Saturday, 30 June 2012

தவற்றில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். . .


"மறைந்திருந்தும் பார்க்கவில்லை, இதில் ஒரு மர்மமும் இல்லை..."

'க்லோஸ் அப்' எடுப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்தபோது  நண்பர் ஒருவர் எடுத்தது இது. 'டிரையல் அன்ட் எரர்" எனும் தவறு செய்து அதில் இருந்து கற்றுக்கொள்ளுவதென்பது மனிதர் வாழ்வில் நிகழும் இயற்கையான ஒன்று.

ஆபத்து இல்லாத மிகச் சாதாரன சூழலில் இப்படி செய்யும் தவறுகளினால் பெரிய பாதிப்பாக எதுவும் நடந்துவிடுவதில்லை. ஆனால், இது எல்லாக் காலத்துக்கும்  இது பொருந்தாது. தவறே செய்ய முடியாத, செய்யக்கூடாத சந்தர்ப்ப சூழ்நிலைகளும் நம் வழ்வில் வரும். அங்கே.... அந்த நேரம்.. இப்படி "டிரையல் அன்ட் எரர்" மூலம் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செயதால் சில நேரங்களில் பாதிப்பு மலை அளவு பெரிதாகிவிடும்.

இப்போது பலரும் பாராட்டும் 'இரட்டை புகைப்படங்களை" எடுக்க நான் செய்த தப்புகளும் தவறுகளும் சில நூறு வெள்ளிகளை விழுங்கிவிட்டன. பல நாள் முயற்சிக்குப் பின் ஒரு நாள் மூளையில் உதித்த யுக்தியே பின்னர் பலரும் விரும்பும் புகைப்படங்களை எடுக்கச் சொல்லித்தந்தது. அதுவும் அன்றைய காலத்தில் கணினிகள் இல்லை.

Tuesday, 26 June 2012

பிடித்த நடிகர் திலகம் படங்கள். ..


நடிகர் திலகம் சிவாஜியின் அபாரமான நடிப்புக்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம். அவற்றில் எனக்குப் பிடித்தவை பல. மேலே உள்ள காட்சி 'வானம்பாடி' எனும் திரையில் உள்ளது. எதிர்பாராவிதமாக சொல்லக்கூடாத ஒரு ரகசியத்தை அவர் தன்னையறியாமல் சொல்லிவிட்டு உண்மை தெரிந்தவுடன் அது பற்றி எண்ணித்துடிக்கும் ஒரு காட்சி இது. நல்ல இனிமையான பாடல்களைக்கொண்ட படம் "வானம்பாடி".

Monday, 25 June 2012

அன்றும் இன்றும்...


Rajpow...combo pix...

அன்று என்னைத் தாலாட்டி தூங்கவைத்த பல பாடல்களுள் இதுவும் ஒன்று. இசையும் வார்த்தைகளும் கேட்போர் உள்ளத்தை கொள்ளையிட்டுச்சென்ற,  காலத்தால் அழிக்கமுடியாத பாடல் இது...

"தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு"

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி
நாம் காணும் சுகமென்று ஒன்று


(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று


(தூங்காத கண்ணென்று ஒன்று...)

அதே போன்ற இனிமையை தரும் பாடல்கள் இன்றும் ஒன்றிரண்டு வந்த வண்ணம் தான் இருக்கின்றன. அவற்றுள் என்னைக் கவர்ந்தது பின் வரும் பாடலாகும்...

"நிலவு தூங்கும் நேரம்
 நினைவு தூங்கிடாது
 இரவு தூங்கினாலும்
 உரவு தூங்கிடாது
 இது ஒரு தொடர்கதை
 தினம் தினம் வளர்பிறை
 நிலவு தூங்கும் நேரம்...."

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ… நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே


(நிலவு தூங்கும்…)

Sunday, 24 June 2012

Pow. . .


After mastering the art of taking "doubles" and "3D", I tried something new and different.
However  from the photo above I  know that it didnt work out well...

Never Understood Before...


விளம்பரதாரர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது...

Chess 3 - Hundred yrs of FIDE

coming soon...

Dengkil in photos. . .