"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..."
இது ஒரு திரைப்பட பாடல். இதில் உண்மை இருக்கிறதா? எங்களைக் கேட்டால் முழுக்க முழுக்க உண்மையே என்போம்.
திருமணம் என வந்துவிட்டால், பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்து செய்து வைப்பார்கள். அல்லது காதல் அது இது என எப்படியாவது தனது துணையை பார்த்து தெர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.
எங்களுக்குள் அப்படி எதுவுமே இல்லை.
ஒரே ஒரு தொலைபேசி உரையாடல், அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே, நாங்கள் இருவரும் இணைய காரணமாகிவிட்டது. இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அந்த தொலைபேசி உரையாடலில் நாங்கள் இருவருமே இல்லை.
அதன் பின்னர் வந்ததே அன்பும், பாசமும், காதலும். சுட்டுவிடும் சூரியனைப்போல கோபக்காரனான என்னை, சாந்தமான குளிர் நிலவாய் மாற்றியது என் மனைவியே. இதை 25 வருட திருமண வாழ்வுக்கு பின் சொல்வதில் எனக்குப் பெருமையே.
எங்களைப் போல் பல தம்பதிகள் இருக்கிறார்கள். விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மையோடு, புரிந்துணர்வும் இருக்கும் எல்லா தம்பதிகளும் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள்.

No comments:
Post a Comment