Tuesday, 4 March 2014

ஜுக்ரா மலை...









பந்திங் நகரின் உயர்ந்த இடமாக சொல்லப்படுவது, ஜுக்ரா மலை. இங்கு செல்வோருக்கு பலவித இனிமையான அனுபவங்கள். அடித்தளத்தில் இருந்து நடந்து சென்றால் சுமார் 30 நிமிடங்கள் பிடிக்கிறது. பலரும் உடற்பயிற்சிக்காக நடந்தே சென்றாலும், வெளியூர் சுற்றுப்பயணிகள் நேராக தங்களின் வாகனங்களில் மலை மேலே சென்றடையவும் முடியும்.

இடையில் தெரியும் காட்சிகளை ரசித்தபடி பலரும் இந்த ஜுக்ரா மலைக்குச் சென்று அங்கிருந்து தெரியும் மலாக்கா நீரிணையின் அழகினை கண்டு களிக்கின்றனர்.

இப்படித்தான் ஒரு நாள், ஈப்போ நகரில் இருந்து  வந்திருந்த விருந்தினர் சிலரை அங்கு அழைத்துச் சென்றேன். அனைவரும் அங்கிருந்த காட்சியினை ரசித்தார்கள். கார்மேகத்தின் சுழற்சியில் வானம் அன்று ஒரு புதிய அழகில் தெரிந்தது... உடன் வந்த நண்பர், மகிழ்ச்சி வெள்ளத்தில் தனது புகைப்படக் கருவியில் தொடர்ந்து படங்களை எடுத்த வண்ணம் இருந்தார். " இது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு அழகு சார்.. அங்க பாருங்க அந்த மேகத் திரட்சியை... என்ன அழகு..." என ரம்மியமான அதன் அழகை ரசித்தபடி கவிதை எழுதவும் தொடங்கி விட்டார்....

இங்கு புகைப்படங்களில் இருப்பதைவிட பல மடங்கு அழகுடன் இருந்தது ஜுக்ரா மலையில் இருந்து நாங்கள் கண்ட அன்றைய காட்சிகள்...

No comments:

Post a Comment