Wednesday, 29 February 2012

ரோமுக்கு அப்பால்...


ஆயிரக்கணக்கிலான தரமான எழுத்தாளர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்மொழி.  தமிழில் மட்டுமல்லாது பிற மொழிகளில் உள்ள சிறந்த படைப்புக்களையும் அவர்கள் தங்களின் மொழி மாற்றுத்திறமையால் நமக்களித்துச் சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மட்டும் ஒலியேற்றப்பட்ட தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சிகளுக்கு மத்தியில, 1970ம் ஆண்டுகளின் துவக்கத்தில்  நான் படித்த ஒரு ஆங்கில நவீனத்தின் தமிழாக்கம்தான் இந்த "ரோமுக்கு அப்பால்".

'பிளின்ட்' அல்லது 'போண்ட் 007' போன்ற துப்பறியும் கதாநாயகனைப் போல படிக்கப் படிக்க சுவாரஸ்யமான ஒரு நாவல் இது.  படித்து முடிந்ததும் ஏதோ ஒரு நல்ல விறு விறுப்பான  ஆங்கில திரைப்படத்தினைப் பார்த்தது போன்று இருந்தது.

'லாமிட்டர்'  என்னும் அமெரிக்க கதாநாயகனின் சாகசங்களை திறம்பட வெளிப்படுத்தியிருந்தார் கதாசிரியர் ஹெலன் மாக் இன்னெஸ்.

இதை தமிழில் தந்தது, அன்றைய நாட்களில் துப்பறியும் தொடர்கதைகளுக்கும், மந்திர மாய பேய்க்கதைகளுக்கும் பெயர்பெற்ற "மாயாவி".  1958ல் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு 1959ல் தமிழில் "டப்" செய்யப்பட்ட தரமான எழுத்தோவியம்.

அச்சிட்டோர், " தி ராயல் பிரிண்டிங் வெர்க்ஸ். மவுண்ட் ரோடு, சென்னை 2.  400 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம் அன்றைய தினம் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது.

No comments:

Post a Comment