அன்மையில் நடந்த, நடந்துகொண்டிருக்கின்ற நம்மை திடுக்கிட வைக்கும் சம்பவங்களில் ஆலயங்களில் நுழைந்து கருவறை மூல தெய்வங்களின் சிலைகளை அகற்றி அதன் அடியில் வைக்கப்படுகின்ற நவரத்தினங்கள், தங்கம் மற்றும் தகடு போன்றவற்றை திருடும் சம்பவங்கள் முதலிடம் பெறுகின்றன.
மே மாத இறுதியில் இருந்து இது போன்ற திருட்டுகள் மிக அதிகமாக நடந்து வருவதை பார்க்கிறோம். அதிலும் ஒரு சில நாட்களுக்கு அல்லது ஒரு சில வாரங்களுக்கு முன் திருவிழா கண்ட பல கோயில்கள் களவு போயிருப்பது முக்கியமான ஒன்று.
சில்லறைத் திருடர்களாக இவர்கள் இருப்பார்களோ என எண்ணத் தோன்றினாலும், 'ஏதோ வந்ததுக்கு உண்டியை உடைப்போம்' என்கிற மாதிரி இவர்கள் நடந்து கொண்டிருக்கவில்லை. மூலதெய்வ விக்கிரங்களின் அடியில் இருக்கும் சக்தி வாய்ந்த தகடுகளையே இவர்கள் குறிவைத்து கோயில்களில் நுழைவது தெளிவாகிறது.
நாடு தழுவிய நிலையில் கோயில் நிர்வாகத்தினரின் புகார்கள் மூலம் பல இடங்களில் இப்படி நடந்திருப்பது நமக்கு தெரிய வருகிறது. இந்துக்களின் மனதை இது பெரிதும் பாதித்திருக்கிறது. திருடுபவர்கள் நாம் அதிக பயமும் பக்தியும் செலுத்தும் அந்த மூல தெய்வங்களை உடைத்து சேதப்படுத்திப் போவது மனவேதனையை அதிகப் படுத்துகிறது. ஏன், வயதானவர்களின் மனக்கவலையாகவும் ஆகிவிட்டது இப்போது எனலாம்.
இறைவனுக்கே இக்கதியா என பலர் ஆதங்கப்படுகின்றனர்.
'சாமி, உடனே வந்து இது போன்றவற்றை கண்டிக்க வேண்டாமா?" என ஆங்காங்கே கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தாலும், அப்படி உடனே கண்டிக்கவும் தண்டிக்கவும் இறைவன் 'இன்ஸ்டன் ஜஸ்டிஸ் ' அல்ல. பெரியவர்கள் சொல்லியது போல், சட்டம் ஏமாந்து போனாலும் போகலாம், ஆனால் தாமதம் ஆனாலும் தர்மம் நிச்சயம் நல்ல தீர்ப்பையே வழங்கும்'. உயிர் எடுக்கும் எமனுக்கே மெல்லப்போகும் எருமைதானே வாகனம். ஆக நிதானமான தர்மம் நம்முடையது என்பதை உணர்ந்து இறை நிந்தனையை தவிர்ப்போம்.
இதற்கிடையே, சாதாரணமானவர்களுக்கு தகடுகள் பற்றியும் ஐம்பொன்கள் பற்றியும் சரிவரத் தெரியாத நிலையில், இது போன்ற தீய நோக்கத்தில் நடைபெறும் செயல்கள் ஏதோ சிலரால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேறிவருவபைகளாகவே நமக்குப் படுகிறது.
ஒருவேளை, 'அறை எண் 305ல் கடவுள்' என்னும் திரைப்படத்தில் 'பிரகாஷ் ராஜ்' கையில் உள்ள கடவுளின் சக்தியாக, மூல தெய்வ விக்கிரகங்களின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் தகடுகள் களவாடுபவர்களின் கண்களுக்குத் தெரிகிறதோ....?

No comments:
Post a Comment