Saturday, 5 November 2011

பெரியண்ணனுக்கு இரண்டு பிள்ளைகள்...


பெரியண்ணனுக்கு இரண்டு பிள்ளைகள்,
திவாகரனும் சங்கீதாவும். . .

தமிழில் பேசுவோம். . .

சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம் ...

எந்த ஒன்றிலும் புலமைத்துவம் பெற அதிலே ஒரு 'கொன்ஸ்டன் டச்' இருக்கனும்னு வாத்தியார்கள் சொல்லிக்கொடுத்தது இது.

செடிகளோடு தினமும் பேச அவை நிறைய பூக்குமாம், காய்க்குமாம். கோயில்களுக்கு தினமும் போக பக்தி வளருமாம் பெருகுமாம்.
உண்மையை பேச பேச நல்ல நண்பர்களும், நிறைய சிரிக்க சிரிக்க நல்ல ஆரோக்கியமும் பெருகும் என்பது பொதுவாக எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்று.

தினமும் தமிழில் பேசுவோம்...
நம் மொழி வளர நாம்  தமிழில் பேசினாலே போதும்.. . 
(அட, முதல்ல தமிழ்ல பேசுவோங்க...அதிலுள்ள வேற்று மொழி கலப்பை பின்னர் அகற்றிக்கொள்ளலாம்...)

Thursday, 3 November 2011

அடுத்த மாதம்...

இதற்கு முன் நான் எடுத்த பழைய புகைப்படங்களை மீண்டும் பார்க்க ஒரு சந்தர்ப்பம்.

இவ்வாண்டு இறுதியில் சற்று வித்தியாசமான பதிவில் கலகலப்பூட்டும், தேர்வு பெற்ற படங்களை பார்க்கவிருக்கிறோம்.

சில நகைச்சுவையாகவும், சில அன்று நடந்த சில சம்பவங்களை தன்னுள்ளே கொண்டதாகவும் இருக்கும்.

இப்போதைய நவீன டிஜிட்டல் கேமராக்களைப் போல் இல்லாமல், பிலிம் போட்டு எடுத்த அந்த காலத்து படங்களையும் ஸ்கேன் பண்ணி இங்கே ஒரு மாற்றத்துக்காக இடம்பெற செய்ய எண்ணுகிறேன்.

டிசம்பர் முதல் தேதியிலிருந்து.................

பதிவின் தலைப்பு :

 "எண்ணங்கள் ஆயிரம்..."

Wednesday, 2 November 2011

புத்ராஜெயாவில் மழை...




தமிழ் நாட்டுல பெய்யிற மழையை பார்த்ததும் இந்த படங்களின் பதிவுக்கு "புத்ரா ஜெயாவில் மழை"ன்னு தலைப்பு கொடுக்கலாம்னு நினைச்சேன்... ஆனா, என்றைக்கு  இங்கு மழை பெய்யல அப்படி ஒரு தலைப்பு வைக்க?  தினமும் மழை கொஞ்சமாவது வந்துதான் போகுது... மற்ற நாடுகளில் நடப்பதைப் போல தலைக்கு மேலே போகாமல் இருந்தால் சரி... 

நிஜத்தில் மழையும் ஒரு அழகுதான், அளவோடு இருந்தால்!!!


முன்பெல்லாம் மழைவந்தால் சட்டைப்பையில் உள்ளதை பத்திரப் படுத்த பக்கத்திலுள்ள ஏதாவதொரு இடத்தினுல் நுழைவேன். இப்போ நிலைமை கொஞ்சம் மாறிடுச்சி...சிறு தூற்றலானாலும் தலையைக்கையால் மூடியவண்ணம் ஓடவேண்டியதாகிவிட்டது... இருக்கின்ற சில முடிகள் சட்டைப்பையில் இருக்கும் எல்லாவற்றையும்விட முக்கியமானதாக போய்விட்டது...

ஹ்ம்ம் எல்லாவற்றுக்கும் ஒரு நேரமும் காலமும் உண்டு என்பது இதனால்தானோ?


"மனதிலிருப்பதைப் பேசுங்கள். அதைக் கேட்பதற்கு மழையைப் போல வேறு யாருமில்லை. நீங்கள் சொல்வதைக்கேட்க துளித்துளியாய் சரஞ்சரமாய் இறங்கிவரும் அதைப் புறக்கணிப்பானேன்? மௌனமும் பேச்சுத்தானென்று தெரிந்தோர் ரசிக்கின்றனர்."
- என்னைவிட பத்து மடங்கு மழையை ரசிக்கும் பல இனிய மனங்களின் கூற்று இது.... இணையத்தளத்தில் என்றோ படித்த ஞாபகம்.



அது சரி, நம்ம கவிஞர்கள் மழையைப் பற்றி எவ்வளவு பாடல்கள்தான் பாடி இருக்கிறார்கள்....?

சீரியஸாக ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு...?

ஜப்பான் ஏர்போர்ட் ரன்வேயில் விமானம்  இறங்குவதை விட வேகமாக வெள்ளம் சீறிப்பாய்ந்து இறங்கியதாம், இவ்வாண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட சுனாமியின் போது. 

ஒரு மழை பெய்யும் காரணமாக வெள்ளம் என்றால் நமக்கு நன்றாக தெரியும்... ஆனால் வானம் நன்றாக இருக்கும்போது பல ஏக்கர்  விமான நிலையம் திடீரென்று தண்ணீரில் முழ்குவது நமக்கு வியப்பை அளிக்கிறது.
யூடியூபில் இதுபோன்ற மனதைத்தொடும் பல காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். 

புத்ராஜெயாவில் கண்ணன். . .