Wednesday, 29 February 2012

எண்ணங்கள் ஆயிரம்...


இரட்டை வேடங்களில் எனக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்த படம் இது. மேல் சட்டையை மாற்றி ஏதோ வேற்று நபர் போல முக பாவனைகளில் எடுத்த போட்டோ . எனக்குப் மிகவும் பிடித்த ஒன்று. படமெடுத்தது, தியாகு, எனது மைத்துனர்.


சரித்திரத்தை இன்றைய தலைமுறையினர் அவ்வளவாக தெரிந்துகொள்வதில் நாட்டம் காட்டுவதில்லை. அதனால்தானோ என்னவோ, மலேசியாவில் நம்முடைய உண்மையான பங்களிப்பு இன்னும் இலைமறை காயாகவே இருந்து வருகிறது. 1830ம் ஆண்டு தொடங்கி  இது நாள் வரை  இந்நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் நம்முடைய தியாகம் சரிவர உணரப்படவில்லை.

என்னுடைய தந்தையார் சொல்லித் தெரிந்தவை சில. சயாம் ரயில் வண்டிப்பாதை அமைக்க நம்மவர்கள் சென்று திரும்பி வராதோர் எண்ணிக்கை அதிகம் என அடிக்கடி சொல்லுவார். மரண பயம் என்றால் அது அன்றைய ஜப்பானியர் ஆட்ச்சி காலத்தில் தான் என்பார். 

அவர்களை அடக்க பிரிட்டிஷாரால் கொண்டுவரப்பட்ட இந்திய ரானுவம் மோரிப் கடற்கடரையில் வந்திறங்கிய ஞாபகச் சின்னம் இது.

No comments:

Post a Comment