Thursday, 17 October 2013

பாராட்டப் பழகுவோம்...

நல்லவர்களாக இருப்பதற்கும், தத்தம் கடமையைச் செய்வதற்கும் மற்றவரிடமிருந்து பாராட்டுக்களை எதிர்ப்பார்க்கிறார்கள் பலர்.

அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் அடிப்படை குணங்கள் இவை என அவர்கள்  உணராததால் இருக்குமோ  என்னவோ...? அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்  என்பதாவது தெரிந்திருக்குமா அல்லது அதுவும் இப்படி பிறர் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

இன்றைய உலக நிலை இதுபோன்ற பல எதிர்பார்ப்புக்களைக் கொண்டே இயங்குகிறது....

அட... நல்லதென்றால் பாராட்டித்தான் வைப்போமே... எதில் குறைந்துவிடப் போகிறோம்... நல்லது செய்யும் போது பாராட்டுவோர்தான், நல்லதல்லாததை சுட்டிக்காட்ட தகுதியானவர் எனும் நடைமுறை வழக்கமும் உண்டல்லவா?

பாராட்டப் பழகுவோம், அதனால் வரும் நன்மைகளுக்கு நாமும் ஒரு காரணமாவோம்...

No comments:

Post a Comment