Tuesday, 6 October 2015

படித்ததில் பிடித்தது : வெங்காயம், உருளைக் கிழங்கு, தக்காளி

ஒரு ஊர்ல...
ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,
ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.
ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.

அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.
அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.
சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.

போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.
அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது.

தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, "உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.
இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு,
"ஓ..." ன்னு அழுதுச்சு.

அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.

(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய தெரியப்படுத்துங்க)

---------000------------------000---------------000----------------

மேலும் சிறிது காலங்களுக்கு பிறகு மக்கள் சுடு தண்ணீரில் வெங்காயத்தை போட்டு அழுகாமல் தப்பித்து வந்தனர். இதை பார்த்து வெங்காயத்துக்கு கோபம் வந்தது. கடவுளிடம் சென்று முறையிட்டது. கடவுள் கோபம் கொண்டு சாபம் இட்டார். இனிமேல் வெங்காயம் வாங்கும் போதே மக்கள் கண்ணீர் விடுவார்கள் . இது கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவிலும் இதர நாடுகளிலும் அமல் படுத்தப்பட்டு உள்ளது


படித்ததில் பிடித்தது: பாம்பும் குருவும்...

★ஒரு கிராமத்தில் ஒர் நாகபாம்பு இருந்தது. அந்த பாம்பு வழியிலே யாரையும் செல்லவிடாது..அங்கு சென்ற பலரை தீண்டி கொன்றது. கிராமத்தினர் அந்த வழியை உபயோகிக்கவே அஞ்சினர். ஒரு நாள் அந்த வழியாக ஒரு குரு வந்தார்.. அந்த வழியை அவர் கடக்க முற்பட்ட போது எல்லோரும் அவரை தடுத்தார்கள் ஆனாலும் அவர் போனார்.

★அவரை தீண்ட அந்த நாகம் வந்தது.. ஆனால் அவர் தன்மை நாகபாம்பையே அமைதியடைய செய்தது. அந்த நாகபாம்பிடம் குரு "ஏன் நாசம் செய்கிறாய், கொலையாளி ஆகி என்ன அடையப்போறாய், அதில் என்ன பயன்" என கூறி அதற்கு அமைதியை கற்றுக் கொடுத்தார்..அன்றில் இருந்து அந்த நாகம் அமைதி காக்க தொடங்கியது.!

★யாரையும் அதற்கு தீண்ட பிரியம் இல்லையென அறிந்த கிராம மக்கள் தைரியம் பெற்று அந்த நாகபாம்பை கல்லெறிவதும் குச்சி கொண்டு அடிப்பதுமாக துன்புறுத்தினார்கள். அது துன்பம் தாங்க முடியாது புற்றில் உணவின்றி ஒளிந்து இருந்தும் அதை கொடுமைப் படுத்தினார்கள்.

★ஒரு வருடத்துக்கு பின் அந்த குரு அந்த பக்கமாக வந்தார். பரவசத்தோடு அவர்பாதத்தில் வந்து பணிந்து நின்றது. அதன் உடலில் தழும்புகளை கண்ட குருக்கு எல்லாம் புரிந்து. "உனக்கு என்ன நடந்தது என்றார்..?" அது யார்மீதும் குற்றம் சுமத்தாத தன்மை அடைந்ததால் ,நான் சாப்பிடாமல் பலவீனமாகி விட்டேன்"என்றது.. அது மட்டுமல்ல உடலில் என்ன தழும்பு என கேட்டார். உள்ளூரில் இருப்பவர்கள் என்னை அடித்து சந்தோசம் அடைகிறார்கள் என்றது.

★உன்னை யாரையும் தீண்ட வேண்டாம் என்றுதான் சொன்னேன் சீறவேண்டாம் என்று சொல்லவே இல்லையே, சீறாமல் இருப்பதுதான் ஆன்மீகம் என்றல்ல, நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டாய். நீ சீற வேண்டிய நேரத்தில் சீறாவிட்டால் உன்னை பாம்பு என்பதையே மறந்து விடுவார்கள் என கூறி அன்போடு தடவி விட்டு போனார் குரு.

★ஆம். நாமும் இந்த உலகில் சிலசமயம் சீறவேண்டிதான் உள்ளது.. ஆனால் அதில் விருப்பு வெறுப்பற்ற தன்மையில் சீறவேண்டும் இல்லாவிட்டால் நாம் மனிதர் என்பதையே மறந்து விடுவார்கள் .!

ஜோக்குகள் பல விதம்...



வன்மையானது அழியும் . மென்மையானது வாழும்...

ஒரு குருவின் மரண தருவாயில், சிஷ்யர்கள் சிலர் அவரிடம் ''ஐயா நீங்க போகும் முன் எங்களுக்கு ஏதாவது சொல்லிவிட்டு போங்க'' என இறுதி நிமிட அறிவுரையை கேட்டார்களாம். அதற்கு குரு, சைகையில், தன் வாயை காட்டிவிட்டு இறந்துபோனாராம்
.
விடை தெரியா சிஷ்யர்களோ, சந்திக்கும் ஒவ்வொரு குருவிடமிடமும் இது பற்றி வினவ, பலருக்கும் அது பற்றி விளக்க தெரியவில்லையாம்.
சில காலத்துக்குப் பிறகு, மரத்தடியே தியானத்தில் இருந்த ஒரு முனிவரை கண்டவுடன் அவர் சுய நிலை வரும் வரை காத்திருந்து இது பற்றி கேட்க, 
''அந்த வயதில் இறக்கும் தருவாயில் இருந்த குருவின் வாய்க்குள் என்ன இருந்தது ?'
என முனிவர் கேட்டாராம்.
' நாக்கும் , உள் நாக்கும் இருந்தது ' என்றார்களாம் சிஷ்யர்கள்.
' பல் இருந்ததா ?' கேட்டார் முனிவர்.
' இல்லை ' என பதில் வந்தது.
''அதுதான் வாழ்க்கை . 'வன்மையானது அழியும் . மென்மையானது வாழும் ' என்பதனை உங்களுக்கு புரியவைக்கவே குரு அப்படி தன வாயை காட்டி இருக்கிறார்"
என முனிவர் விளக்கிட, அனைவரும் தங்களின் இது நாள் வரையிலான சந்தேகம் தீர்ந்தபடியால், தீர்த்து வைத்த மரத்தடி முனிவருக்கே சிஷ்யர்கள் ஆனார்களாம்.

வைல்ட் வைல்ட் வெஸ்ட் , தொலைக்காட்சித் தொடர்...

அவ்வப்போது கிடைக்கும் ஒய்வு நேரங்களில் வாசிப்பது மட்டும் எனது பொழுது போக்கல்ல. 1960களில் 1970களில் அன்றைய தொலைக்காட்சியில் இடம்பெற்ற புகழ் பெற்ற ஆங்கில தொடர்களை பார்ப்பதும் எனக்கு மிகவும் பிடித்ததாகும்.
007 ஜேம்ஸ் பாண்டுக்கு முன்னர், இந்த ஜேம்ஸ் வெஸ்ட் தான் அமெரிக்காவின் சிறந்த துப்பறியும் நிபுணராக இருந்தார் என்பது இன்றைய இளையோருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை.
1965 முதல் 1969 வரை தொலைக்காட்சியில் தொடர்ந்த இந்த நிகழ்ச்சி, வன்முறைக் காட்சிகளை தடை செய்யக்கோரும் அமெரிக்க அரசாங்க அரசியல் சட்ட திருத்தங்களால் 1970ல் தடை செய்யப்பட்டது.
ஆனாலும், சுவாரஸ்யமான கதைப் பின்னணியுடன், அக் ஷன் பிரியர்களுக்கு விருந்தாக அமைந்த இந்த துப்பறியும் தொடர், இப்போது யூ டியூப்பில் எளிதாக, இனாமாக கிடைக்கிறது.


இந்தியனின் மற்றுமொரு கண்டுபிடிப்பு...

எதை எதையோ, எத்தனை எத்தனையோ கண்டு பிடிப்புகளை நாம் பார்த்திருப்போம். இப்படி ஒரு கண்டுபிடிப்பும் ஒரு இந்தியனின் கண்டுபிடிப்புதான் என ஒரு குறிப்பு சொல்கிறது.
பலே ...பலே... நமக்கு தலை முழுவதும் மூளை அய்யா....


Monday, 28 September 2015

அமெரிக்காவில் ஒரு ஊரில்

அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........
அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..

1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....
இது தான் அந்த விதிமுறைகள்....

இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...

முதல் தளம் அறிக்கை பலகையில்,
>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".
இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
மேலும்
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்.
>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
மற்றும்
"வசீகரமானவர்கள்"

அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....

நாலாவது தளம் அறிக்கை பலகையில்,
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு
உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?

கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.
அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
"வேலை உள்ளவர்கள்"
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
மற்றும்
"மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..
சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..
அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....???

சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
*
*
*😎
*
*
*
*😎
*
*
*
*
*
*
*😎
*
*
*
*
*
*
*😎
*
*
*
*
*😎
*
*
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,
""இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம்,
பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்"".....
"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!

" கீழே படிகளில் இறங்கவும்".
என்று இருந்தது.