வேலை செய்கிறான். என்ன வேலை செய்கிறான்.... ' சிந்தனைகள் வட்டவட்டமாய் தலைக்கு மேல் அசையத் தொடங்கிவிட்டன...

'சே, அவனை இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தி இருக்கலாம்.... அவனுடன் இன்னும் கொஞ்சம் பொறுமையாக பேசி இருக்கலாம். அவன் கார் பழுதுகளை  நாமே செய்து தர ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கலாம்.'

ஆனாலும் அமலாவிற்கு ஆச்சரியமாகவே இருந்தது. வேறு யாரையும் இப்படி, இந்த அளவில் தான்  நினைத்துப் பார்த்ததில்லை என்பதே சற்று வித்தியாசமாகப் பட்டது.

மீண்டும் பணிகளில் தொடர்ந்திட எண்ணினாள். முடியவில்லை.

மதிய உணவுக்குப் போய் வந்தததும் மேனேஜரை அழைத்தாள்.
"அங்கிள், கொஞ்சம் என் ரூமுக்கு வரிங்களா...?"

பெரியவருக்கு ஆச்சரியம் மேலெழுந்தது.  தன்னை 'அங்கிள்' என அழைக்கிறாளே? அலுவலக நேரத்தில் 'மேனேஜர்' என்று தானே அழைப்பாள், வழக்கமாக... இன்று என்ன நடந்தது.... '

தாய் தந்தை இறந்ததும், அமலாவிற்கும், அவள் அண்ணனுக்கும் பெரியவர்தான் எல்லாம். இவர்களிருவரையும் வளர்த்து ஆளாகியதும் இவர்தான். ஆனால், வேலை நேரத்தில் பாசத்துக்கு இடமில்லை என்று கண்டிப்புடன் நடந்துகொள்வார். அதன் படியே அலுவலக நேரத்தில் மேனேஜராகவும், மற்ற நேரங்களில் அங்கிளாகவும் அழைக்கச் செய்துகொண்ட ஏற்பாடு. இப்போது தன்னை அங்கிள் என அழைத்திருக்கிறாளே.... உம், என்னவாக இருக்கும்????

'' மேடம் வரச்சொன்னீங்களா....?"
எனக் கேட்டபடியே அறையின் உள்ளே பிரவேசித்தார் மேனேஜர்.

" நான் இப்போ என்னோட மேனேஜரை வரச் சொல்லல, என்னோட அங்கிளைத்தான் வரச் சொன்னேன்".

புன்னகைத்தார் பெரியவர்....
" சரிமா ., இப்ப என்ன நடந்தது, ஏன் இப்படி டல்லா இருக்க?"

" அங்கிள், நீங்க எனக்கொரு உதவி செய்யணும்."

"சொல்லுமா.... இதை கேட்கணுமா ....?"

"இன்றைக்கு காலையில நான் ஒருத்தனை காரில் மோதிட்டேன் இல்ல, அவனுடைய பெயரும், முகவரியும் வேணும்...."

" அது ஏன் உனக்கு. அது ஒரு சாதாரண விபத்து. அதை அப்படியே விட்டுடுடனும்...." பெரியவரிடமிருந்து அறிவுரையாக வந்தது.

" இல்ல அங்கிள், அவன் காருக்கு சேதம் அதிகமாத்தான் இருக்கும். நீங்க சொன்னது போல பணம் கொடுக்க நினைத்தேன். ஆனா, அவன் என் பணத்துக்கு காத்திருக்கல. அங்கிருந்து போயிட்டான்.  எப்படியாவது அவனைப் பற்றி தெரிந்து வந்து சொல்லுங்க. அவனுக்கு சேரவேண்டியதை கொடுத்திடுறேன்....."

" அதுக்கு ஏனம்மா நீ போகனும், நானே பார்த்து செட்டில் பண்ணிடுறேன்."

" இல்லை அங்கிள். நீங்க அவனைப் பற்றிய தகவல் மட்டும் கொடுங்க, நான் பார்த்துக்கிறேன்."

அமலா, பெரியவரை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள். கொஞ்சம் கூச்சப் படுவது போல   பெரியவருக்கும் தெரிந்தது.

29 வயதில் இவள் நெளிகிறாளே.... ???? சில விசயங்களை தந்தை ஸ்தானத்தில் இருந்து கேட்கமுடிவதில்லை. இதற்கெல்லாம் தாய் தான் சரியானவர். ஆனால், இவளுக்கு இப்போது இரண்டும் நான் தானே. எப்படி கேட்பது ...? என மனதில் தோன்ற,
" ஏனம்மா அமலா, அவனைப் பற்றிய பிரச்சினையை நீயே தீர்த்துக் கொள்ள தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கா, நான் தெரிஞ்சிக்கலாமா? " என்றார்.

"அப்படி எதுவும் இல்லை அங்கிள். கேட்டதை மட்டும் கண்டு பிடிச்சு கொடுத்திடுங்க. போதும், ப்ளீஸ்..." என்று பெரியவரை பார்த்தாள்.

“உம்,  சரியென” சொல்லி தலையாட்டி விட்டு அறையில் இருந்து வெளியேறினார் பெரியவர். அவருக்கு தான் வளர்த்து ஆளாக்கிய செல்லப் பெண் எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளக் கூடாதே எனும் பயம் மட்டும் இருந்தது.

அடுத்த வாரம் தொடரும்.


Wednesday, 10 August 2016

புற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் திராட்சை விதைகள்...

திராட்சை விதைகளில் உள்ள சத்துகள், புற்றுநோய்க் கிருமிகளை விரட்டி நோயைக் கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை இவை பாதிக்காது என்பது கூடுதல்  சிறப்பு.
கொலராடோ பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையில் இணைந்து புற்றுநோய்க்கான தீர்வு குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதில்தான் திராட்சை விதையின் மகத்துவம் தெரியவந்துள்ளது.

ஆய்வு குறித்து ராஜேஷ் கூறியதாவது: உலகம் முழுவது புற்றுநோயால் பதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீர்வுக்கான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன. சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் , திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. பொதுவாக அனைத்து வகையான புற்றுநோயைக் கிருமிகளுமே மிக வேகமாக பரவக்கூடியவை.

இவற்றை கட்டுப்படுத்த கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் கிருமிகள் பன்மடங்கு பெருகி உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து உள்ளது. கீமோதெரபி உள்ளிட்ட முறையில் சிகிச்சை அளிக்கப்படும்போது நோய்க் கிருமிகள் மட்டுமின்றி ஆரோக்கியமான செல்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.

இந்நிலையில், திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோய் கிருமிகளை வேகமாக அழிப்பதுடன் ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் எந்தவித பாதிப்போ பக்க விளைவுகளோ இருக்காது என்று ராஜேஷ் கூறியுள்ளார்.